சுக்கிரன் நட்சத்திரப் பெயர்ச்சி: ராஜ வாழ்க்கை வாழப்போகும் 5 ராசிகள்.. உங்க ராசி இருக்கானு பாருங்க

Subscribe to Oneindia Tamil

சுக்கிரன் பெயர்ச்சி: சுக்கிர பகவான் உத்தர பாத்ரபாத நட்சத்திரத்திற்குப் பெயர்ச்சியாவதால் அனைத்து ராசிகளும் அதன் தாக்கத்தை பெறும். இருப்பினும், சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தையும், ராஜவாழ்க்கையையும் சுக்கிர பகவான் கொடுக்க போகிறார். எந்த ராசிக்காரர்கள் நற்பலன்களை அனுபவிக்கப் போகின்றனர் என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம்..

செல்வம், அழகு, செழிப்பு, பெயர், புகழ் போன்ற அனைத்து ஐஸ்வர்யங்கள், சுகபோகங்களுக்கும் அதிபதியானவனர் சுக்கிர பகவான். வேத ஜோதிடத்தின் படி சுக்கிரனின் அருள் கிடைக்கிறதோ அவர்களுக்கு பணத்திற்கும், ஐஸ்வர்யத்திற்கும் பஞ்சமிருக்காது. சுக்கிர பகவானின் நட்சத்திர மாற்றமானது மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிக்காரர்களுக்கும் சுப மற்றும் அசுப பலன்களை ஏற்படுத்தும்.

sukiran transit astrology

ஜனவரி 4, 17 ஆம் தேதிக்குப் பிறகு த்ரிக் பஞ்சாங்கத்தின் படி புத்தாண்டில் பிப்ரவரி 1 ஆம் தேதி சுக்கிரன் தனது நட்சத்திரத்தை மாற்றவுள்ளார். பிப்ரவரி 1 ஆம் தேதி காலை 8:37 மணிக்கு சுக்கிரன் உத்திர பாத்ரபதா நட்சத்திரத்தில் நுழைகிறார். உத்திர பாத்ரபதா நட்சத்திரமானது அதிர்ஷ்டத்தைக் குறிக்கும் நட்சத்திரமாகும்.

அந்த வகையில், சுக்கிரனின் இந்த அதிர்ஷ்ட நட்சத்திரத்தில் நுழைவதால் 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் பெருகும். அதிர்ஷ்டங்கள் உண்டாகும். இந்த நட்சத்திரப் பெயர்ச்சி 5 ராசிக்காரர்கள் ராஜ வாழ்க்கை வாழப் போகின்றனர். எந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டம் பெறப் போகின்றனர் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

துலாம்: சுக்கிரனின் நட்சத்திரப் பெயர்ச்சி துலாம் ராசிக்காரர்களுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கப் போகிறது. பண வரவு உண்டாகும். நிதி சார்ந்த விஷயங்களில் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியைக் காண்பீர்கள். செல்வம் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். மனதில் தோன்றுவதை எல்லாம் செய்வதை தவிர்க்க வேண்டும். நிதானமாக யோசித்து செயல்படுவது நல்லது. உத்தியோகம், தொழில், வியாபாரத்தில் நல்ல மாற்றத்தைக் காண்பீர்கள். லாபம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உண்டு. கணவன், மனைவிக்கிடையே அன்பு பெருகும். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். உங்களுடைய உறவு வலுப்படும்.

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் நட்சத்திரப் பெயர்ச்சி அதிர்ஷ்டத்தை உண்டாக்கும். சமூக சேவையில் ஆர்வம் அதிகரிக்கும். உங்களுடைய பேச்சு மற்றவர்களைக் கவரும் வகையில் அமையும். உங்கள் மனதுக்குப் பிடித்தவர்களின் ஆதரவு கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையேயான உறவு மேம்படும். மனம் தெளிவு பெறும். தேவையற்ற மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி பிறக்கும். சமுதாயத்தில் உங்களுடைய மதிப்பு, மரியாதை அதிகரிக்கும்.


ரிஷபம்: சுக்கிரனின் நட்சத்திரப் பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களை அள்ளித் தரும். இனி வரும் காலங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும். பொருளாதாரத்தில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வுக்கான வாய்ப்புகள் உண்டு. நீங்கள் எடுத்த காரியங்களில் திறம்பட செய்து முடித்து அதில் வெற்றி காண்பீர்கள். வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். மனதில் தெளிவு பிறக்கும். நீண்ட காலமாக செய்து முடிக்க முடியாத வேலைகளை செய்து முடிப்பீர்கள். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அடைவீர்கள்.

மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் நட்சத்திர மாற்றம் சாதகமான பலன்களைத் தரும். உடல் ஆரோக்கியம் மற்றும் மனதளவில் தைரியம் உண்டாகும். புதிய வேலைகளைச் செய்வதற்கான எண்ணங்கள் தோன்றும். பொருளாதாரத்தில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். கணவன், மனைவி இருவரும் சேர்ந்து பயணங்களைத் திட்டமிடுவீர்கள். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி மற்றும் அன்பு பெருகும்.

கும்பம்: சுக்கிரன் சனியின் நட்சத்திரமான உத்திர பாத்ரபதாத்தில் நுழைவதால் கும்ப ராசிக்காரர்கள் அதிர்ஷ்டமான பலன்களை அனுபவிப்பார்கள். அனைத்து விதமான சுகபோகங்களையும் அனுபவிப்பதற்கான சூழல் ஏற்படும். செல்வ செழிப்புடன் இருக்கும் காலமாக இருக்கும். பண வரவுக்கான வாய்ப்புகள் ஏற்படும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். பணம், சொத்து போன்றவை அதிகரிக்கும். குடும்ப உறவுகளின் ஆதரவு கிடைக்கும். உறவுகள் வலுப்பெறும். உங்கள் துணையுடன் அதிக நேரத்தை செலவிடுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். சமுதாயத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+