சுக்கிரன் பெயர்ச்சி 2025: யோகம் கொட்டப் போகுது.. மகரம் கும்பம் மீனம் ராசி பெறும் பலன்கள் என்ன?
சென்னை: சுக்கிரன் ஜனவரி 28 ஆம் தேதி தொடங்கி மே மாதம் இறுதி வரை சுமார் 120 நாட்களுக்கு உச்சமடைய போகிறார். சுக்கிரன் என்றாலே நேர்மறை சிந்தனையுடன் பலன்களை கொட்டித் தீர்க்கும் கிரகம். அதனால் சுக்கிரன் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். இந்த தொகுப்பில் மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கான சுக்கிரன் பெயர்ச்சி குறித்து பார்க்க போகிறோம்.
எப்போதும் உச்சமடையும் கிரகங்களுக்கு பலம் அதிகமாக இருக்கும். அதன் காரணமாக இந்த 120 நாட்களில் ஒன்பது கிரகங்களில் சுக்கிரன் பலமாக இருக்கும். ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொரு கிரகங்கள் உச்சமடையும். அதனால் சுக்கிரன் உச்சமடையும் நிகழ்வு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. பொருளாதாரம், காதல், சொகுசான வாழ்க்கை முறை ஆகிய அமைப்புகளுக்கு சுக்கிரன் தான் அதிபதி.

பொதுவாக சுக்கிரன் ஆண்டுக்கு 45 நாட்களுக்கு உச்சமடைவார். இந்தாண்டு ஜனவரி 28 ஆம் தேதி சுக்கிரன் மீனம் ராசியில் உச்சமடைகிறார். மே மாதம் இறுதி வரை 120 நாட்களுக்கு சுக்கிரன் உச்சத்தில் இருப்பார். ஜூன் மாதம் தொடக்கத்தில் சுக்கிரன் பெயர்ச்சி அடைந்துவிடுவார். இந்த காலகட்டத்தில் கலை மற்றும் விளையாட்டுத்துறை சிறப்பாக இருக்கும்.
சுக்கிரன் என்றாலே பாசிட்டிவ் கிரகம் தான். உச்சத்துக்கு ஒரு யோகம், பரிவர்த்தனைக்கு ஒரு யோகம், மாளவ்யா யோகம், மதனகோபால் யோகம், ராஜயோகம், லட்சுமி நாராயண யோகம் என்று ஒவ்வொரு ராசிக்கு ஒவ்வொரு யோகம் கிடைக்கும். அதனால் சுக்கிரன் உச்சம் என்பது ஏதாவது ஒரு வகையில் பலன்களை கொடுக்கும்.
மகரம் (Sukiran peyarchi for Magaram): மகரம் ராசிக்கு சுக்கிரன் மூன்றாம் இடத்தில் உச்சமடைய போகிறார். உங்கள் ராசிநாதன் சனியுடன் சுக்கிரன் ஒன்றாக பயணிக்கும் காலம் சிறப்பானதாக இருக்கும். சுக்கிரன் உச்சமடைவதால் உங்கள் தொழிலில் இருந்த தொய்வுகளை அகற்றி முன்னேற்றுத்துக்கு வழிவகுப்பார். பொருளாதாரத்தில் முன்னேற்றம் இருக்கும். பெயர், புகழ், அந்தஸ்து உயரும். அதிர்ஷ்டம் உங்கள் வீட்டு வாசலில் காத்திருக்கும்.
வாய்ப்புகள் அதிகம் வரும். திடீர் பயணங்களில் எதிர்பாராத பலன்கள் கிடைக்கும். லாட்டரியில் ஜேக்பாட் அடிப்பதற்கான சூழல் உள்ளது. கணவன் மனைவி, காதல் உறவு இனிமையாக இருக்கும். காதல் உறவு வெற்றிகரமாக திருமணத்தில் முடியும். பணியிட மாற்றம் இருக்கும். தைரியம் அதிகரிக்கும். கலை மற்றும் விளையாட்டு துறைகளிலும் புதிய உச்சம் தொடுவீர்கள்.
கும்பம் (Sukiran peyarchi for Kumabam): கும்பம் ராசிக்கு இரண்டாம் இடத்தில் சுக்கிரன் உச்சமடைய போகிறார். இரண்டாம் இடம் என்பது தனம், வாக்கு, குடும்பம் ஆகியவற்றுக்கு அதிபதி. குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் விலகும். கணவன் - மனைவி இடையே இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். சங்கடங்கள் நீங்கி உங்களுக்கு ஆதரவாக யாராவது குரல் கொடுப்பார்கள். நிதி நிலைமை சீராகும். எதிர்பாராத அதிர்ஷ்டத்தால் மகிழ்ச்சி கிடைக்கும்.
மனம் நிம்மதியாக இருக்கும். எதிர்பார்த்த மாற்றங்கள் நிச்சயம் உருவாகும். ஜென்ம சனியாக இருந்தாலும் தசா புத்தியால் சிலருக்கு திருமண வாய்ப்புகள் உருவாகும். வண்டி, வாகனம் மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. பயணங்கள் திருப்திகரமாக இருக்கும். லாட்டரி ஜேக்பாட்டால் பயனடைவதற்கான வாய்ப்புகளும் உள்ளது. சரியாக திட்டமிட்டு செய்யும் காரியங்களில் வெற்றி நிச்சயம் கிடைக்கும்.
மீனம் (Sukiran peyarchi for Meenam): சுக்கிரன் மீனம் ராசியில் தான் உச்சமடைகிறார். ஏழரை சனியால் விரயங்கள் அதிகரித்திருக்கும். செலவுகளை கட்டுப்படுத்த முடியவில்லை என்ற வருத்தத்தில் இருப்பீர்கள். உங்கள் ராசிநாதனான குருவுடன் சுக்கிரன் பரிவர்த்தனை செய்யும்போது சிந்தனைகள் அதிகரிக்கும். ஏதோ வகையில் உங்களின் தேவையை பூர்த்தி செய்யுமளவுக்கு வரவு இருக்கும். இது உங்களின் சிக்கல்களை ஈடுகட்டும்.
காதல் உறவு வெற்றிகரமாக மாறுவதற்கு வாய்ப்புள்ளது. நல்ல காரியங்கள் எதையும் முயற்சி செய்து பார்க்கலாம். வாகனம் மாற்றத்துக்கான வாய்ப்புகள் நன்றாக உள்ளது. உறவுகளுடனான மனஸ்தாபங்கள் நீங்கும். லாட்டரியிலும் எதிர்பாராத அதிர்ஷ்டம் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.
-
சிறகடிக்க ஆசை: விஜயா ஆட்டத்தை அடக்க வரும் புது மருமகள்.. சரியான பதிலடி கொடுத்த மீனா! சந்தோஷத்தில் மனோஜ் -
கேஸ் சிலிண்டர் புக்கிங்கில் 35 நாட்கள் இடைவெளி.. புதிய 5 ரூல்ஸ் தெரியுமா? மானியம் வரவில்லைனா உஷார் -
சவுதி அரேபியாவுக்கு வேட்டு வைக்கும் ஈரான்.. சூயஸ் கால்வாய்-க்கு செக்.. ஹாட்ஸ்பாட் ஆக மாறும் பாப் அல்-மண்டப்! -
தமிழக தேர்தல்.. எந்த கட்சிக்கு அரியணை ஏறும் வாய்ப்பு.. இதுவரை வந்த கருத்து கணிப்புகள்.. சொல்வது என்ன? -
கூட்டணி மாறியதால் தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் கொடுக்கலை! ஆனால் அது உண்மைதான்! எடப்பாடி பழனிசாமி -
நகைக்கடன் வைத்த 3 பேரில் ஒருவர் கவனிக்கலனா பிரச்சனை? RBI எச்சரிக்கை என்ன சொல்கிறது? -
எத்தனை வருட சோகம்.. எவ்வளவு டிரைவர்கள் ஏக்கம்.. முடிவிற்கு வரும் தொப்பூர் கணவாய் கொடூரம்.. எப்படி? -
ரூ.1 லட்சம் கோடி இழப்பை சந்தித்த அம்பானி குடும்பம்.. பங்குச் சந்தையில் என்ன நடந்தது? -
2005ல் பல்லாவரம் ரேடியல் சாலையில் 10 லட்சத்திற்கு இடம் வாங்கியிருந்தால் இன்று என்ன விலை தெரியுமா? -
பலரின் வேட்புமனு நிராகரிக்கப்படலாம்.. போச்சு விஜய் தவெகவிற்கு இருக்கும்... பெரிய சிக்கலே இதுதான்! -
நேரம் பார்த்து அடிக்கும் சவுதி அரேபியா.. இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அச்சம்? -
அரசு பேருந்தில்.. வழித்தட டிஸ்ப்ளேவில் 'தவெக' என ஓடியதால் ஷாக்! போக்குவரத்துக் கழகம் விளக்கம்












Click it and Unblock the Notifications