Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சுக்கிரன் பெயர்ச்சி 2025: அள்ளி கொடுக்கும் சுக்கிரன்.. துலாம், விருச்சிகம், தனுசு பெறும் பலன்கள்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜனவரி 28 ஆம் தேதி தொடங்கி மே மாதம் இறுதி வரை சுமார் 120 நாட்களுக்கு சுக்கிரன் மீனத்தில் உச்சமடைய போகிறார். பொதுவாக சுக்கிரன் உச்சடைவது அனைத்து ராசிகளுக்குமே ஏதாவது வகையில் ஒரு பயன் கிடைக்கும். இந்த தொகுப்பில் துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கான சுக்கிரன் பெயர்ச்சி குறித்து பார்க்க போகிறோம்.

பணவரவு, காதல், சொகுசான வாழ்க்கை முறை உள்ளிட்ட நிறைவான அமைப்புக்கு சுக்கிரன் தான் அதிபதி. பொதுவாக சுக்கிரன் ஆண்டுக்கு 45 நாட்களுக்கு உச்சமடைவார். அதுவும் 25 நாட்களுக்கும், 20 நாட்களுக்கும் என்று பிரிந்துதான் உச்சமடைவார். இந்தமுறை ஜனவரி 28 ஆம் தேதி சுக்கிரன் மீனம் ராசியில் உச்சமடைந்து சூரியனுடன் பரிவர்த்தனை செய்கிறார். மே மாதம் இறுதி வரை சுக்கிரன் உச்சத்தில் இருப்பார். ஜூன் மாதம் தொடக்கத்தில் சுக்கிரன் பெயர்ச்சி அடைந்துவிடுவார்.

sukiran peyarchi

சுக்கிரன் என்றாலே பாசிட்டிவ் கிரகம் தான். உச்சத்துக்கு ஒரு யோகம், பரிவர்த்தனைக்கு ஒரு யோகம், மாளவ்யா யோகம், புதனுடன் இணையும் போது மதனகோபால் யோகம், லட்சுமி நாராயண யோகம் என்று ஒவ்வொரு ராசிக்கு ஒவ்வொரு யோகம் கிடைக்கும். ராகுவுடன் எந்த கிரகம் சேர்ந்தாலும் அது பெரியளவுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்காது. ஆனால் உச்சமடைந்த சுக்கிரன் ராகுவுடன் சேரும்போது ஒரு யோகம் கிடைக்கும்.

துலாம் (Sukiran peyarchi for thulam): துலாம் ராசிக்கு அதிபதி சுக்கிரன். துலாமுக்கு ஆறாம் இடத்தில் சுக்கிரன் வரப்போகிறார். ஆறாம் இடம் என்பது போராட்டத்தை குறிக்கும். உங்களுக்கு கடுமையான போட்டி இருந்தாலும் அதில் போராடி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு உருவாகும். எட்டாம் இடத்தில் குரு மறைகிறார். இதுவும் ஒரு நல்ல யோகம் தான். குரு - சுக்கிரன் பரிவர்த்தனை நன்றாக இருக்கும். உதவிகள் தேடி வரும்.

பெரியளவுக்கு அதிர்ஷ்டத்தை எதிர்பார்க்க முடியாது. இருப்பினும் உங்கள் திறமையால் வெற்றி கிடைக்கும். உங்களின் அறிவுக்கு பாராட்டு அங்கீகாரம் கிடைக்கும். கலை மற்றும் விளையாட்டு துறைகளில் வெற்றி கிடைக்கும். கணவன் - மனைவி, காதல் உறவில் மாற்றுக் கருத்துகள் ஏற்படலாம். அதனால் உறவில் கவனம் தேவை. பணியிலும் திட்டமிட்டு கவனமாக செயல்பட வேண்டும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

விருச்சிகம் (sukiran peyarchi for Viruchigam): விருச்சிகம் ராசிக்கு ஐந்தாம் இடத்தில் சுக்கிரன் வரப்போகிறார். ஐந்து என்பது உங்கள் பூர்வ ஜென்ம ஸ்தானம். கடந்த ஜென்மத்தில் நீங்கள் செய்த புண்ணியங்களுக்கான பலன்களை இப்போது அறுவடை செய்வீர்கள். குரு ஏழாம் இடத்தில் உள்ளார். பணம், பொருள், முன்னேற்றம், அதிர்ஷ்டம் ஓரளவுக்காவது கைக்கொடுக்கும் காலகட்டம் அது. சுப செலவுகள் வரும்.

எட்டு கிரகங்களுடன் சுக்கிரன் பயணிக்கும் இந்த காலகட்டத்தில் பொருளாதாரத்தில் உயர்வு இருக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் வாய்ப்பு அமையும். காதல் உறவு திருமணமாக மாறும். லாட்டரி ஜேக்பாட் பலன்கள் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற ஏக்கத்தில் இருந்தவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் வரும். பயணத்தில் வெற்றி கிடைக்கும்.

தனுசு (sukiran peyarchi for Dhanusu): தனுசு ராசிக்கு சுக்கிரம் நான்காவது இடத்துக்கு வரப்போகிறார். இது மாளவ்யா யோகம் என்று சொல்லலாம். பெயர், புகழ், அந்தஸ்து எல்லாவற்றையும் கொடுப்பார். ஆரோக்கியத்தை மேம்படுத்துவார். தடங்கல்களை எல்லாம் தகர்த்தெறிவார். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழலை உருவாக்குவார். உங்கள் ராசிநாதனான குருவுடன் செய்யும் பரிவர்த்தனை நல்ல பலன்களை தரும்.

இழப்பை விட வரவு தான் அதிகரிக்கும். உங்கள் திட்டங்களை நிறைவேற்றலாம். வாய்ப்புகள் நல்லபடியாக அமையும். பயணங்கள் திருப்திகரமாக அமையும். வீடு, வாகனத்தில் மாற்றம் ஏற்பட்டுவதற்கு வாய்ப்புள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+