சுக்கிரன் பெயர்ச்சி: பண மூட்டையை அள்ளப் போகும் 5 ராசிகள் எவை தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சுக்கிரன் பெயர்ச்சி: செல்வத்துக்கும், செழிப்புக்கும் அதிபதியான சுக்கிரன் 2025 புத்தாண்டுக்கு முன்னர் டிசம்பர் 28 ஆம் தேதி சுக்கிரன் கும்ப ராசிக்கு பெயர்ச்சியாக உள்ளார். சுக்கிரனின் பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் எவை என்பதை அறிந்து கொள்ளலாம்..

செல்வத்துக்கும், செழிப்புக்கும், ஆடம்பரத்துக்கும், சொகுசான வாழ்க்கைக்கும் அதிபதியானவர் சுக்கிர பகவான். இந்த சுக்கிர பகவான் தான் காதல், ஈர்ப்பு, குடும்பத்தில் மகிழ்ச்சி, இன்பம் ஆகியவற்றை வழங்கும் காரணியாக இருக்கிறார். சுக்கிர பகவானின் அருள் இருந்தால் அனைத்து விதமான செல்வத்தையும் வளத்தையும் ஒரு நபர் பெறும் யோகம் உண்டாகும்.

sukran peyarchi


சுக்கிரன் டிசம்பர் 28 ஆம் தேதி இரவு 11:28 மணிக்கு கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி ஆகிறார். சுக்கிரனின் பெயர்ச்சி காரணமாக 5 ராசிக்காரர்கள் ராஜயோகத்தைப் பெறப் போகின்றனர். 2025 புத்தாண்டு இவர்களுக்குப் பொற்காலமாக இருக்கும். அந்த வகையில், மேஷம் உள்ளிட்ட 5 ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் கும்ப ராசியில் சஞ்சரிப்பது நற்பலன்களைத் தரப் போகிறது. எந்தெந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர் என்று பார்க்கலாம்..

மேஷம்: சுக்கிர பகவான் கும்ப ராசியில் இடம்பெயர்வதால் மேஷ ராசிக்காரர்களுக்கு நிதி சார்ந்த விஷயங்களில் நற்பலன்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. வருமானம் அதிகரிக்கும். புதிய முதலீடுகள், சேமிப்புகளைச் செய்வதில் ஈடுபாடு காட்டுவீர்கள். உங்களுடைய குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உங்களுடைய பேச்சாலும், செயலாலும் மற்றவர்களை ஈர்ப்பீர்கள். புதிய நண்பர்களை உருவாக்கும் யோகம் உண்டு. வசீகரமாக இருப்பீர்கள். கணவன், மனைவிக்கிடையேயான உறவுகள், காதல் உறவுகள் சிறப்பானதாக இருக்கும். குழந்தை வரத்துக்காக காத்திருப்பவர்களுக்கு விரைவில் குட் நியூஸ் வந்து சேரும்.

மிதுனம்: கும்ப ராசியில் பெயர்ச்சியாகும் சுக்கிரனின் தாக்கத்தால் மிதுன ராசிக்காரர்கள் தனது குரு மற்றும் தந்தை, வழிகாட்டி ஆகியோருடைய நல் ஆதரவைப் பெறுவாரகள். ஆடம்பரப் பொருள்களில் முதலீடுகளைச் செய்வீர்கள். புதிய வாகனம், வீடு, நிலம் போன்ற சொத்துகளை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். சகோதர, சகோதரிகளின் ஆதரவு கிடைக்கும். இதனால், உங்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். தகவல் தொடர்புத் திறனில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.

சிம்மம்: சுக்கிரனின் பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு பொற்காலத்தை உண்டாக்கப் போகிறது. காதலில் வெற்றி கிட்டும். தொழிலில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். முதலீடுகளில் அதிக லாபம் பெறுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். கணவன், மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். மனைவியுடன் கணவன் மார்கல் தங்களுடைய நேரத்தை மகிழ்ச்சியாக செலவிடுவீர்கள். உங்களுடைய ஆளுமைத் திறன் அதிகரிக்கும். தொழிலில் புதிய பங்குதாரர்கள், முதலீட்டாளர்கள் கிடைக்கும் வாய்ப்பு உண்டு. திருமணத்துக்காக காத்திருப்பவர்களுக்கு வரன் கைகூடி வரும்.

விருச்சிகம்: கும்ப ராசியில் பெயர்ச்சியாகும் சுக்கிரனால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப் போகிறது. சுக்கிரனின் சஞ்சாரத்தால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வருகையால் வீடே கலகலவென மாறும். புதிய வீடு, புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். வீட்டைப் புதுப்பிக்கும் முயற்சி செய்பவர்களுக்கு நல்ல யோகம் உண்டு. இது சரியான நேரமாக இருக்கும். வெளிநாட்டில் இருந்து உறவுகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. சமுதாயத்தில் உங்களுடைய மதிப்பு, மரியாதை அதிகரிக்கும்.

கும்பம்: சுக்கிரனின் இடமாற்றம் உங்களுடைய வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை உண்டாக்கும். உங்களுடைய வாழ்க்கையை முழுமையாக அனுபவிப்பீர்கள். சுக்கிரனின் தாக்கத்தால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த தொடங்குவீர்கள். உங்களுடைய ஆளுமையை அதிகரிக்கும். நிதி ஆதாயத்துக்கான வாய்ப்புகள் உண்டாகும். முதலீடுகளைச் செய்து மகிழ்வீர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+