சுக்கிரன் உச்சம்: அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்.. மேஷம் முதல் துலாம் வரை கிடைக்கும் பலன்கள்
சுக்கிரன் உச்சம் ராசி பலன்: மீன ராசியில் உச்சமடையும் சுக்கிர பகவானால் அனைத்து ராசிகளுக்கும் அதிர்ஷ்டமான பலன்கள் பெறப் போகின்றனர். அந்த வகையில், மேஷம் முதல் துலாம் வரை 6 ராசியினர் பெறப்போகும் பலன்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஜோதிட சாஸ்திரத்தின்படி ஆட்சி ஸ்தானத்தில் ஒரு கிரகம் அமரும்போது தரும் பலனைப்போல, அந்த கிரகம் உச்சம் பெறும் இடத்தில் அமரும்போது சிறப்பான பலன்கள் கிடைக்கும். மீன ராசியில் சுக்கிரன் உச்சமடைவதால் சில ராசிக்காரர்களுக்கு ராஜயோக பலனை அனுபவிப்பார்கள். ஜாதகர்களுக்கு சுக்கிரன் சிறப்பான இடத்தில் அமர்ந்தால் அவர்கள் அனைத்து செல்வங்களையும் பெறுவார்கள்.

ரிஷபம், துலாம் ராசிக்கு அதிபதியான சுக்கிர பகவான் ஒருவருக்கு செல்வத்தையும், ஆடம்பரத்தையும் தரக்கூடியவர் ஆவார். சுக்கிர பகவான் மீன ராசியில் உச்சம் அடைவதால் அருமையான பலன்களைத் தருவார். ஜனவரி 28 ஆம் தேதி சுக்கிரன் மீன ராசிக்கு பெயர்ச்சி ஆவதால் 12 ராசிகளுக்கும் அதிர்ஷ்டமான பலன்கள் கிடைக்கப் போகின்றன.
மீன ராசியில் சுக்கிரன் உச்சமடைவதால் மாளவ்ய ராஜயோகம் மற்றும் ராசி பரிவர்த்தனை யோகம் நடைபெறுகிறது. குரு ஆளும் மீன ராசியிலும், மீனத்தில் சுக்கிரனும், ரிஷபத்தில் குருவும் சஞ்சரிப்பதால் ராசி பரிவர்த்தனை எனும் அற்புத யோகம் உருவாகிறது. இந்த யோகத்தால் சில ராசிக்காரர்கள் வாழ்க்கையில் நல்ல வளர்ச்சியையும், முன்னேற்றத்தையும் பெறப் போகின்றனர். இதனால், மேஷம் முதல் துலாம் வரை உள்ள 6 ராசிகளுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
மேஷம் - மேஷ ராசிக்காரர்களே செலவுகளைக் கட்டுப்படுத்துவது நல்ல பலன்களைத் தரும். வியாபாரம், தொழிலில் சிறப்பான நன்மைகளைப் பெறுவீர்கள். பண வரவு அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மேஷ ராசி சேர்ந்தவர்களுக்கு தங்களின் செலவுகளை கட்டுப்படுத்திச் செயல்படுவது நல்லது. தொழிலதிபர்கள் வெளியூர், வெளிநாடு செல்வதற்கான யோகத்தைப் பெறுவீர்கள். கணவன், மனைவி சிறப்பான நேரங்களை செலவிடுவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.
ரிஷபம் - ரிஷப ராசி சேர்ந்தவர்களுக்கு ராசியாதிபதியான சுக்கிரன் உச்சமடைவதால் எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உங்களுடைய தனிப்பட்ட விருப்பங்கள் அனைத்தையும் நிறைவேற்றுவீர்கள். நிதிநிலை சார்ந்த விஷயங்களில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். ஆடம்பர விஷயங்களுக்கு செலவு செய்வீர்கள். வேலை தொடர்பான விஷயங்களில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்த்த சம்பள உயர்வு கிடைக்கும். நீண்டகாலமாக பாதிக்கப்பட்டு வந்த உடல் நலப் பிரச்சனைகளில் இருந்து விடுதலை அடைவீர்கள்.
மிதுனம் - மிதுன ராசி சேர்ந்தவர்களுக்கு தங்களின் தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். சமுதாயத்தில் மதிப்பு மரியாதை கிடைக்கும். புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் உங்கள் வேலைக்கான பாராட்டைப் பெறுவீர்கள். மேலதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். லாபம் பலமடங்கு அதிகரிக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
கடகம் - கடக ராசிக்காரர்களுக்கு படைப்பாற்றல் அதிகரிக்கும். புதிய விஷயங்களை கற்பதில் ஆர்வத்தைக் காட்டுவீர்கள். சொத்து வாங்குவதில் நல்ல பலன்களை அடைவீர்கள். தந்தை மற்றும் குருவின் வழிகாட்டுதலால் ஆதாயம் உண்டாகும். சுற்றுலா, வெளியூர் செல்வதற்கு திட்டமிடுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். காதல், திருமண வாழ்க்கையில் சாதகமான காலமாக இருக்கும்.
சிம்மம் - சிம்ம ராசிக்காரர்களுக்கு வேலை செய்யும் இடத்தில் சில ஏற்றத் தாழ்வுகளை சந்திக்கும் சூழல் ஏற்படும். உங்களுடைய வேலைகளில் எச்சரிக்கையாகவும், பொறுப்புணர்வுடனும் இருப்பது நல்லது. செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். செலவுகள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.












Click it and Unblock the Notifications