சுக்கிரன் உச்சம்: கன்னி முதல் மீனம் வரை லாபத்தை அள்ளும் ராசிகள்.. பணம் கொட்டும்
சுக்கிரன் உச்சம் ராசி பலன்: மீன ராசியில் உச்சமடையும் சுக்கிர பகவானால் அனைத்து ராசிகளுக்கும் அதிர்ஷ்டமான பலன்கள் பெறப் போகின்றனர். அந்த வகையில், கன்னி முதல் துலாம் வரை 6 ராசியினர் பெறப்போகும் பலன்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஜோதிட சாஸ்திரத்தின்படி ஆட்சி ஸ்தானத்தில் ஒரு கிரகம் அமரும்போது தரும் பலனைப்போல, அந்த கிரகம் உச்சம் பெறும் இடத்தில் அமரும்போது சிறப்பான பலன்கள் கிடைக்கும். மீன ராசியில் சுக்கிரம் உச்சமடைவதால் சில ராசிக்காரர்களுக்கு ராஜயோக பலனை அனுபவிப்பார்கள். ஜாதகர்களுக்கு சுக்கிரன் சிறப்பான இடத்தில் அமர்ந்தால் அவர்கள் அனைத்து செல்வங்களையும் பெறுவார்கள்.

ரிஷபம், துலாம் ராசிக்கு அதிபதியான சுக்கிர பகவான் ஒருவருக்கு செல்வத்தையும், ஆடம்பரத்தையும் தரக்கூடியவர் ஆவார். சுக்கிர பகவான் மீன ராசியில் உச்சம் அடைவதால் அருமையான பலன்களைத் தருவார். ஜனவரி 28 ஆம் தேதி சுக்கிரன் மீன ராசிக்கு பெயர்ச்சி ஆவதால் 12 ராசிகளுக்கும் அதிர்ஷ்டமான பலன்கள் கிடைக்கப் போகின்றன.
மீன ராசியில் சுக்கிரன் உச்சமடைவதால் மாளவ்ய ராஜயோகம் மற்றும் ராசி பரிவர்த்தனை யோகம் நடைபெறுகிறது. குரு ஆளும் மீன ராசியிலும், மீனத்தில் சுக்கிரனும், ரிஷபத்தில் குருவும் சஞ்சரிப்பதால் ராசி பரிவர்த்தனை எனும் அற்புத யோகம் உருவாகிறது. இந்த யோகத்தால் சில ராசிக்காரர்கள் வாழ்க்கையில் நல்ல வளர்ச்சியையும், முன்னேற்றத்தையும் பெறப் போகின்றனர். இதனால், மேஷம் முதல் துலாம் வரை உள்ள 6 ராசிகளுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான லாபம் கிடைக்கும். தொழில், வியாபாரத்தை மேலும் விரிவுபடுத்துவது குறித்து திட்டமிடுவீர்கள். அதில் வெற்றியையும் பெறுவீர்கள். முதலீடுகள் மூலமாக நல்ல லாபத்தைக் காண்பீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். திருமண வாழ்க்கையில் நல்ல புரிதல் ஏற்படும். இதுவரை அனுபவித்து வந்த தொந்தரவுகள் உங்களை விட்டு நீங்கும்.
துலாம்: துலாம் ராசிக்காரர்களின் ராசியாதிபதியான சுக்கிரன் உங்களுடைய சப்தம வீட்டில் உச்சமடைகிறார். இதனால், நீங்கள் செய்யக்கூடிய வேலை, வியாபாரம், தொழிலில் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். நீங்கள் செய்யும் வேலைகளுக்கான உரிய அங்கீகாரத்தைப் பெறுவீர்கள். எடுத்த காரியங்களில் நீங்கள் எதிர்பார்த்த வெற்றிகள் உண்டாகும். திறமையை நிரூபிப்பதற்கான காலமாக இருக்கும். வேலை செய்யும் இடத்திலும், குடும்பத்திலும் இருந்து வந்த பிரச்சனைகள் விலகி குடும்பத்தில் அமைதி பிறக்கும்.
விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் உச்சத்தால் கல்வி தொடர்பான விஷயங்களில் விருப்பத்தை நிறைவேற்றும் காலமாக இருக்கும். வெளியூர், வெளிநாடுகளில் படிக்கும் மாணவர்களுக்கு சாதகமான காலமாக இருக்கும். ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் விலகும். அலுவலகங்களில் விட்டுக் கொடுத்துச் செல்வது. இனிமையாகப் பேசுவது நல்லது. சூதாட்டம், பந்தயம் போன்ற விஷயங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது.
தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு முன்னேற்றமான காலமாக இருக்கும். உத்தியோகத்தில் சிறப்பான பலன்களைப் பெறுவீர்கள். உங்களுடைய மன அமைதி அதிகரிக்கும். வசதி வாய்ப்புகள் பெருகும். ஆடம்பர விஷயங்களைச் செய்வீர்கள். புதிய வீடு வாங்குவது. வீட்டை பராமரிப்பது போன்ற விஷயங்களில் எதிர்பார்த்தது நிறைவேறும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். மனதுக்குப் பிடித்த விஷயங்களை செய்து மகிழ்வீர்கள்.
மகரம்: மகர ராசியினருக்கு சகோதர, சகோதரிகளுடன் பிணக்குகள் நீங்கி உறவுகள் வலுப்படும். உங்களின் தேவைகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் நல்ல உறவில் இருப்பார்கள். எதிர்பார்த்த வேலைகளை சரியான நேரத்தில் முடித்து வெற்றி காண்பீர்கள். எடுத்த காரியங்களில் அதிர்ஷ்டம் உங்களுக்கு துணை நிற்கும். நிதி நிலை சார்ந்த விஷயங்களில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். உங்களுடைய விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.
கும்பம்: கும்ப ராசிக்காரர்களுக்கு தொழில் சார்ந்த விஷயங்களில் நல்ல பலன்கள் கிடைக்கும். செலவுகள் அதிகம் நேரும் என்பதால் அதனைக் கட்டுப்படுத்துவது நல்லது. ஆடம்பரமான விஷயங்களை செய்து மகிழ்வீர்கள். எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவதற்கு அதிர்ஷ்டம் உங்களுக்கு துணையாக இருக்கும். இலக்குகளை நிர்ணயித்து வேலைகளைச் செய்தால் நல்ல முன்னேற்றம் உண்டாகும். காதல் வாழ்க்கை சிறப்பானதாக இருக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும்.
மீனம்: மீன ராசியில் உச்சம் உடையும் சுக்கிர பகவானால் நீங்கள் பல்வேறு சாதகமான பலன்களை அனுபவிக்கப் போகின்றீர்கள். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபத்தைக் காண்பீர்கள். வணிகத்தில் புதிய புதிய திட்டங்களைத் தீட்டி அதில் வெற்றி பெறுவீர்கள். திருமணமானவர்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த காலமாக இருக்கும். துணையின் ஆதரவு கிடைக்கும். வாழ்க்கையில் அடுத்த கட்டத்துக்கு முன்னேறுவது குறித்து முக்கியமான விஷயங்களைப் பற்றி யோசிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் மற்றும் உடற்பயிற்சியில் கவனம் செலுத்துவது நல்லது. அதிர்ஷ்டம் நிறைந்த காலமாக இருக்கும்.












Click it and Unblock the Notifications