சுக்கிரன் பெயர்ச்சியில் அதிர்ஷ்டம் பெறும் 5 ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க
சுக்கிரன் பெயர்ச்சி: 2025 ஆம் ஆண்டில் பல்வேறு முக்கிய கிரகப் பெயர்ச்சிகள் நடைபெற்றுள்ளன. இன்று சுக்கிரப் பெயர்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த சுக்கிரப் பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் 5 ராசிகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
உலகில் உள்ள மனித உயிர்களின் காதலுக்கு காரணமாக இருப்பவர் சுக்கிர பகவான். காதலின் கிரகமாக கருதப்படும் சுக்கிர பகவான் ஜூன் 28 ஆம் தேதி மேஷத்தில் இருந்து ரிஷபத்துக்கு செல்கிறார். பொதுவாக சுக்கிரன் செல்வம் மற்றும் செழிப்புக்கு அதிபதியாவார். திருமணம் உள்ளிட்ட சுப காரியங்களுக்கு அதிபதியாகவும் சுக்கிரன் இருக்கிறார்.

வண்டி, வாகனம், தொழில் கூட்டாளிகள் உள்ளிட்ட சுக வாழ்க்கைக்கும் சுக்கிரன் முக்கியமானவர். நவ கிரகங்களில் சுக்கிரனை அசுரன் என்று அழைப்பார்கள். அந்த வகையில், இந்த சுக்கிரப் பெயர்ச்சியால் ஐந்து ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ரிஷபம்
உங்கள் ராசிக்கு 1 ஆம் வீட்டில் சுக்கிரன் பயணிக்கிறார். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த பதவி உயர்வுகள் கிடைக்கும். வியாபாரம், தொழிலில் லாபம் உண்டாகும். காதலிப்பவர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். கணவன், மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.
கடகம்
உங்கள் ராசிக்கு 11 ஆம் வீட்டில் சுக்கிரன் பயணிக்கப் போகிறார். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். புதிய வருமானம், கூடுதல் வருமானத்திற்கான புதிய திட்டங்களை வகுப்பீர்கள். அதில் வெற்றியும், ஆதாயமும் கட்டாயம் கிடைக்கும். காதல் தொடர்பான விஷயங்களில் வெற்றி காண்பீர்கள். நீண்ட நாட்களாக திருமணத்தில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கும் காலகட்டமாக இருக்கும். சுப காரியங்கள் வீட்டில் நடக்கும்.
கன்னி
கன்னி ராசிக்கு 9 ஆம் வீட்டில் சுக்கிரன் பெயர்ச்சியாகியுள்ளதால் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உயர்கல்வி தொடர்பான விஷயங்களில் வெற்றியைக் காண்பீர்கள். தொலைதூரப் பயணங்களால் ஆதாயம் ஏற்படும். வெளிநாடுகளுக்கான ஏற்றுமதி, இறக்குமதி போன்ற வணிகம் தொடர்பான விஷயங்களில் அபரிமிதமான லாபம் கிடைக்கும். வீடு, நிலம், இடம் வாங்குவதற்கான அற்புதமான காலகட்டமாக இருக்கும்.
மகரம்
உங்கள் ராசிக்கு 5 ஆம் வீட்டில் சுக்கிரன் பயணிப்பதால் உங்களுடைய தனித்திறமைகள் வெளிப்படும் காலகட்டமாக இருக்கும். பங்குச் சந்தை போன்ற விஷயங்களில் நல்ல லாபம் கிடைக்கும். இருப்பிநும் பணம் சார்ந்த விஷயங்களில் கவனமாக இருப்பது நன்மையை ஏற்படுத்தும். காதல் தொடர்பான விஷயங்களில் வெற்றியைக் காண்பீர்கள். பிள்ளைகளின் ஆசைகளை நிறைவேற்றும் காலகட்டமாக இருக்கும். குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே அந்நியோன்யம், புரிதல் ஏற்படும்.
மீனம்
மீன ராசிக்காரர்களின் 3 ஆவது வீட்டில் சுக்கிரன் பயணிக்கவுள்ளார். புதிய நண்பர்கள், தொடர்புகள் கிடைப்பார்கள். காதல் வாழ்க்கை இனிமையானதாக இருக்கும். எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்ற மன தைரியமும், புத்துணர்ச்சியும் உண்டாகும். எதிர்பார்த்துக் காத்திருந்த பதவி உயர்வுகள் கிடைக்கும். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். பொருளாதாரத்தில் ஏற்றம் காணும் மாதமாக இருக்கும்.












Click it and Unblock the Notifications