கும்ப ராசிக்கு இனி சுக்கிரன் உச்சம்.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது.. அதிர்ஷ்டமோ அதிர்ஷ்டம்

Subscribe to Oneindia Tamil

சுக்கிரன் பெயர்ச்சி: 2025 வருடம் சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி ஆகிய அனைத்து முக்கிய பெயர்ச்சிகளும் நடந்துவிட்டன. ஆனாலும் இந்த வருடம் இன்னும் சில கிரகங்களின் பெயர்ச்சி உள்ளது. அந்த வகையில் மே 30 ஆம் தேதி சுக்கிரன் பெயர்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த பெயர்ச்சியால் கும்ப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்தக் கட்டுரையில் காணலாம்.

பொதுவாக சுக்கிரன் செல்வம் மற்றும் செழிப்புக்கு அதிபதியாவார். திருமணம் உள்ளிட்ட சுப காரியங்களுக்கு அதிபதியாகவும் சுக்கிரன் இருக்கிறார். அதனால் அவரை களத்திர காரகன் என்றும் கூறுவார்கள். வண்டி, வாகனம், தொழில் கூட்டாளிகள் உள்ளிட்ட சுக வாழ்க்கைக்கும் சுக்கிரன் முக்கியமானவர். நவ கிரகங்களில் சுக்கிரனை அசுரன் என்று அழைப்பார்கள்.

sukkiran-peyarchi-2025-what-kind-of-benefits-will-get-kumbam-rasi-people-during-this-period

சுக்கிரன் பெயர்ச்சி

நண்பன் ஸ்தானத்தை நிர்ணயிப்பதிலும் சுக்கிரனின் அமைப்பு மிகவும் முக்கியமானது. கலை, அழகு, ஜவுளி உள்ளிட்ட துறைகளுக்கும் சுக்கிரன் அதிபதியாக இருக்கிறார். அதனால் அவரின் பெயர்ச்சி முக்கியமானது. தற்போது சுக்கிரன் மீனம் ராசியில் உச்சமாக உள்ளார். அவர் வருகிற மே 31 ஆம் தேதி (வைகாசி 16) மேஷம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அங்கு அவர் ஜூன் 29 ஆம் தேதி வரை இருப்பார்.

சுமார் 30 நாட்கள் அவரின் தாக்கம் கடுமையாக இருக்கும். இது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், கும்ப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்தக் கட்டுரையில் காணாலாம்.

கும்ப ராசி பலன்

கும்ப ராசிக்காரர்களுக்கு 4க்கு உரியவர் சுகத்தையும், பாக்கியத்தையும் தரக் கூடியவர். உங்களுக்கு ராஜயோகத்தை தரக்கூடிய கிரகம் 2 ஆம் இடம் எனும் குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்து கொண்டு உச்சமாக இருந்தார். சனி, ராகுவுடன் சேர்ந்து குழப்பத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்திருக்கும். 3 ஆம் இடம் எனும் முயற்சி ஸ்தானத்தில் அமருவதால் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியைப் பெறும். தன்னம்பிக்கை அதிகரிக்கும் காலகட்டமாக இருக்கும்.

திருமணத் தடை நீங்கும்

3 ஆம் இடம் வலுப்பெறுகிறது. செவ்வாய் பகவானும் ஜூன் மாதம் 7 ஆம் இடம் எனும் திருமண ஸ்தானத்தில் போய் அமர்கிறது. இதனால், உங்களுக்கு கண்டிப்பாக திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான பாக்கியத்தைக் கொடுக்கும். திருமணத்தில் இருந்த தடைகள் எல்லாம் நீங்கி அடுத்தடுத்து நல்ல விஷயங்கள் நடக்கும். புதிய உறவு கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் கிடைக்கும்.

புதிய உறவுகள்

கடந்த இரண்டரை வருடங்களாக உறவுகளால் பல பிரச்சனைகள், தொல்லைகளை அனுபவித்து வந்திருப்பீர்கள். பிரிந்து போன உறவுகள் மீண்டும் சேரும் சந்தர்ப்பம் உருவாகும். புதிய உறவு கிடைக்கும். திருமண பந்தத்தில் வரும் உறவால் வாழ்க்கையில் நிறைய சந்தோஷங்களை அனுபவிக்கும் வாய்ப்பு கிடைக்கும். சகோதரிகளால் சிறிய சிறிய கசப்பு உணர்வுகள் ஏற்பட்டு வந்ததெல்லாம் சரியாகும். ஒன்று சேர்வதற்கான வாய்ப்பு, சந்தர்ப்பம் ஏற்படும்.

பயணம்

3 ஆம் இடம் என்பது பிராயணத்தை குறிக்கக்கூடிய இடம். சிறு சிறு பயணம், தூர தேசப் பிரயாணங்கள் ஏற்படும். தொழில், வேலை, வியாபாரம் ரீதியாக பயணம் செய்யக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். பயணங்கள் மூலமாக புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் அறிகுறிகள் ஏற்படும். அதற்கான சந்தர்ப்பங்கள் ஏற்படும். வியாபார நுணுக்கங்கள் சிறப்பாக செய்வீர்கள். எந்த இடத்தில் எப்படி பேச வேண்டுமோ அப்படி அழகாகப் பேசி சிறப்பாக காரியத்தை செய்து முடிப்பீர்கள்.

குழந்தை பாக்கியம்

ரியல் எஸ்டேட் துறையில் இருப்பவர்களுக்கு வீடுகள் அனைத்தும் விற்பனை ஆகும். கூடுதல் வருமானம், லாபம் பெறக்கூடிய காலகட்டமாக இருக்கும். வீடு விற்பனையே இல்லை என்று வருந்துபவர்களுக்கு விற்பனை செய்வதற்கு சிறப்பான காலகட்டமாக இருக்கும். இந்த சுக்கிரப் பெயர்ச்சியில் 5 ஆம் இடத்தில் குரு இருப்பதால் கண்டிப்பாக உங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். அனைத்து விதமான பாக்கியங்களும் ஏற்றத்தைக் கொடுக்கும். நினைத்த மாதிரி ஜெயிக்கக்கூடிய தன்மை உண்டாகும்.

புதிய வேலை கிடைக்கும்

ஐடி துறை, தகவல் தொடர்புத் துறை, கம்யூனிகேஷன், நெட்வொர்க்ஸ், எலக்ட்ரானிக்ஸ் துறையில் இருக்கக் கூடியவர்களுக்கு இந்த மாதம் ஏற்றத்தைக் கொடுக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நிச்சயமாக புதிய வேலை, வேலை மாற்றம் உண்டாகும். உங்களுடைய முயற்சி, தன்னம்பிக்கையால் வேலை கிடைக்கும் காலகட்டமாக இருக்கும். வேலையில் நிலைத் தன்மை, திருப்தி ஏற்படும்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+