Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2 1/2 ஆண்டுகளுக்குப் பிறகு கடக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்..வீடு, நிலம், கார்,பணம்னு அதிர்ஷ்டம் கொட்டப் போகுது

Subscribe to Oneindia Tamil

சுக்கிரன் பெயர்ச்சி: ஜூன் 28 ஆம் தேதி சுக்கிரப் பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இந்த சுக்கிரப் பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் யோக பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.

2025 ஆம் ஆண்டில் ஜூன் 28 ஆம் தேதி சுக்கிரப் பெயர்ச்சி நடைபெறவுள்ளது. சுக்கிரனே எல்லா மனித உயிர்களுக்கும் காதலுக்கு காரணமாக இருப்பவர். காதலின் கிரகமாக கருதப்படும் சுக்கிர பகவான் ஜூன் 28 ஆம் தேதி மேஷத்தில் இருந்து ரிஷபத்துக்கு செல்கிறார். பொதுவாக சுக்கிரன் செல்வம் மற்றும் செழிப்புக்கு அதிபதியாவார்.

Sukkiran peyarchi Kadagam Lucky zodiac signs

திருமணம் உள்ளிட்ட சுப காரியங்களுக்கு அதிபதியாகவும் சுக்கிரன் இருக்கிறார். அதனால் அவரை களத்திர காரகன் என்றும் கூறுவார்கள். வண்டி, வாகனம், தொழில் கூட்டாளிகள் உள்ளிட்ட சுக வாழ்க்கைக்கும் சுக்கிரன் முக்கியமானவர். நவ கிரகங்களில் சுக்கிரனை அசுரன் என்று அழைப்பார்கள். அந்த வகையில், இந்த சுக்கிரப் பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கடக ராசி பலன்

தாயுள்ளம் கொண்டவர்களாக இருப்பவர்கள் கடக ராசியினர். அன்பு, பாசம், கருணை உள்ளம் கொண்டவர்களாக இருப்பீர்கள். பேச்சில் சூரியனைப் போன்று அதிகாரம் மிக்கதாக இருக்கும். சுக்கிர பகவான் 11 ஆம் இடம் எனும் லாப ஸ்தானத்தில் ஆட்சி பலத்தோடு அமரப் போகிறார். சுக்கிரனால் மிகப்பெரிய மாற்றங்களையும், அதீத நன்மைகளையும் லாபங்களை கொடுக்க காத்திருக்கிறது சுக்கிரப் பெயர்ச்சி.

லாபம் உண்டாகும்

11 ஆம் இடம் என்பது மகிழ்ச்சி, லாபம், மூத்த சகோதரர்கள் மூலமாக நன்மையை பெறக்கூடிய இடம். உல்லாசமாக பயணம் செய்யக்கூடிய இடம். 11 ஆம் அதிபதி 11 ஆம் இடத்தில் வந்து அமர்ந்து தொழில், வியாபாரம், வேலை மூலமாக லாபத்தைக் கொடுக்கப் போகிறார். கடந்த இரண்டரை வருடங்களாக தொழில், வியாபாரம், வேலையில் முடக்க நிலையைச் சந்தித்து வந்திருப்பீர்கள். பணிச்சுமை, வேலைச் சுமை அனைத்தும் குறையும்.

புது வெளிச்சம்

சுக்கிரப் பெயர்ச்சிக்குப் பின்னர் தொழில், வியாபாரம், உத்தியோகத்தில் உங்கல் புத்திசாலித்தனத்தால் நல்ல மாற்றத்தைக் காணப் போகிறீர்கள். கடந்த இரண்டரை வருடங்களாக மன அழுத்தத்தோடு குழம்பிக் கொண்டிருந்தவர்களுக்கு அந்த நிலைமை மாறும். எல்லாமே இருந்தும் எதுவுமே இல்லை என்ற நிலைமை மாறும். புதிய வெளிச்சம் பிறக்கும் காலகட்டமாக இருக்கும்.

சொத்துகள் வாங்கும் யோகம்

நிலம், வீடு, வண்டி, வாகனத்துக்கு காரணகர்த்தாகவாக இருக்கும் சுக்கிரன் தற்போது சிறப்பான நிலையில் இருப்பதால் கண்டிப்பாக வீடு வாங்கும் யோகம் உண்டாகும். ஜூலை மாதம் அற்புதமான மாதமாக உங்களுக்கு இருக்கும். உங்களுக்கு யோகத்தை தரக்கூடிய குரு பகவானின் பார்வையும், சுக்கிரனின் ஆட்சி பலத்தோடு இருப்பதால் கடன்கள் கிடைக்கும். கடன் மூலமாக ஒரு புதிய வீட்டை வாங்கும் யோகம் உண்டாகும்.

வாகன யோகம்

பழைய வாகனத்தை விற்றுவிட்டு புதிய வாகனத்தை வாங்கும் யோகம் உண்டாகும். நீங்கள் வாங்க வேண்டும் என்று நினைத்த வாங்கி மகிழ்வீர்கள். பல நாள் கனவை நிறைவேற்றக் கூடிய காலகட்டமாக இருக்கும். தொழிலில் சில மாற்றங்களைக் கொடுத்து வெளியில் நகரக்கூடிய தன்மை உண்டாகும். வேலையில் இருந்து அடுத்த பரிணாமத்துக்குச் செல்வீர்கள். பதவி உயர்வு உண்டாகும். கடல் கடந்து செல்லக்கூடிய வாய்ப்புகள் வந்து சேரும்.

வெளிநாடு வாய்ப்பு

வெளிநாடு, வெளிமாநிலத்திற்குச் சென்று செட்டிலாகும் யோகம் உண்டாகும். அரசு, அரசு சார்ந்த விஷயங்களில் இருந்து குளறுபடிகள் அனைத்தும் நீங்கும். உங்கள் வேலைக்கென்ற ஒரு அங்கீகாரம் கிடைக்கும். சூரியனின் நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி ஆகும்போது தனவரவு உண்டாகும். பொருளாதாரத்தில் மேன்மை உண்டாகும். வேலையில் உயர்வு, பொருளாதார ஏற்றம் உண்டாகும்.

மகிழ்ச்சி

கலைத் துறையில் புதிய ஒப்பந்தங்களை எதிர்பார்க்கலாம். பெண்களுக்கு சந்தோஷத்தையும், மன மகிழ்ச்சியையும் உண்டாக்கும் காலகட்டமாக இருக்கும். ஜூலை 8 முதல் 20 ஆம் தேதி வரை சுக்கிரன் சந்திரனின் நட்சத்திரத்தில் பயணிப்பதால், உங்களுடைய தனித்தன்மையை, திறமையை வெளிக்கொண்டு வரும் யோகம் உண்டாகும்.

லாபம், திடீர் அதிர்ஷ்டம்

பட்டம், புகழ் கிடைக்கக்கூடிய யோகமான வாய்ப்புகள் வரும். இரண்டரை வருடமாக பல்வேறு பாதிப்புகளைச் சந்தித்து வந்தவர்களுக்கு எல்லாம் சந்தோஷத்தையும், லாபத்தையும், திடீர் அதிர்ஷ்டத்தையும், முன்னேற்றத்தையும் ஏற்படுத்தும் காலகட்டமாக அமையும். புதிய தொழில் அமையும் வாய்ப்பு வரும். மனைவியின் மூலமாக அனுகூலம், ஆதாயம் உண்டாகும். புதிய உறவு கிடைக்கும். திருமண யோகம் உண்டாகும். காதல் திருமணத்திற்கான யோகம் உண்டாகும். காதல் சார்ந்த விஷயங்களில் நன்மை உண்டாகும் காலகட்டமாக இருக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+