சுக்கிரன் பெயர்ச்சி 2025: வீடு, பணம், வாகனம் வாங்கும் யோகம்.. மேஷம் ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்ட போகுது
சென்னை: 2025 ஆங்கில புத்தாண்டு பிறந்துவிட்டது. நாளை மறுநாள் தை மாதம் பிறக்கவுள்ளது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழ் மக்களின் நம்பிக்கை. தை பிறந்த சில நாட்களிலேயே சுக்கிரன் பெயர்ச்சி நடைபெற உள்ளது. இந்த தொகுப்பில் சுக்கிர பெயர்ச்சிக்கு மேஷம் ராசிக்கான பலன்களை காண உள்ளோம்.
பொதுவாக ஒருவர் சுகமான.. சொகுசான வாழ்க்கை வாழ்வதற்கு குரு மற்றும் சுக்கிரன் அமைப்பு முக்கியம். வாகனம், திருமணம், ஜவுளி, உணவகம், விடுதி ஆகியவற்றுக்கு சுக்கிரன் தான் பிரதானம். வருகிற ஜனவரி 28 ஆம் தேதி சுக்கிரன் கும்பம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகவுள்ளார்.

மீனம் ராசியில் உச்ச பலத்துடன் அமரப்போகிறார். குருவின் வீட்டில் சுக்கிரனும், சுக்கிரன் வீட்டில் குருவும் பரிவர்த்தனை செய்கிறார்கள்.
மேஷம் ராசிக்கு 11 ஆம் இடமான லாப ஸ்தானத்தில் இருந்து 12 ஆம் இடமான சுக ஸ்தானத்துக்கு பெயர்ச்சி ஆகவுள்ளார். இதனால் நல்ல ஓய்வு, நிம்மதி, தூக்கம் கிடைக்கும். அது விரய ஸ்தானம் என்பதால் நிறைய விரயமும் ஆகும். நீங்கள் நீண்ட காலமாக ஆசைப்பட்ட பொருள்களை வாங்குவீர்கள். வெளிநாடு, வெளி மாநில பயணங்கள் வெற்றிகரமாக அமையும். நினைத்தபடியான வாகனம் வாங்குவதற்கான அமைப்பு உருவாகும். சொந்த வீடு வாங்குவதற்கான முயற்சியும் நல்லபடியாக அமையும்.
நினைத்த காரியங்களை சாதிப்பீர்கள். ஒவ்வொரு ஆசையும் திட்டமிட்டு நிறைவேற்றுவீர்கள். சுக்கிரன் ராகுவுடன் இருப்பதாலும், ராகு குருவின் வீட்டில் பயணிப்பதாலும், குரு - சுக்கிரன் பரிவர்த்தனை நடப்பதாலும் சுகபோகமான வாழ்க்கை நிச்சயம் உண்டு. உங்களின் எல்லா ஆசைகளையும் நிறைவேற்றுவதற்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும்.
மேஷத்துக்கு சுக்கிரன் இரண்டுக்குரியவர். அதனால் தனம், குடும்பம், வாக்கு ஸ்தானத்துக்கு சுக்கிரன் அதிபதி. அவர் தற்போது உச்ச பலத்தில் இருக்கிறார். அதனால் உங்களின் வருமானம் திருப்திகரமாக இருக்கும். பணத்தில் எந்த குறையும் இருக்காது. சுப விரயங்கள் இருக்கத்தான் செய்யும். குடும்பத்துக்கு தேவையான பொருள்களை வாங்குவீர்கள்.
நீண்ட காலமாக திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண வாய்ப்பு கைக்கூடும். நீங்கள் எதிர்பாராத வகையில் திருமணம் ஆடம்பரமாக நடக்கும். இந்த காலகட்டத்தில் உங்கள் குழந்தைகள் ஆசைப்பட்டதை நிறைவேற்றுவீர்கள். குழந்தைகளுக்கு பயனுள்ள வகையில் கல்வி, வெளிநாடு வாய்ப்புகளுக்காக செலவு செய்து மகிழ்ச்சியடைவீர்கள்.
உங்களின் பேச்சில் தெளிவு பிறக்கும். பேச்சுத் திறமையால் காரியங்களில் வெற்றி கிடைக்கும். உங்கள் பேச்சுக்கு சமூகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்களால் புகழில் உச்சம் பெறுவீர்கள். காதல் வாய்ப்பு திருமணாமாக மாறி மகிழ்ச்சியை ஏற்படுத்தும். திருமணத்தில் நிறைவான யோகம் கிடைக்கும்.
ஜவுளித்துறையில் சிறப்பான வளர்ச்சி இருக்கும். அழகு சாதன பொருள்கள் தயாரிப்பவர்களுக்கும் இது நல்ல காலட்டமாக இருக்கும். வாகனம் மற்றும் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் இந்த காலகட்டம் சிறப்பாக இருக்கும். ராகுவால் உங்களின் நீண்ட கால ஆசைகள் நிறைவேறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
ஆண்கள் என்றால் பெண்கள் சார்ந்த விஷயத்திலும், பெண்கள் என்றால், ஆண்கள் சார்ந்த விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும். கடன், நிதி சார்ந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். ஆண் -பெண் உறவில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.












Click it and Unblock the Notifications