Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிம்மம் ராசிக்கு வெளிநாட்டு வாய்ப்பால் கொட்டப் போகும் அதிர்ஷ்டம்.. என்ன பலன்கள் கிடைக்கும்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தை மாதம் 15 ஆம் தேதி (28.1.25) சுக்கிரன் கும்பம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகவுள்ளார். மீனத்தில் சுக்கிரன் உச்ச பலம் அடையவுள்ளார். மீனம் என்பது சுக்கிரனின் உச்ச வீடு. இந்த காலகட்டத்தில் 12 ராசிகளுக்கும் என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்பதை பார்த்து வருகிறோம். இந்த தொகுப்பில் சிம்மம் ராசிக்கான பலன்களை பார்க்கவுள்ளோம்.

சிம்மம் ராசிக்கு சுக்கிரன் மூன்றாம் இடத்துக்கு அதிபதி. முயற்சி, தைரியம், வீரியம் ஆகியவற்றை குறிக்கும். தொழில் ஸ்தானத்துக்கும் அதிபதியாவார். சுக்கிரன் சிம்மத்துக்கு எட்டாம் இடத்துக்கு பெயர்ச்சி ஆகவுள்ளார். எட்டாம் இடம் என்பது அஸ்டமத்தை குறிக்கும். எட்டாம் இடம் வலிமை பெறவுள்ளது. எட்டாம் இடம் என்பது வலி, வேதனை, துக்கம், அவமானம் ஆகியவற்றை குறிக்கிறது.

sukkiran peyarchi simmam 2025

தற்போது அந்த இடம் வலுபெறுவதால் சிம்ம ராசி அந்த கஷ்டங்களில் இருந்து விடுபடுவீர்கள். நீண்ட காலமாக உங்களின் நிம்மதியை தொலைத்த வழக்கில் இருந்து விடுபடுவீர்கள். எவ்வளவு பெரிய வழக்காக இருந்தாலும் சுக்கிரன் பெயர்ச்சிக்கு பிறகு அதில் இருந்து விடுபடுவீர்கள். கடன் பிரச்னை கழுத்தை நெறித்திருக்கும். தற்போது கடன் நெருக்கடியில் இருந்தும் விலகுவீர்கள்.

கடனை அடைப்பதற்கான வழி உருவாகும். மறைந்திருந்த பலன்கள் கிடைக்கும். புதிய கண்டுபிடிப்புகள் தொடர்பான முயற்சியை இந்த காலகட்டத்தில் நிறைவேற்றுவீர்கள். திடீர் அதிர்ஷ்டத்தால் பயனடைவீர்கள். எட்டாம் இடம் வலுபெறுவதால் வெளிநாடு மற்றும் வெளி மாநில பணிகளுக்காக முயற்சி செய்தவர்களுக்கு சாத்தியமாகும் காலமாகவும் இது இருக்கும்.


எட்டாம் இடம் வலுபெற்றாலே மாற்றம் நிச்சயம். வேலை வாய்ப்புக்காக காத்திருப்போருக்கு எதிர்பார்த்த நல்ல வேலை கிடைக்கும். வெளிநாட்டு பயணம் மூலம் நன்மை பிறக்கும். சுக்கிரன் ராகுவுடன் இணைந்திருப்பதால் எதிர்பாராத பண வரவு நிச்சயம் கிடைக்கும். எட்டாம் இடத்தில் இருத்து இரண்டாம் இடமான தன ஸ்தானத்தை பார்க்கிறார்.

இந்த அமைப்பு இருக்கும்போது பொருளாதாரத்தில் மிகப்பெரிய வளர்ச்சி இருக்கும். மூன்றுக்குரியவர் எட்டாம் இடத்தில் இருப்பதால் வியாபாரத்திலும் எதிர்பாராத பலன்கள் கிடைக்கும். அலைச்சல் அதிகமாக இருந்தாலும் இறுதியில் வெற்றி உங்கள் பக்கம் வரும். வேலையில் கூடுதல் அழுத்தத்துடன் பணியாற்றுபவர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சிக்கு பிறகு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

பலர் நீண்ட காலமாக சொந்த வீடு கட்டுவதற்கு முயற்சி செய்து வந்திருப்பீர்கள். உங்களிடம் ஏற்கனவே உள்ள ஒரு அசையா சொத்து மூலம் வீடு கட்டுவதற்கான வாய்ப்பு உள்ளது. வாகன பிரச்னையால் நிறைய மன அழுத்தம் ஏற்பட்டிருக்கும். அந்த நிலை மாறி புதிய வாகனங்கள் வாங்குவதற்கான சூழலும் உருவாகும்.

போதிய வாய்ப்பில்லை என்று வருத்தப்பட்ட கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். குழந்தைகள் நீண்ட காலமாக எதிர்பார்த்த வெளிநாட்டு கல்வி வாய்ப்புகள், புதிய முயற்சிகள் வெற்றிகரமாக அமையும். புதிய வகுப்பு, நேர்காணல் ஆகியவற்றில் சாதகமான முடிவுகள் வரும். தொழில், வியாபாரம் சிறப்பாக இருக்கும்.

பூர்விகம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் நீங்கி, அதன் மூலம் நன்மைகள் உருவாகும். உங்களின் பேச்சாற்றலால் இறங்கிய காரியத்தில் வெற்றி கிடைக்கும். சுக்கிரன் – குரு பரிவர்த்தனை நல்ல மாற்றம், யோகங்களை தரும். கடல் கடந்து வரும் மாற்றங்களால் நல்ல வளர்ச்சி இருக்கும். ஜவுளி, உணவகம், விடுதி துறைகளுக்கு நல்ல அணுகூலம் கிடைக்கும்.

திருமணம் விவகாரத்தில் சிறு சிறு தடைகள் இருக்கும். தடைகளை கடந்துதான் திருமணம் நடைபெறும். காதல் உறவில் விரிசல் ஏற்படும். பணி அல்லது குடும்ப சூழல் காரணமாக காதலர்கள் பிரிந்து இருக்கக் கூடிய நிலை ஏற்படும். ஆண் – பெண் விவகாரத்தில் மட்டும் சற்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+