கன்னி ராசிக்கு ஏற்படக்கூடிய சூப்பர் மாற்றம்.. தொழிலில் ஏற்றம், பண மழை கொட்டும்
சென்னை: 28.1.2025 சுக்கிரன் கும்பம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகவுள்ளார். மீனத்தில் சுக்கிரன் உச்ச பலம் அடையவுள்ளார். மீனம் என்பது சுக்கிரனின் உச்ச வீடு. இந்த காலகட்டத்தில் 12 ராசிகளுக்கும் என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்பதை பார்த்து வருகிறோம். இந்த தொகுப்பில் கன்னி ராசிக்கான பலன்களை பார்க்கவுள்ளோம்.
கன்னி ராசிக்கு சுக்கிரன் இரண்டாம் இடத்துக்கு உரியவர். இரண்டாம் இடம் என்பது தனம் மற்றும் வாக்கு ஸ்தானத்தை குறிக்கும். கன்னிக்கு நல்ல யோகத்தை தரும் பாக்கியாதியான சுக்கிரன் ஏழாம் இடத்தில் அமரப் போகிறார். அங்கு அவர் உச்ச பலத்தில் வலிமையாக உள்ளார்.

அதனால் இந்த காலகட்டத்தில் அவரின் 100 சதவீதம் பலன்களை முழுமையாக அடைய போகிறீர்கள். தொழிலில் முன்னேற்றம் இருக்கும். ஏழாம் இடம் என்பது கூட்டுத் தொழிலை குறிக்கும். எனவே கூட்டுத் தொழிலில் சிறப்பான வளர்ச்சி, அதீத லாபம் இருக்கும் சமுதாயத்தில் உங்களின் மதிப்பு, செல்வாக்கு உயரும்.
உங்களின் திறமைக்கான அங்கீகாரம் தேடி வரும். நீண்ட காலமாக நீங்கள் ஆசைப்பட்ட காரியம் ஏதாவது ஒரு காரணத்தால் நிறைவேறாமல் இருந்திருக்கும். இது இந்த காலத்தில் நிச்சயமாக நிறைவேறும். பணம், புகழ், மதிப்பு ஆகியவற்றில் எந்த குறையும் இருக்காது. சமூகத்தில் சில நல்ல காரியங்களை செய்வீர்கள்.
குழந்தை பாக்கியம் இல்லாமல் தவித்தவர்களுக்கு இந்த காலத்தில் குழந்தை பாக்கியம் உண்டாகப் போகிறது. குரு பகவான் வலிமையாக இருந்து ஐந்தாம் இடத்தைப் பார்ப்பதால் குழந்தை பாக்கியம் நிச்சயம் கிடைக்கும். ஐந்தாம் இடம் பூர்வ புண்ணியத்துக்கும் அதிபதி. எனவே குழந்தை பாக்கியத்தால் மன மகிழ்ச்சி அடைவீர்கள் என்று உறுதியாக சொல்ல முடியும்.
உத்யோகத்தில் நீண்ட காலமாக காத்திருந்த பதவி உயர்வு கிடைக்கும். எதிர்பார்த்த பணி மற்றும் இடமாற்றம் நிச்சயம் உண்டு. நீங்கள் நினைத்த நல்ல மாற்றங்கள் எல்லாமே நடக்கும். சுக்கிரன் ஏழாம் இடத்தில் அமர்ந்து உங்கள் ராசியை பார்ப்பதால் திருமணம் சம்பந்தப்பட்ட பலன்கள் கைக்கூடும். திருமண தடை விலகும். திருமணம் வேண்டாம் என்றிருப்போருக்கு கூட திருமணம் ஆவதற்கான வாய்ப்பு உள்ளது.
விவாகரத்து பெற்றவர்களுக்கு இரண்டாம் திருமணம் நடைபெறுவதற்கு வாய்ப்புள்ளது. குரு மற்றும் சுக்கிரன் ஆகிய இரண்டு சுப கிரகங்கள் லக்னத்தை பார்ப்பதால் அதிர்ஷ்டம் கொட்டும். ஐடி துறையில் புதிய கண்டுபிடிப்புகளில் சிறந்த முன்னேற்றம் கிடைக்கும். உங்களின் வெளிநாட்டு தொடர்புகளால் நல்ல பலன்களை பெறுவீர்கள்.
எதிர்பார்த்தபடி வீடு, வாகனம் வாங்குவதற்கான அமைப்புள்ளது. சுக்கிரன் – குரு பரிவர்த்தனையும் நடக்கப் போகிறது. இந்த பரிவர்த்தனையாலும் நல்ல யோகம் கிடைக்கும். தனம் பெருக போகிறது. வீட்டை கட்டி அதை வாடகைக்கு விட்டு பயனடைவீர்கள். சுக ஸ்தானத்தில் நல்ல சொகுசான வாழ்க்கை வாழ்வதற்கான சூழல் உருவாகும்.
நெருக்கடியாக இருந்த கடன் சுமைகள் நீங்குவதற்கான வாய்ப்பு உள்ளது. புதிய கடன்களால் யோகம் கிடைக்கும். தொழிலில் எதிர்பாராத மாற்றம் கிடைக்கும். சுக்கிரன் வலுபெறுவதால் சுகபோக அமைப்புகளை அள்ளித் தரப்போகிறார். வீட்டுக்கு தேவையான அடிப்படை மற்றும் ஆடம்பர ஆபரண பொருள்களை வாங்குவீர்கள்.
பெண்கள் சம்பந்தப்பட்ட தொழிலில் இருப்போருக்கு நல்ல வளர்ச்சி இருக்கும். கலை, ஊடகத்துறையினர் புதிய ஒப்பந்தங்களால் பலனடைவார்கள். உங்களின் பேச்சுத் திறமையால் புகழ் உயரும். தொழில் விருத்தியடைந்து லாபம் அதிகரிக்கும். நீங்கள் யார் என்று வெளி உலகுக்கு தெரியும்.












Click it and Unblock the Notifications