ரிஷப ராசிக்கு வாழ்க்கையை புரட்டிபோடும் அதிர்ஷ்டம்.. மதன கோபால யோகத்தால் அடிச்ச ஜாக்பாட்

Subscribe to Oneindia Tamil

மதன கோபால யோகம்: சுக்கிரன் கடந்த ஜனவரி 18 ஆம் தேதி கும்ப ராசியில் இருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆனார். அதேபோல கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி புதன் பகவானும் மீனத்துக்கு பெயர்ச்சி ஆகியுள்ளார். இதை மதன கோபால யோகம் என்று கூறுவார்கள். இது ரிஷபம் ராசிக்கு தரும் பலன்களை இங்கு காணலாம்.

உலகமே சனிப்பெயர்ச்சிக்கு ஆர்வமாக காத்திருக்கிறது. வருகிற மார்ச் 29-ம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. அதன்படி சனி பகவான் கும்பத்தில் இருந்து மீனத்துக்கு பெயர்ச்சி ஆகவுள்ளார். மீனத்தில் ஏற்கனவே ராகு, சுக்கிரன், புதன் ஆகிய கிரகங்கள் உள்ளன. சுக்கிரன் - புதன் சேர்க்கை மதன கோபால யோகம் எனப்படும். இது ரிஷபத்துக்கு என்ன செய்யும்.

Rishabam Madhanagopala yogam

சுக்கிரன் உச்சம் பெற்று.. புதன் நீசமடைந்து.. உங்கள் ராசிக்கு 11 ஆம் இடத்தில் நீசபங்க யோகம் பெற உள்ளீர்கள். யாருக்கும் கெடுதல் நினைக்காமல்.. மனசாட்சிக்கு பொதுவாக நடந்து கொள்பவர்கள் நீங்கள். ராகு - கேதுவால் கடந்த 5 வருடங்களாகவே வாழ்க்கையில் ஏராளமான பிரச்னைகளை சந்தித்திருப்பீர்கள்.

கொண்டாட்டங்களில் திளைக்கும் நீங்கள் சமீபகாலமாக திண்டாட்டங்களால் சோர்ந்து போயிருப்பீர்கள். உதவி செய்ய சென்ற இடத்தில் கூட பிரச்னைகள் வந்திருக்கும். ஏராளமான ஏமாற்றம் வந்திருக்கும். உங்களின் கஷ்டங்களை யாருமே புரிந்து கொள்ளவில்லை என்ற வேதனையில் இருப்ஙபீர்கள். தினம் தினம் மறுபிறவி எடுக்குமளவுக்கு பிரச்னைகள் வந்து குவிந்திருக்கும்.

குரு வக்கிரமடைந்தும் பிரச்னைகள் அதிகரித்திருக்கும். சுக்கிரன் - புதன் சேர்க்கையால் வரும் மதன கோபால யோகம் உங்களுக்கு நல்ல பலன்களை தரப்போகிறது. நீண்ட காலத்துக்கு பிறகு உங்கள் ராசிநாதன் சுக்கிரன் உச்சமடைய போகிறார். ராசிநாதன் 11 ஆம் இடத்தில் உச்சம் பெறுவது நல்ல பலன்களை தரும்.

ரிஷபத்தில் சுக்கிரன் இருக்கும்போது அதன் பலன்கள் அபரிமிதமாக இருக்கும். தைரியம் பல மடங்கு அதிகரிக்கும். இறங்கிய காரியங்களில் வெற்றிகள் குவியும். கடந்த காலங்களில் ஏராளமான முறை செய்து தோல்வியடைந்த காரியங்களில் கூட, தற்போது 5 மற்றும் 11 சேர்க்கையால் வெற்றியாக மாறும். இதற்கு நீங்கள் பெரிதாக எல்லாம் மெனக்கெட வேண்டாம்.

கடந்த காலங்களில் இழந்தை அனைத்தையும் பெறப்போகிறீர்கள். மதிப்பு, மரியாதை, அந்தஸ்து, பெயர், புகழ் அனைத்தும் கிடைக்கும். பொருளாதாரத்தில் இழந்த இடத்துக்கு செல்லுமளவுக்கு முன்னேற்றம் இருக்கும். பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னைகள் சரியாகும். பழைய பாக்கி வசூலாகும். திருமணம் வாழ்க்கையில் நிறைய மனகசப்புகள் வந்திருக்கும்.

திருமண உறவில் அந்நியர்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்திருக்கும். தற்போது அந்தப் பிரச்னைகள் எல்லாம் சரியாக போகிறது. சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். மறுமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் கைக்கூடும். உங்கள் குழந்தைகளின் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். குழந்தைகளுக்கும் எதிர்பார்த்தபடி திருமணம் ஆகும்.

குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். உத்யோகம் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். மனைவி வழியால் ஆதாயம் உண்டு. 11 ஆம் இடத்தில் சனி ஆட்சி பெற்று, செவ்வாய் பலமடைந்து, சுக்கிரன் உச்சம் பெற்று, புதன் நீசமடையும் அமைப்பு மீண்டும் அமையாது. அதனால் தொட்டது எல்லாம் பொன்னாக மாறும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+