தொழிலில் இப்படி ஒரு அதிர்ஷ்டமா?.. மதன கோபால யோகத்தால் மேஷத்துக்கு சூப்பர் பலன்
மதன கோபால யோகம்: சுக்கிரன் கடந்த ஜனவரி 18 ஆம் தேதி கும்ப ராசியில் இருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆனார். அதேபோல கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி புதன் பகவானும் மீனத்துக்கு பெயர்ச்சி ஆகியுள்ளார். இதை மதன கோபால யோகம் என்று கூறுவார்கள். இது மேஷம் ராசிக்கு தரும் பலன்களை இங்கு காணலாம்.
உலகமே சனிப்பெயர்ச்சிக்கு ஆர்வமாக காத்திருக்கிறது. வருகிற மார்ச் 29-ம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. அதன்படி சனி பகவான் கும்பத்தில் இருந்து மீனத்துக்கு பெயர்ச்சி ஆகவுள்ளார். மீனத்தில் ஏற்கனவே ராகு, சுக்கிரன், புதன் ஆகிய கிரகங்கள் உள்ளன. சுக்கிரன் - புதன் சேர்க்கை மதன கோபால யோகம் எனப்படும். இது மேஷத்துக்கு என்ன செய்யும்.

சுக்கிரன் உச்சம் பெற்று.. புதன் நீசமடைந்து.. உங்கள் ராசிக்கு 12 ஆம் இடத்தில் நீசபங்க யோகம் பெற உள்ளீர்கள். தெளிவாக முடிவு செய்யும் உங்களுக்கு தன்னம்பிக்கை அதிகம். எதிலும் கடினமான உழைப்பை செலுத்துவீர்கள். வாழ்க்கையில் நிறைய தியாகங்களை செய்திருப்பீர்கள். ஏராளமான போராட்டங்களை கடந்திருப்பீர்கள்.
தற்போதைய கிரக நில உங்களுக்கு வாழ்க்கை பெரிய ஏற்றம், இறக்கம் ஒரே நேர்கோட்டில் இருக்கும். சுக்கிரன் மற்றும் புதன் கிரகங்களின் சேர்க்கை உங்கள் ராசிக்கு 12 ஆம் இடத்தில் இருப்பது நல்ல பலன்களை தரப்போகிறது. திருமணத்துக்காக ஏராளமான முயற்சிகளை செய்து வெற்றி கிடைத்திருக்காது.
தற்போது திருமணம் தடை விலகி விரைவில் திருமணம் நடைபெற வாய்ப்புள்ளது. காதல் விவகாரத்திலும் வெற்றி கிடைக்கும். குழந்தை பேறு கிடைக்கால் வேதனையில் இருப்போருக்கு கூடிய சீக்கிரமே குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. நீங்கள் எதிர்பார்த்த இடத்தில் இருந்து கடன் கிடைக்கும். பழைய பாக்கி வசூலாகும். உத்யோகத்தில் அருமையான பலன்கள் கிடைக்கும்.
மனைவி வழியில் இருந்து சொத்துகள் வந்து சேரும். ஏழாம் அதிபதி 12 ஆம் இடத்துக்கு சென்றதால் குடும்பத்தில் அடுத்தடுத்து பிரச்னைகள் சூழ்ந்திருக்கும். முக்கியமாக கணவன் - மனைவி இடையே ஏராளமான பிரச்னைகள் வந்திருக்கும். தற்போது கணவன் - மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பிரிந்த கணவன் - மனைவி இணைவார்கள்.
வீண் செலவுகள் குறையும். சுப செலவுகள் அதிகரிக்கும். சேமிப்பு அதிகரிக்கும். உங்கள் சகோதர, சகோதரி மூலம் ஆதாயம் உண்டு. உங்களால் அவர்களுக்கும் பலனடைய போகிறார்கள். சகோதர, சகோதரிக்கு எதிர்பார்த்தபடி வரண் அமைந்து திருமணம் நடைபெறும். மேஷத்துக்கு சனி பகவான் யோகாதிபதி.
தொழில் மற்றும் லாபத்தில் அவரின் பங்கு முக்கியம். அதனால் தொழிலில் எதிர்பாராத லாபம் அதிகரிக்கும். தொழிலில் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தொட்டது துலங்கும். தொழிலில் சிறப்பான மாற்றங்களை செய்தால் இனி வாழ்க்கையில் உங்களுக்கு எப்போதும் முன்னேற்ற பாதை தான்.
12 ஆம் இடம் பலம் பெறுவதால் நீங்கள் எந்த இடத்தில் அவமானப்பட்டீர்களோ.. அந்த இடத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை, அந்தஸ்து உயரும். நீண்ட கால கனவுகளை நிறைவேற்றுவீர்கள். உங்கள் மனத்துக்கு பிடித்தபடி சொந்த வீடு கட்டுவீர்கள். சூரியன் மற்றும் குரு பகவான்களின் அமைப்புகளும் சாதகமாக உள்ளன.
ஆரோக்கியத்தில் மட்டும் கவனமாக இருக்க வேண்டும். மனதில் தேவையில்லாத குழப்பங்கள் வந்து நீங்கும். தூக்கமின்மையால் சில தொந்தரவுகள் வரும். தேவையில்லாத சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காமல் நேர்மறை சிந்தனைகளுடன் முன்னேறுவதால் நல்ல மாற்றங்கள் நிகழும்.












Click it and Unblock the Notifications