Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சொந்த வீடு, கார் வாங்கும் தனுசு ராசியினர்.. குருவும், சுக்கிரனும் இணைவதால் பிரம்மாண்ட யோகம்

Subscribe to Oneindia Tamil

சுக்கிர பெயர்ச்சி: ஒவ்வொரு கிரகங்களும் சீரான இடைவெளியில் பெயர்ச்சி ஆகி கொண்டே இருக்கும். இது ஜோதிட ரீதியாக மாற்றங்களை ஏற்படுத்தும். அந்த வகையில் இந்த மாதம் ஏராளமான மாற்றங்களை கண்டுள்ளது. அந்த வகையில் ஜூலை 26 ஆம் தேதி இன்று சுக்கிரன் பெயர்ச்சி ஆகிறார். இது தனுசு ராசிக்கு கொடுக்கும் பலன்களை இந்தக் கட்டுரையில் காணலாம்.

சுக்கிரன் பகவான் வருகிற ஜூலை 26 ஆம் தேதி ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகியுள்ளார். அங்கு அவர் ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி வரை இருக்கப் போகிறார். மிதுனத்தில் ஏற்கனவே குரு பகவான் உள்ளார். இந்த 26 நாட்கள் சுக்கிர பகவான், குருவுடன் இணைந்து பயணிக்க போகிறார். இதில் குரு - சுக்கிர இணைவும் நடக்கிறது.

sukra-peyarchi-2025-palangal-for-dhanusu-rasi-dhanusu-sagittarius-rasi-people-will-get-unexpected

அதிலும் சுக்கிர பகவான் ஜூலை 26-31 ஆகிய 6 நாட்கள் செவ்வாய் பகவானின் நட்சத்திரமான மிருகசீரிசம் நட்சத்திரத்தில் பயணிக்க உள்ளார். ஆகஸ்ட் 1-11 தேதிகளில் சுக்கிரன் ராகு பகவானின் திருவாதிரை நட்சத்திரத்தில் பயணிக்கிறார். ஆகஸ்ட் 12-20 குரு பகவானின் நட்சத்திரத்தில் சுக்கிரன் பயணிக்க உள்ளார். இது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.

பொதுவாக குரு பகவான் செல்வம், சுக ஸ்தானம், மகிழ்ச்சி ஆகியவற்றுக்கு அதிபதி. அதனால் சொசுகுசு வாழ்க்கைக்கு சுக்கிரனின் அமைப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதிலும் சுப கிரகங்களான குரு - சுக்கிரன் ஒன்றாக பயணிப்பதும் மிகவும் விஷேசமானது. இது 12 ராசிகளுக்கும் கொடுக்க போகும் பலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள் குறித்து விரிவாக காணலாம். இந்த கட்டுரையில் தனுசு ராசிக்கான பலன்களை பார்க்கலாம்.

தனுசு

தனுசு ராசிக்கு சுக்கிர பகவான் 6க்கு உரியவர். கடன், நோய், வம்பு, வழக்கு பகையைக் கொடுக்கக் கூடியவர் சுக்கிரன். தற்போது அந்த சுக்கிரன் உங்கள் ராசியாதிபதியான குருவுடன் சேர்ந்து பலனைக் கொடுக்கப் போகிறார். குருவும், சுக்கிரனும் உங்கள் ராசியைப் பார்ப்பதால் பணம் அள்ளித் தரக்கூடிய காலகட்டமாக இருக்கும். கடந்த மாதங்களைக் காட்டிலும் இந்த காலகட்டத்தில் உங்கள் கையில் பணம் நிரம்பி வழியும்.

பண வரவு அதிகரிக்கும்

தொழில், வேலையில் அபரிமிதமானதாக பணம் வரக்கூடிய காலகட்டம். கடனைப் பற்றிய எண்ண ஓட்டங்கள் அதிகரிக்கும் காலகட்டமாக இருக்கும். தனது சுய வளர்ச்சிக்காக, தொழில் அபிவிருத்திக்காக, வீடு, வண்டி வாகனம் வாங்க கடன் வாங்குவீர்கள். அல்லது கடனை அடைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். சுக்கிரனும் குருவும் எதிர்த்தன்மை கொண்டவர்கள் என்பதால் உங்களுக்கு எதிர்ப்பைக் கொடுத்துக் கொண்டிருந்தவர்கள் நண்பர்களாக மாறும் அமைப்பு உள்ளது.

ஆரோக்கியம்

இதுவரை குடைச்சல் கொடுத்துக் கொண்டிருந்தவர்கள் உங்களை விட்டு விலகிச் செல்வார்கள். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் மிகுந்த அக்கறை கொள்ள வேண்டும். நோயைக் கொடுக்க கூடியவர் சுக்கிரன் என்பதால் சர்க்கரை பிரச்சனை வருவதற்கான வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. குரு சுக்கிரன் சேருவதால் ஏற்கனவே சர்க்கரை வியாதி இருப்பவர்கள் உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாட்டை கடைப்பிடிப்பது நல்லது. சுக்கிரன் ராசி அதிபதியோடு சேர்ந்திருப்பதால் உறவுகள் தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.

சொத்துகள் வாங்கும் யோகம்

அசையும் அசையா சொத்துகள் வாங்கும் யோகம் உண்டாகும். வீடு, நிலம், இடம் வாங்கும் வாய்ப்புள்ளது. ரிலேஷன்ஷிப்பில் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. கணவன், மனைவிக்கு சொத்துகள், வேலை கிடைக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். மனம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படும். ஜூலை 26 முதல் 30 வரை செவ்வாயின் நட்சத்திரத்தில் பயணிப்பதால் குழந்தைகளைப் பற்றிய எண்ண ஓட்டம் அதிகரிக்கும். பூர்வீகம் சார்ந்த விஷயங்கள், சகோதரர்களுக்கு உதவிகளை செய்வீர்கள்.

யோகம்

வெளிநாடு, வெளிமாநிலம், அந்நிய தேசம் செல்வதற்கான யோகம் ஏற்படும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். கலைத் துறையில் இருப்பவர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். ராகுவின் நட்சத்திர ஸ்தானத்தில் ஆகஸ்ட் 1 முதல் 11 ஆம் தேதி வரை சுக்கிரன் பயணிப்பதால் கலைத் துறையில் இருப்பவர்களுக்கு யோகம் உண்டாகும். வீடு வாங்குவீர்கள். பெரிய வீடு கட்டுவீர்கள். கணவனம், மனைவி சார்ந்த விஷயத்தில் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.

வழிபாடு

ஆகஸ்ட் 11 முதல் 20 ஆம் தேதி வரை குருவின் நட்சத்திரத்தில் சுக்கிரன் பயணிக்கும்போது நீங்கள் ஆசைப்பட்ட விஷயங்களை செய்து முடிப்பீர்கள். வீடு, வண்டி, வாகனம் புதிதாக மாற்றுவீர்கள். அழகுசார்ந்த விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். ஜவுளித் துறை, அழகுத் துறையினருக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். ஸ்ரீரங்கம் சென்று வழிபடுவது அனைத்து விதத்திலும் மேன்மையை உண்டாக்கும். தட்சிணாமூர்த்தி வழிபடுவது நல்ல மாற்றத்தையும், மேன்மையைும் ஏற்படுத்தும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+