Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

துலாம் ராசிக்கு கோடியில் புரளும் யோகம்.. சுக்கிரன், குருவின் இணைவால் வரும் மாற்றம்

Subscribe to Oneindia Tamil

சுக்கிர பெயர்ச்சி: ஒவ்வொரு கிரகங்களும் சீரான இடைவெளியில் பெயர்ச்சி ஆகி கொண்டே இருக்கும். இது ஜோதிட ரீதியாக மாற்றங்களை ஏற்படுத்தும். அந்த வகையில் இந்த மாதம் ஏராளமான மாற்றங்களை கண்டுள்ளது. அந்த வகையில் ஜூலை 26 ஆம் தேதி இன்று சுக்கிரன் பெயர்ச்சி ஆகிறார். இது துலாம் ராசிக்கு கொடுக்கும் பலன்களை இந்தக் கட்டுரையில் காணலாம்.

சுக்கிரன் பகவான் வருகிற ஜூலை 26 ஆம் தேதி ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகியுள்ளார். அங்கு அவர் ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி வரை இருக்கப் போகிறார். மிதுனத்தில் ஏற்கனவே குரு பகவான் உள்ளார். இந்த 26 நாட்கள் சுக்கிர பகவான், குருவுடன் இணைந்து பயணிக்க போகிறார். இதில் குரு - சுக்கிர இணைவும் நடக்கிறது.

thulam-rasi-palan-thulam-libra-rasi-people-will-get-unexpected-good-things-during-this-sukkira-pe

அதிலும் சுக்கிர பகவான் ஜூலை 26-31 ஆகிய 6 நாட்கள் செவ்வாய் பகவானின் நட்சத்திரமான மிருகசீரிசம் நட்சத்திரத்தில் பயணிக்க உள்ளார். ஆகஸ்ட் 1-11 தேதிகளில் சுக்கிரன் ராகு பகவானின் திருவாதிரை நட்சத்திரத்தில் பயணிக்கிறார். ஆகஸ்ட் 12-20 குரு பகவானின் நட்சத்திரத்தில் சுக்கிரன் பயணிக்க உள்ளார். இது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.

பொதுவாக குரு பகவான் செல்வம், சுக ஸ்தானம், மகிழ்ச்சி ஆகியவற்றுக்கு அதிபதி. அதனால் சொசுகுசு வாழ்க்கைக்கு சுக்கிரனின் அமைப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதிலும் சுப கிரகங்களான குரு - சுக்கிரன் ஒன்றாக பயணிப்பதும் மிகவும் விஷேசமானது. இது 12 ராசிகளுக்கும் கொடுக்க போகும் பலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள் குறித்து விரிவாக காணலாம். இந்த கட்டுரையில் துலாம் ராசிக்கான பலன்களை பார்க்கலாம்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு ஜூலை முதல் ஆகஸ்ட் 20 ஆம் தேதி வரை சுக்கிர பகவான் உங்கள் ராசிக்கு 8 இல் இருந்து 9 ஆம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் அமரப் போகிறார். அங்கு சுக்கிரன் குருவுடன் இணைந்து பலனைத் தரப் போகிறார். உங்கள் ராசியாதிபதியான சுக்கிரன் பாக்கிய ஸ்தானத்தில் இருப்பது அற்புதமான அமைப்பாகும். இரு சுபக்கிரகங்கள் இணைவு பெற்று 3 ஆம் இடம் எனும் முயற்சி ஸ்தானத்தைப் பார்க்கிறது.

முயற்சிகல் சிறக்கும்

கடந்த சில மாதங்களாக உங்கள் முயற்சிகளில் இருந்துவந்த தொய்வான நிலைமைகள் மாறும். ராசிநாதன் 8 இல் மறைந்திருந்ததால் நெகட்டிவான காலகட்டமாக இருந்திருக்கும். ஆரோக்கியத்திலும் பிரச்சனை ஏற்பட்டிருக்கும். இந்த சுக்கிரப் பெயர்ச்சியில் அற்புதமான மாற்றம் ஏற்படும். பாக்கியங்கள் கிடைக்கப் பெறும். உங்களுடைய பெயர் வெளியில் தெரியும் தன்மை உண்டாகும்.

பணம் கொட்டும்

குரு சுக்கிரன் இணைவு அபரிமிதமான பணம் கிடைக்கும். பொருாதாரத்தில் நல்ல பாக்கியம் கிடைக்கும். நீங்கள் செய்யும் தொழில் மூலம் கூடுதல் தனவரவு உண்டாகும். 6, 8 அதிபதிகள் ஒன்றுகூடி 9 ஆம் இடத்தில் அமர்வதால் கடன் அமைப்பு ஏற்படும். கடனைப் பற்றிய சிந்தனைகள் ஓங்கும். கடன் வாங்குவது, அடைப்பது தொடர்பான முயற்சிகளை செய்வீர்கள். எதிர்ப்பு, பகையை சந்திக்கும் சூழல் உண்டாகும். தெரியாமல் தொந்தரவு கொடுத்துக் கொண்டிருந்தவர்கள் இனி நேரடியாக தொந்தரவு கொடுக்க ஆரம்பிப்பார்கள். அதற்கு தகுந்தாற்போல செயல்பட்டு வெற்றி அடைவீர்கள்.

ஆரோக்கியம்

6, 8 சேரும்போது ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் அக்கறை செலுத்துவது நல்லது. வயிறு சம்பந்தப்பட்ட தொந்தரவுகள், தைராய்டு, கொழுப்பு தொடர்பான பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. சர்க்கரை இருப்பவர்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். ஜூலை 31 ஆம் தேதி வரை சுக்கிரன் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பயணிப்பதால் தன வரவு நன்றாக இருக்கும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். நீங்கள் கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடுவதை தவிர்ப்பது நல்லது.

பதவி உயர்வு

ஆகஸ்ட் 1 முதல் 11 ஆம் தேதி வரை ராகுவோடு நட்சத்திரத்தில் பயணிக்கும்போது குழந்தைகளின் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளும் காலகட்டமாக இருக்கும். குழந்தைகளின் படிப்புச் செலவு, வெளிநாட்டுக்கு செல்லும் அமைப்பு, பதவி மாற்றம், இடமாற்றம் போன்றவை சிறப்பு பெறும். குரு, சுக்கிரன் எதிர் தன்மை கொண்டவர்கள் என்பதால் உறவுகள், அந்நியோன்யம் தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். கணவன், மனைவி விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.

கவனம்

சுக்கிரன் ஆகஸ்ட் 12 முதல் 20 ஆம் தேதி வரை புனர்பூசம் நட்சத்திரத்தில் பயணிப்பதால் ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். வம்பு, வழக்கு, கோர்ட், கேஸ் போன்ற விஷயங்களில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது நல்லது. வேலையினால் பாக்கியம் உண்டாகும். வலிகளை கொடுத்துக் கொண்டிருந்த உங்களுக்கு வலி நிவாரணம் ஏற்படும். குரு, சுக்கிரன் இணைந்து முயற்சி ஸ்தானத்தை பார்ப்பதால் சகோதர வகையில் இருந்து கருத்து வேறுபாடுகள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

வழிபாடு

விற்பனையாகாமல் இருந்து வந்த நிலங்கள் விற்கும் யோகம் உண்டாகும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பார்க்காத விதத்தில் திருப்பங்கள் கிடைக்கும் காலகட்டமாக இருக்கும். வீடு வாங்குவது, விற்பது, வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். கலைத் துறையில் இருப்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ஸ்ரீரங்கம் சென்று வழிபாடு செய்வது, தட்சிணாமூர்த்தியை வழிபடுவது கடன், எதிர்ப்பு, பகையை நீக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+