Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சுக்கிரன், குருவின் அருளால் மிதுனத்துக்கு மிகப்பெரிய ஜாக்பாட்.. தொட்டதெல்லாம் பொன்னாக மாறப்போகுது

Subscribe to Oneindia Tamil

சுக்கிர பெயர்ச்சி: ஒவ்வொரு கிரகங்களும் சீரான இடைவெளியில் பெயர்ச்சி ஆகி கொண்டே இருக்கும். இது ஜோதிட ரீதியாக மாற்றங்களை ஏற்படுத்தும். அந்த வகையில் இந்த மாதம் ஏராளமான மாற்றங்களை கண்டுள்ளது. அந்த வகையில் ஜூலை 26 ஆம் தேதி இன்று சுக்கிரன் பெயர்ச்சி ஆகிறார். இது மிதுன ராசிக்கு கொடுக்கும் பலன்களை இந்தக் கட்டுரையில் காணலாம்.

சுக்கிரன் பகவான் வருகிற ஜூலை 26 ஆம் தேதி ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அங்கு அவர் ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி வரை இருக்கப் போகிறார். மிதுனத்தில் ஏற்கனவே குரு பகவான் உள்ளார். இந்த 26 நாட்கள் சுக்கிர பகவான், குருவுடன் இணைந்து பயணிக்க போகிறார். இதில் குரு - சுக்கிர இணைவும் நடக்கிறது.

sukra-peyarchi-palan-for-mithunam-mithunam-gemini-rasi-people-will-get-unexpected-good-things

அதிலும் சுக்கிர பகவான் ஜூலை 26-31 ஆகிய 6 நாட்கள் செவ்வாய் பகவானின் நட்சத்திரமான மிருகசீரிசம் நட்சத்திரத்தில் பயணிக்க உள்ளார். ஆகஸ்ட் 1-11 தேதிகளில் சுக்கிரன் ராகு பகவானின் திருவாதிரை நட்சத்திரத்தில் பயணிக்கிறார். ஆகஸ்ட் 12-20 குரு பகவானின் நட்சத்திரத்தில் சுக்கிரன் பயணிக்க உள்ளார். இது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.

பொதுவாக குரு பகவான் செல்வம், சுக ஸ்தானம், மகிழ்ச்சி ஆகியவற்றுக்கு அதிபதி. அதனால் சொசுகுசு வாழ்க்கைக்கு சுக்கிரனின் அமைப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதிலும் சுப கிரகங்களான குரு - சுக்கிரன் ஒன்றாக பயணிப்பதும் மிகவும் விஷேசமானது. இது 12 ராசிகளுக்கும் கொடுக்க போகும் பலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள் குறித்து விரிவாக காணலாம். இந்த கட்டுரையில் மிதுன ராசிக்கான பலன்களை பார்க்கலாம்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு உங்கள் ராசியிலேயே குருவும், சுக்கிரனும் இணைவு பெறுகின்றனர். சுக்கிர பகவான் உங்களுக்கு 5க்கு உரியவர். பூர்வ புண்ணிய ஸ்தானம், காதல், பஞ்சம ஸ்தானத்தின் அதிபதியாக உள்ளார். விரையாதிபதியாகவும் உங்களுக்கு இருக்கிறார். உங்கள் ராசியில் குரு பகவானும் அமர்ந்திருக்கிறார். ராசி, லக்கினத்தில் குருவும், சுக்கிரனும் 26 நாட்களில் இணைவு பெற்றிருக்கின்றனர்.

குரு, சுக்கிரன் இணைந்திருப்பதால் உங்கள் ராசிக்கு யோகம் கிடைக்கும். பொருளாதாரம் சார்ந்த விஷயங்களில் நல்ல முன்னேற்றம் காணப்படும். வேலை, தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான லாபம், பண வரவு கிடைக்கும். குரு, சுக்கிரன் எதிர் தன்மையும் கொண்டவர்கள் என்பதால் குடும்ப விஷயத்தில், வாக்கு தொடர்பான விஷயங்களில் எதிர்மறையான எண்ணங்கள் வருவதற்கான வாய்ப்புள்ளது. இந்த காலகட்டத்தில் அனுசரணையாக செல்வது நல்லது.

தொழில்

குரு, சுக்கிரன் இரு கிரகங்களும் 7 ஆம் இடம் எனும் திருமண ஸ்தானத்தை பார்ப்பதால் கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. பண வரவுக்குப் பஞ்சமே இருக்காது. தொழில் சார்ந்த விஷயங்களில் நல்ல முன்னேற்றங்களும், வாய்ப்புகளும் உங்களுக்கு கிடைக்கும். தொழில் விஷயத்தில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும். குருமார்களின் ஆலோசனைகள், ஆசிர்வாதங்கள் கிடைக்கும்.

குழந்தை பாக்கியம்

குரு என்பது கடவுள். குலதெய்வத்தின் ஆசிர்வாதம் பரிபூரணமாக கிடைக்கும். குழந்தை பாக்கியத்துக்காக நீண்ட நாள் காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். இதுவரை குழந்தை பாக்கியத்தில் இருந்து வந்த தடைகள் பரிபூரணமாக நீங்கும். குழந்தைகள் விஷயங்களில் செலவு செய்வது, திருமணம் செய்து வைப்பது, உயர் கல்விக்காக செலவு செய்வது, சட்டம், நிதி, நீதித்துறையில் இருக்கும் குழந்தைகளுக்கு நன்மை ஏற்படும் காலகட்டமாக இருக்கும்.

வெளிநாடு யோகம்

12 ஆம் அதிபதியுடன் சுக்கிரன் சேர்ந்திருப்பதால் வெளிநாடு, வெளியூர் செல்லும் யோகம் உண்டாகும். உங்களுடைய ஆசைகளை பூர்த்தி செய்வதற்கான காலகட்டமாக இருக்கும். வீட்டுக்கு செலவு செய்வது, வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்குவது, உங்களுக்குத் தேவையான செலவுகளைச் செய்வது போன்றவற்றை செய்து மகிழ்வீர்கள். கலைத் துறையில் நுழைவதற்கான வாய்ப்புகள் வந்து சேரும். மீடியா துறைக்கு செல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள், அழகு, அழகு சார்ந்த, பெண்கள், பெண்கள் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும்.

வாகனம் வாங்கும் யோகம்

5 ஆம் இடம் என்பது விளையாட்டுத் துறை. விளையாட்டுத் துறையில் இருப்பவர்கள் ஜொலிக்கும் காலகட்டமாக இருக்கம். வண்டி, வாகனம், இடங்களை வாங்குவதற்கான முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். ஆகஸ்ட் 1 முதல் 11 ஆம் தேதி வரை ராகுவின் நட்சத்திரத்தில் சுக்கிரன் பயணிப்பதால் பிரம்மாண்டமான விஷயங்களில் உங்களை ஈடுபடுத்துக் கொள்வீர்கள். கலைத் துறையில் நல்ல கெளரவம் கிடைக்கும். வெளிநாட்டு சம்பந்தமான விஷயங்களில் ஈடுபடுத்திக் கொள்வீர்கள்.

எச்சரிக்கை

ஆண்கள் பெண்கள் சார்ந்த விஷயங்களிலும், பெண்கள் ஆண்கள் சார்ந்த விஷயங்களிலும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. சுக்கிரன் புனர்பூசம் நட்சத்திரத்தில் பயணிப்பதால் பொருளாதாரம் சிறப்பு பெறும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பணத்தை அள்ளி அள்ளி கொடுக்கக்கூடிய தன்மை ஏற்படும். தொழிலை விரிவுபடுத்தும் எண்ணம் ஓங்கும். தொழிலால் புகழ் பெறுவீர்கள்.

வழிபாடு

கூட்டுத் தொழில்கள், கூட்டாளிகள் விஷயத்தில் நன்மை கிடைக்கும். திடீர் அதிர்ஷ்டம், ஜாக்பாட் அதிக்கும் காலகட்டமாக இருக்கும். உறவுகள் சார்ந்த விஷயத்தில் அனுசரணையாக செல்வது நல்லது. ஸ்ரீரங்கம் சென்று வழிபடுவதும், தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் பட்டு வஸ்திரம் சாற்றி வழிபடுவதும் குடும்பத்திலும், பண விஷயத்திலும் நன்மையை ஏற்படுத்தும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+