குரு, சுக்கிரன் இணைவால் சிம்ம ராசிக்கு புதிய வீடு, கார் வாங்கும் யோகம்.. பண மழை கொட்டும்
சுக்கிர பெயர்ச்சி: ஒவ்வொரு கிரகங்களும் சீரான இடைவெளியில் பெயர்ச்சி ஆகி கொண்டே இருக்கும். இது ஜோதிட ரீதியாக மாற்றங்களை ஏற்படுத்தும். அந்த வகையில் இந்த மாதம் ஏராளமான மாற்றங்களை கண்டுள்ளது. அந்த வகையில் ஜூலை 26 ஆம் தேதி இன்று சுக்கிரன் பெயர்ச்சி ஆகிறார். இது சிம்ம ராசிக்கு கொடுக்கும் பலன்களை இந்தக் கட்டுரையில் காணலாம்.
சுக்கிரன் பகவான் வருகிற ஜூலை 26 ஆம் தேதி ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அங்கு அவர் ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி வரை இருக்கப் போகிறார். மிதுனத்தில் ஏற்கனவே குரு பகவான் உள்ளார். இந்த 26 நாட்கள் சுக்கிர பகவான், குருவுடன் இணைந்து பயணிக்க போகிறார். இதில் குரு - சுக்கிர இணைவும் நடக்கிறது.

அதிலும் சுக்கிர பகவான் ஜூலை 26-31 ஆகிய 6 நாட்கள் செவ்வாய் பகவானின் நட்சத்திரமான மிருகசீரிசம் நட்சத்திரத்தில் பயணிக்க உள்ளார். ஆகஸ்ட் 1-11 தேதிகளில் சுக்கிரன் ராகு பகவானின் திருவாதிரை நட்சத்திரத்தில் பயணிக்கிறார். ஆகஸ்ட் 12-20 குரு பகவானின் நட்சத்திரத்தில் சுக்கிரன் பயணிக்க உள்ளார். இது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.
பொதுவாக குரு பகவான் செல்வம், சுக ஸ்தானம், மகிழ்ச்சி ஆகியவற்றுக்கு அதிபதி. அதனால் சொசுகுசு வாழ்க்கைக்கு சுக்கிரனின் அமைப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதிலும் சுப கிரகங்களான குரு - சுக்கிரன் ஒன்றாக பயணிப்பதும் மிகவும் விஷேசமானது. இது 12 ராசிகளுக்கும் கொடுக்க போகும் பலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள் குறித்து விரிவாக காணலாம். இந்த கட்டுரையில் சிம்மம் ராசிக்கான பலன்களை பார்க்கலாம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு உங்கள் ராசிக்கு 11 ஆம் இடத்தில் குரு, சுக்கிரன் அமர்கின்றனர். சுக்கிரன் என்பது உங்களுக்கு 3க்கு உரியவர். முயற்சி மற்றும், தொழில் ஸ்தானத்தின் அதிபதி. தற்போது சுக்கிரன் லாப ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். முயற்சிகள் அனைத்திலும் வெற்றி காண்பீர்கள். சகோதர வகையில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சகோதரர்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்கிற எண்ணம் தோன்றும்.
ஆதாயம்
பிராயணங்கள் மூலமாக அனுகூலம், ஆதாயம் ஏற்படும். வியாபாரத்தின் மூலம் அனுகூலம், ஆதாயம் ஏற்படும். புத்திசாலித்தனத்துடன் செயல்படும் தன்மை உண்டாகும். எந்த இடத்தில் எதை செய்ய வேண்டும். பேச வேண்டும் என்கிற தெளிவு பெறுவீர்கள். மன ரீதியாக குழப்பம் ஏற்பட்டாலும், செய்யும் செயலில் திருப்தி உண்டாகும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். சிறு, சிறு பிரச்சனைகள் நீங்கும் காலகட்டமாக இருக்கும்.
வீடு வாங்கும் யோகம்
சுக்கிரன் வீட்டுக்கு காரகனாக இருப்பதால் பத்திரப் பதிவு செய்யும் யோகம் உண்டு. வீடு, நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். வீட்டை புனரமைப்பது, அழகுப்படுத்துவது போன்றவற்றை செய்வீர்கள். கலைத் துறையில் ஈடுபாடு அதிகரிக்கும். இசை தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். கதை, கட்டுரை, வசனம் எழுதும் துறை போன்றவை சிறப்பு பெறும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். சினிமா, மீடியா துறைக்குள் நுழையும் யோகம் உண்டாகும்.
பெயர், புகழ்
உங்களை நீங்கள் வெளிக்கொண்டு வரும் அம்சம் சிறப்பு பெறும். எந்த தொழில்களை நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்களோ அதன் மூலம் அபரிமிதமான லாபம் கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு மதிப்பு, மரியாதை கூடும். கூடுதல் பொறுப்புகளை திறம்பட செய்வீர்கள். ஆளுமைத் தன்மை, பெயர், புகழ் உண்டாகும். பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும்.
பதவி உயர்வு
வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். விரும்பும் இடங்களுக்கு இடமாற்றம் கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல புதிய வேலைகள் கிடைக்கும். தொழிலில் அலைச்சல், டென்சன் இருப்பவர்களுக்கு அதிலிருந்து விடுதலை அடைவீர்கள். தனம், லாபம் கிடைக்கும். ஆகஸ்ட் 20 ஆம் தேதி வரை பணம் சார்ந்த விஷயங்கள் அனைத்தும் சிறப்பு பெறும்.
பண வரவு அதிகரிக்கும்
சுக்கிரனும், குருவும் லாப ஸ்தானத்தில் இணைந்துள்ளதால் பண வரவு அபரிமிதமாக இருக்கும். வேலை, வியாபாரம், தொழிலில் பண வரவு உண்டாகும். பணத்தை கொடுக்கக்கூடிய கிரகங்கள் ஒன்றுகூடிய இருப்பதால் அபரிமிதமானதாக இருக்கும். குருவும், சுக்கிரனும் எதிர்தன்மை கொண்டவர்கள் என்பதால் கணவன், மனைவி, உறவுகள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
குழந்தை பாக்கியம்
சுக்கிரன் ஜூலை 31 வரை செவ்வாயின் நட்சத்திரத்தில் பயணிப்பதால் தகப்பான் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். வீடு, வண்டி, வாகனம் வாங்கும் யோகம் உண்டு. குழந்தை பாக்கியம் கிடைக்கும். எதிர்பாராத விதத்தில் நன்மைகள் கிடைக்கும் காலகட்டமாக இருக்கும். ஆகஸ்ட் 1 முதல் 11 ஆம் தேதி வரை ராகு நட்சத்திர சாரத்தில் பயணிப்பதால் வெளிநாடு, வெளிமாநிலம் சென்று வருவதற்கான யோகம் உண்டாகும்.
கவனம்
ஆண்களாக இருந்தால் பெண்கள் சார்ந்த விஷயத்திலும், பெண்களாக இருந்தால் ஆண்களுடைய விஷயத்திலும் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. ஆகஸ்ட் 12 முதல் 20 ஆம் தேதி வரை குருவின் நட்சத்திரத்தில் பயணிப்பதால் குழந்தைகள் சார்ந்த விஷயங்களில் அனுகூலம் ஏற்படும். பூர்வீகம், குழந்தைகள் சார்ந்த சிந்தனை ஓங்கும். ஆன்மீக விஷயங்களில் செயல்படுவீர்கள். குலதெய்வத்தை சென்று வழிபடும் யோகம் உண்டாகும். அஷ்டம சனி நடப்பதால் மனம் பாதிக்கும். புதிய விஷயங்களை தொடங்கும்போது கவனம்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications