மீனம் ராசிக்கு ஜாக்பாட்.. சுக்கிரனால் அடுத்த 26 நாட்களில் நடக்க போகும் மேஜிக்
சுக்கிர பெயர்ச்சி: ஒவ்வொரு கிரகங்களும் சீரான இடைவெளியில் பெயர்ச்சி ஆகி கொண்டே இருக்கும். இது ஜோதிட ரீதியாக மாற்றங்களை ஏற்படுத்தும். அந்த வகையில் இந்த மாதம் ஏராளமான மாற்றங்களை கண்டுள்ளது. அந்த வகையில் ஜூலை 26 ஆம் தேதி இன்று சுக்கிரன் பெயர்ச்சி ஆகிறார். இது மீனம் ராசிக்கு கொடுக்கும் பலன்களை இந்தக் கட்டுரையில் காணலாம்.
சுக்கிரன் பகவான் வருகிற ஜூலை 26 ஆம் தேதி ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அங்கு அவர் ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி வரை இருக்கப் போகிறார். மிதுனத்தில் ஏற்கனவே குரு பகவான் உள்ளார். இந்த 26 நாட்கள் சுக்கிர பகவான், குருவுடன் இணைந்து பயணிக்க போகிறார். இதில் குரு - சுக்கிர இணைவும் நடக்கிறது.

அதிலும் சுக்கிர பகவான் ஜூலை 26-31 ஆகிய 6 நாட்கள் செவ்வாய் பகவானின் நட்சத்திரமான மிருகசீரிசம் நட்சத்திரத்தில் பயணிக்க உள்ளார். ஆகஸ்ட் 1-11 தேதிகளில் சுக்கிரன் ராகு பகவானின் திருவாதிரை நட்சத்திரத்தில் பயணிக்கிறார். ஆகஸ்ட் 12-20 தேதிகளில் குரு பகவானின் நட்சத்திரத்தில் சுக்கிரன் பயணிக்க உள்ளார். இது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.
பொதுவாக குரு பகவான் செல்வம், சுக ஸ்தானம், மகிழ்ச்சி ஆகியவற்றுக்கு அதிபதி. அதனால் சொசுகுசு வாழ்க்கைக்கு சுக்கிரனின் அமைப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதிலும் சுப கிரகங்களான குரு - சுக்கிரன் ஒன்றாக பயணிப்பதும் மிகவும் விஷேசமானது. இது 12 ராசிகளுக்கும் கொடுக்க போகும் பலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள் குறித்து விரிவாக காணலாம். இந்த கட்டுரையில் மீனம் ராசிக்கான பலன்களை பார்க்கலாம்.
மீனம்
மீனம் ராசிக்கு சுக்கிர பகவான் உங்களின் நான்காம் இடமாக சுக ஸ்தானத்தில் அமர்ந்துள்ளார். அங்கு ஏற்கனவே உங்களின் ராசி அதிபதி குரு பகவான் இருக்கிறார். அடுத்த 26 நாட்கள் அங்கு குரு - சுக்கிரன் இணைந்து பயனை தரப்போகிறார்கள். பொதுவாக சுக்கிரன் உங்களின் மூன்றாம் இடமான முயற்சி ஸ்தானத்துக்கு அதிபதி. தைரியம், வீரியம், தன்னம்பிக்கையை அதிகளவு தருவார்.
சொந்த வீடு.. வாகனம்
மேலும் திடீர் அதிர்ஷ்டங்களுடன் அவ்வபோது வலி மற்றும் வேதனையையும் தருவார். அவர் நான்காம் இடத்தில் வலிமையாகி திக் பலமடைந்துள்ளார். இது அற்புதமான அமைப்பாகும். சொகுசு வாழ்க்கை வாழ்வதற்கான எண்ண ஓட்டம் அதிகரிக்கும். சொந்த வீடு, நிலம், வண்டி, வாகனம் ஆகியவற்றின் மீது அதிகளவு நாட்டம் ஏற்படும்.
தொழில் லாபம்
சொந்த வீடு, நிலம், வண்டி, வாகனம் ஆகியவற்றில் இருந்த தடைகள் விலகும். நீங்கள் எதிர்பார்த்தபடி வண்டி, வாகனம், வீடு, நிலம் வாங்குவதற்கான அமைப்பு உள்ளது. மனதில் இருந்த குழப்பங்கள் முற்றிலும் விலகும். தாய் வழி உறவில் இருந்த சிக்கல்கள் நீங்கி அவரால் ஆதாயம் ஏற்படும். தாய் வழி உறவு சொத்துகளில் இருந்த பிரச்னைகள் நீங்கும். தொழிலில் லாபம் இருக்கும்.
பண வரவு.. ஜாக்பாட்
பண வரவு சிறப்பாக இருக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உத்யோகம், தொழிலில் இரண்டிலும் ஏற்றம் காணப்படும். பணப்புழக்கம் நன்றாகவே இருக்கும். கடன் சுமை குறையும். வளர்ச்சிக்கு உதவும் வகையில் திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். மனதில் நினைத்தது நடைபெறும். உத்யோகத்தில் பதவி உயர்வு, எதிர்பாராத ஜாக்பாட், பங்குசந்தையில் லாபம் கிடைப்பதற்கு வாய்ப்புள்ளது.
ஆரோக்கியம் கவனம்
அதேநேரத்தில் உங்களின் உடல் ஆரோக்கியத்தின் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். குரு - சுக்கிரன் இணைந்தால் ஆரோக்கியத்தில் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் இருப்பவர்கள் ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும். அவ்வப்போது எதிர்மறை எண்ணங்கள் வந்து செல்லும்.
பரிகாரம்
தொழிலில் அழுத்தம் இருக்கும். உத்யோகம், தொழிலில் பணிச்சுமை, அலைச்சல் அதிகரிக்கும். ஜென்ம சனி இருப்பதால் பணத்தை கையாள்வதில் எச்சரிக்கை அவசியம். ராகு விரய ஸ்தானத்தில் இருப்பதால் வீண் விரயம் ஏற்பட வாய்ப்புள்ளது. யாரையும் நம்பி கடன் கொடுக்க வேண்டாம். எதிர் பாலினத்தவர் விஷயத்தில் கவனம் வேண்டும். தட்சிணாமூர்த்தி வழிபாடு நல்ல பலன்களை கொடுக்கும்.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே












Click it and Unblock the Notifications