சுக்கிரன், புதனால் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம் - இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட்
சென்னை: 2025 ஆம் ஆண்டு பல முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி உள்ளது. சில கிரகங்கள் ஒன்றாக பயணிக்க உள்ளன. இது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். இந்நிலையில் மீனம் ராசியில் சுக்கிரன், புதன் ஒன்றாக பயணிப்பதால் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகி அது 4 ராசிகளுக்கு சிறப்பான பலன்களை அள்ளித் தரப்போகிறது.
புதன் கிரகம் பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறது. அங்கு ஏற்கனவே ராகு மற்றும் சுக்கிரன் பகவான்கள் இருக்கின்றனர். இந்த கிரகங்கள் இணைந்து பயணிப்பதால் நல்ல யோகங்கள் கிடைக்க போகின்றன. மே மாதம் வரை இந்த பலன்கள் என்றால் அதன் பிறகு மற்றொரு யோகம் உருவாகிறது. புதன் பகவான் மே 7 ஆம் தேதி மீனம் ராசியில் இருந்து மேஷம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.

மேலும் சுக்கிரன் மே 31 ஆம் தேதி மீனத்தில் இருந்து மேஷம் ராசிக்கு பெயர்கிறார். மீனம் ராசியில் புதன் மற்றும் சுக்கிரன் இணைய உள்ளதால் லட்சுமி நாராயண ராஜயோகம் கிடைக்க போகிறது. இதன் காரணமாக மிதுனம், கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய 4 ராசிகள் அதிகளவு பயன்பெற போகின்றன.
மிதுனம்: மிதுனம் ராசியினர் அண்மை காலமாக அதிகளவு பிரச்னைகளை சந்தித்திருப்பார்கள். லட்சுமி நாராயண ராஜயோகத்தால் கடந்த சில ஆண்டுகளாக நிலுவையில் உள்ள பணிகளை முடிப்பீர்கள். சொந்த வீடு, வீட்டு மனை போன்ற நீண்ட கால கனவுகள் இந்த காலகட்டத்தில் நிறைவேறும். முதலீடு சார்ந்த விஷயங்களில் அனுபவம் வாய்ந்தவர்களுடன் கலந்தாலோசித்து முடிவு செய்வது நல்ல பலன்களை தரும்.
பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள், கசப்புகள் நீங்கி வீட்டில் மகிழ்ச்சி பொங்கும். உத்யோகம் மற்றும் தொழிலில் லாபம் உயரும். கணவன் - மனைவி உறவில் அன்யோன்யம் அதிகரிக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டு. மொத்தத்தில் இந்த லட்சுமி நாராயண ராஜயோகம் உங்கள் மனதுக்கு நிறைவான பலன்களை அள்ளி கொடுக்கும்.
கடகம்: கடகம் ராசியினரின் நீண்ட கால ஆசைகள் நிறைவேறும் காலம் இது. பண வரவு பல மடங்கு அதிகரிக்கும். தொழிலில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். பழைய பாக்கி வசூலாகும். நிதி சார்ந்த வழக்குகளில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும். ஆரோக்கியத்தில் இருந்த பிரச்னைகள் நீங்கி உடல் நலனில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
உத்யோகம் தொடர்பாக அதிகளவு பயணங்கள் மேற்கொள்வீர்கள். பயணங்களால் நிதி ஆதாயம் உண்டு. தொழிலில் விருத்தியடையும். கடன் நெருக்கடி நீங்கும். வெளிநாட்டு பணிகளுக்கு முயற்சி செய்வோருக்கு வெற்றி கிடைக்கும். அதேபோல மாணவர்கள் போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்று தங்களது கனவுகளை நோ.க்கி உற்சாகமாக பயணிப்பார்கள்.
விருச்சிகம்: விருச்சிகம் ராசிக்கு இந்த காலத்தில் நிதி நெருக்கடி குறைந்து பண வரவு திருப்தியாக இருக்கும். வேறு பணிக்கு முயற்சி செய்வோருக்கு எதிர்பார்த்தபடி நல்ல நிறுவனத்தில் உயர் பதவியில் வேலை கிடைக்கும். பதவி உயர்வு, சம்பளம் உயர்வு கிடைக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
வியாபாரம் மற்றும் தொழிலில் ஏற்றம் உண்டு. தொழிலில் நீண்ட காலமாக திட்டமிட்ட விரிவாக்கம் நடக்கும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து உரிய நேரத்தில் பணம் கிடைக்கும். உத்யோகத்தில் உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சமூகத்தில் உங்களின் செயல் மற்றும் பேச்சுக்கு மதிப்பு, மரியாதை கூடும். வீடு, நிலம், நகை போன்ற சொத்துகளை வாங்குவீர்கள்.
மீனம்: மீனம் ராசிக்கு பண வரவு நன்றாக இருக்கும். எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் வீட்டு வாசல் கதவை தட்டும். அரசு நிர்வாகத்தின் உதவி, சலுகைகள் கிடைக்கும். பொருளாதாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். உங்களுக்கு அல்லது உங்கள் வீட்டில் ஒருவருக்கு அரசுப்பணி கிடைப்பதற்கு வாய்ப்புள்ளது.
காதல் மற்றும் கணவன் - மனைவி உறவில் இனிமை பிறக்கும். சுபகாரியங்களில் இருந்த தடைகள் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். நீண்ட காலமாக திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் வாய்ப்பு உள்ளது. அதேபோல குழந்தை பாக்கியத்துக்காக ஏங்கி கொண்டிருப்போருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications