Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சுக்கிரன் பெயர்ச்சி 2020: காதல் மழையில் நனையப்போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா

சுக்கிரன் சுகாதிபதி. நீச்ச நிலையில் இருந்த சுக்கிரன் இன்று முதல் துலாம் ராசியில் ஆட்சி பெற்று சஞ்சரிக்கிறார். இந்த சுக்கிரன் பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம

Subscribe to Oneindia Tamil

சென்னை: கார்த்திகை மாதம் அடை மழை காலம் இந்த கார்த்திகையில் காதல் நாயகன் சுக்கிரன் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார். சுக்கிரனுக்கு துலாம் ஆட்சி வீடு. ஆட்சி பெற்று அமரும் சுக்கிரனால் சிலருக்கு மாளவியா யோகமும் சிலருக்கு விபரீத ராஜயோகமும் கிடைக்கும். இந்த சுக்கிர பெயர்ச்சியால் காதல் மழையில் நனையப்போகும் ராசிக்காரர்கள் யார் என்று பார்க்கலாம்.

சுக்கிரனின் சொந்த ராசிகளான ரிஷபம், துலாம் ராசிகளில் ஆட்சி பெறுகிறார். கன்னி ராசியில் நீச்சமடையும் சுக்கிரன் மீனம் ராசியில் நீச்சமடைகிறார். எதிரியின் வீட்டில் உச்சம் அடையும் ஒரே கிரகம் சுக்கிரன்தான். சுக்கிரன், தான் நின்ற ராசியில் இருந்து 7 ம் பார்வையாக பிற ராசியைப் பார்ப்பார்.

சுக்கிரன் அசுர குரு. யோகத்தையும் சுகத்தையும் தருவார் சுக்கிரன். அறுசுவை உணவை சுவைக்க வைப்பார். சொசுகு வாழ்க்கை வாழ வைப்பவர் அவர்தான். மாடி வீடு மெத்தை சுகம், கணவன் மனைவி சந்தோஷத்தையும் தரக்கூடியவர் அவரே. சுக்கிரன் ஒருவரின் ஜாதகத்தில் பலமாக இருந்தால் போதும் அவருக்கு சந்தோஷங்கள் அபரிமிதமாக இருக்கும். ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரன் பாதிக்கப்பட்டிருந்தால் மறைமுகமான நோய்களை தருவார். சிலருக்கு பாலியல் தொடர்பான நோய்களும் ஏற்படும். கணவன் மனைவி உறவும் பாதிக்கப்படும். இந்த சுக்கிர பெயர்ச்சியால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி என்று பார்க்கலாம்.

மேஷம்

மேஷம்

மேஷம் ராசிக்கு சுக்கிரன் 2ஆம் வீடான தனம் வாக்கு 7ஆம் வீடான களத்திர ஸ்தான அதிபதி, காதல் நாயகன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு 7ஆம் இடத்தில் களத்திர ஸ்தானத்தில் அமரப்போவதால் வாழ்க்கை துணை உடனான காதல் உணர்வுகள் அதிகரிக்கும். நேரடியாக சுக்கிரன் பார்வை உங்கள் ராசி மீது விழுவதால் சிலருக்கு காதல் கணிந்து திருமணத்திலும் முடிய வாய்ப்பு உள்ளது. தொழில் விசயத்தில் ஜாக்கிரதையாக இருக்கவும். ஏற்கனவே புத்தி நாதன் புதன் ஏழாம் விட்டில் அமர்ந்து உங்க ராசியை பார்வையிடுவது நன்மை தரும் அமைப்பாகும். புதன் சுக்கிரன் பார்வை உங்க ராசிக்கு கிடைப்பதால் மகிழ்ச்சி அதிகரிக்கும். மாளவியா யோகத்தினால் இதுநாள்வரை தடைபட்டிருந்த காரியங்கள் இனி வெற்றிகரமாக முடிவடையும்.

ரிஷபம்

ரிஷபம்

ராசிநாதன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு 6வது இடத்தில் மறைவதால் உங்கள் உடல் நலனையும் பாக்கெட்டில் உள்ள பணத்தையும் பத்திரமாக பார்த்துக்கொள்ளவும். ஆறாம் வீட்டு அதிபதி ஆறில் மறைவது விபரீத ராஜயோகம். திடீர் பண வரவு வரும். வீட்டில் வாழ்க்கைத்துணையினால் சின்னச்சின்ன சச்சரவுகள், ஊடல்கள் ஏற்பட்டு அதனால் சிலருக்கு மன அழுத்தம் ஏற்படும். பாக்கெட்டில் உள்ள பணத்தை பத்திரமாக பார்த்துக்கொள்ளவும். இனிமையான பேச்சுக்களால் மனைவியை சந்தோஷப்படுத்துங்கள். வேலை பார்க்கும் இடத்தில் உழைப்பு அதிகரிக்கும்.

மிதுனம்

மிதுனம்

சுக்கிரன் உங்கள் ராசிக்கு 5ஆம் வீட்டில் சஞ்சரிக்கிறார் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சுக்கிரன் அமர்வதால் உற்சாகம் கொப்பளிக்கும். உங்களுக்கு கற்பனை வளமும் அழகுணர்ச்சியும் அதிகரிக்கும். வீட்டில் மனைவி, குழந்தைகள் மீது அன்பும் பாசமும் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைவர் உங்கள் மீது காதல் மழை பொழியும் நேரமிது. பொருளாதார நிலை உயரும். படிப்பில் நாட்டம் அதிகரிக்கும். திருமணமாகாத பிள்ளைகளுக்கு நல்ல வரன் தேடி வரும். பூர்வீக சொத்துக்களின் பாக பிரிவினையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். ஆசைகள் நிறைவேறும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். பெற்றோர்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பெற்றவர்களின் மனதில் இருந்த கவலை நீங்கும். காரியங்கள் சாதகமாக முடியும். கணவன் மனைவிக்குள் அன்பும் நெருக்கமும் அதிகரிக்கும். பணவரவு அதிகரிக்கும்.

கடகம்

கடகம்

சுக்கிரன் உங்கள் ராசிக்கு 4வது வீட்டில் அமரப்போவதால் சிலர் வீடுகளை பராமரிப்பு செய்வீர்கள். அம்மாவின் உடல் நலத்தில் அக்கறை தேவை. வீட்டுக்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். நினைத்த காரியங்கள் நிறைவேறும். செயல்களால் புகழ் அடைவீர்கள். உதவும் மனப்பான்மை அதிகமாகும். தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். புதிய வீடு கட்டுபவர்களுக்கு லோன் கிடைக்கும். பணியிடத்தில் இருந்த பிரச்சினை விலகும். வேலைப்பளு குறையும் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.

சிம்மம்

சிம்மம்

தன வாக்கு ஸ்தானத்தில் அமர்ந்து இருந்த சுக்கிரன் இன்று முதல் 3ஆம் இடமான முயற்சி ஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமர்கிறார். உங்களின் பேச்சுத்திறமை கூடும். உங்கள் நட்பு வட்டம் அதிகரிக்கும். உடல் நலத்தில் அவ்வப்போது கவனம் தேவை. உடல் நலனில் சின்னச் பிரச்சினைகள் ஏற்பட்டால் உடனே அக்கறையோடு கவனியுங்கள். சிறு ஆன்மீகப் பயணம் செல்ல வேண்டியிருக்கும். தங்கைகளுக்கு வரன் கூடி வரும் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். தொலைந்த விலை உயர்ந்த பொருட்கள் கிடைக்கும். அண்டை அயலாருடன் இருந்த பிரச்சினைகள் தீரும். காதல் ஜோடிகள் கவனமாக இருக்கவும். மருத்துவ செலவுகள் ஏற்படும். தூக்கமின்மை பிரச்சினை ஏற்படும். நெருப்பு, இயந்திரங்களில் கவனம் தேவை. கணவன் மனைவி இடையே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. வேலை விசயமாக சிறுபயணம் செல்ல வேண்டியிருக்கும்.

கன்னி

கன்னி

கன்னி ராசியில் நீச்சம் பெற்றிருந்த சுக்கிரன் தன வாக்கு ஸ்தானத்தில் அமரப்போகிறார். உங்களின் செல்வாக்கும், சொல்வாக்கும் அதிகரிக்கப் போகும் காலமிது. திருமண வயதில் இருப்பவா்களுக்கு வரன் தேடி முடிக்கலாம். சிலருக்கு குழந்தைபாக்கியம் ஏற்படும் காலமிது. கணவன் மனைவிக்கு இடையே காதல் அதிகரிக்கும். தன ஸ்தான சுக்கிரனால் பண வருமானம் அதிகாிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். பெண்கள் விலை உயர்ந்த நகைகள் பணம் வாங்குவீர்கள். பண வருவாய் அதிகாிக்கும்.

துலாம்

துலாம்

உங்கள் ராசி நாயகன் சுக்கிரன் உங்கள் ராசியில் ஆட்சி பெற்று சஞ்சரிக்கிறார். பொன்னும் பொருளும் சேரும் நேரம் இது. தங்க நகைகள் வாங்கலாம். ஆடம்பரமான பொருட்களை வாங்குவதால் சுப செலவுகள் ஏற்படும். சிலருக்கு உணவு மூலம் பிரச்சினைகள் வரலாம் என்பதால் ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும். சிலருக்கு வயிற்றில் பிரச்சினைகள் வரலாம். காதலிப்பவர்கள் உங்கள் அன்பானவர்களிடம் காதலை தைரியமாக சொல்லுங்கள். வெற்றியில் முடியும்.

விருச்சிகம்

விருச்சிகம்

உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானமாக 12வது வீட்டில் சுக்கிரன் சுப விரையம் ஏற்படும் ஆடம்பர செலவு ஏற்படும். 12ஆம் அதிபதி 12ஆம் வீட்டில் ஆட்சி பெற்று அமரப்போகிறார். விபரீத ராஜயோகம் கிடைக்கப் போகிறது. டிவி பிாிட்ஜ், ஏசி பொருட்கள் வாங்கலாம். பணவரவு சிலருக்கு உற்சாகத்தை தரும். பணம் வரும் போது பத்திரப்படுத்துங்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடைபெறும். வாழ்க்கை துணையுடன் அந்நியோன்னியம் அதிகரிக்கும். காதல் துணையுடன் செல்லும் பயணம் சந்தோஷத்தை கொடுக்கும்.

தனுசு

தனுசு

ராசிக்கு 11வது வீடான லாப ஸ்தானத்தில் அமரும் சுக்கிரனால் பண வருவாய் அதிகாிக்கும். அரசனுக்கு இணையான வாழ்க்கை கிடைக்கும் காலமாகும். வண்டி வாகன வசதி மேம்படும். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். திருமண வாழ்க்கையில் உற்சாகமடையும் வகையில் பல செயல்கள் நடைபெறும் மாதம் இது. பண வருமானம் அதிகாிக்கும். பிள்ளைகள் வழியில் சிறப்பான பலன்களை எதிா்பாா்க்கலாம். வீடு நிலம் வகையில் ஆதாயம் கிடைக்கும். பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகள் தேடி வரும்.

மகரம்

மகரம்

உங்கள் ராசிக்கு 10வது வீட்டில் தொழில் ஸ்தானத்தில் சுக்கிரன் அமர்வதால் உங்கள் வேலையில், தொழிலில் உற்சாகத்தை ஏற்படுத்தும். பத்துக்கு அதிபதி பத்தில் ஆட்சி பெற்று அமர்வது மாளவியா யோகம் தரும் அமைப்பு என்பதால் நன்மைகளும் சந்தோஷங்களும் ஏற்படும். பணி இடத்தில் வார்த்தைகளில் கவனம் தேவை. அமைதியாக நிதானமாக பேசவும். குடும்பத்தில் மனைவியுடனே அல்லது காதலியுடனே சின்னச் சின்ன ஊடல் ஏற்படலாம் சமாளியுங்கள். கோபப்பட்டு பேசி பிரச்சினையை ஏற்படுத்த வேண்டாம்.

கும்பம்

கும்பம்

சுக்கிரன் உங்களுக்கு சுக ஸ்தான அதிபதியும் ஒன்பதாம் வீட்டிற்கு அதிபதியும் ஆவார். உங்க ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் பாக்ய ஸ்தான அதிபதி சுக்கிரன் ஆட்சி பெற்று அமர்வதால் வீட்டில் மனைவியின் அன்பான ஆதரவு கிடைக்கும். காதலி நண்பர்கள், உறவினர்களுடன் உற்சாகமாக இருக்கும் காலம் இது. நீங்கள் வேலை செய்யும் இடத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். கணவன் மனைவி உறவில் சந்தோஷங்கள் ஏற்படும். காதல் ரொமான்ஸ் நினைவுகள் அதிகரிக்கும். காதலிப்பவர்களுக்கு இந்த மாதம் குதூகலமாக அமையும்.

மீனம்

மீனம்

உங்க ராசிக்கு எட்டாம் வீடான துலாம் ராசியில் ஆட்சி பெற்று அமரப்போவது விபரீத ராஜயோக அமைப்பாகும். உங்க ராசியில் உச்சம் பெறும் சுக்கிரன், எட்டில் மறையப்போவது ராஜயோகம்தான். இருந்தாலும் எட்டாம் இடத்தில் சுக்கிரன் மறைவதால் வீட்டில் மனைவியின் உடல் நலத்தில் கவனம் வைக்கவும். இருவருமே கவனமாக இருந்தால் பாதிப்பை தவிர்க்கலாம். இல்லாவிட்டால் மருத்துவ செலவுகள் எற்படும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+