Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சுக்கிரன் பெயர்ச்சி 2022: சுகம், சந்தோஷம், நிம்மதி..இந்த 5 ராசிக்காரர்களுக்கு தேடி வரும்! என்ஜாய்!!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பணத்தை விட உடல் ஆரோக்கியம் அதிகரிக்க வேண்டும் என்று இன்றைக்கு பலரும் வேண்டிக்கொண்டிருக்கின்றனர். மன நிம்மதிக்காக பலரும் இறைவனை நாடுகின்றன. கார்த்திகை மாதத்தில் சுக்கிரன் பெயர்ச்சி நிகழ உள்ளது. இதுநாள் வரை துலாம் ராசியில் சஞ்சரித்த சுக்கிரன் நவம்பர் 11ஆம் தேதி முதல் விருச்சிக ராசியில் பயணம் செய்யப்போகிறார். சில நாட்களில் சூரியனும் புதனும் இணையப்போகின்றனர். இந்த சுக்கிரப் பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு மன நிம்மதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

ஆடம்பரத்திற்கும் அழகியலுக்கும் காரணகர்த்தாவான சுக்கிரன் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாதம் ஒருமுறை இடம் பெயர்கிறார். சுக்ரன் என்றால் இன்பம். மனித வாழ்க்கையில் அன்பு, பாசம், காதல் ஆகிய மூன்று இன்பங்களை அளிக்கக் கூடியவர். சுக்கிரன் சுக போகங்களின் அதிபதி. களத்திரகாரகன் சுக்கிரன் வாழ்க்கைத் துணையை அமைத்துக் கொடுப்பவர். ஆகையால் சுக்கிரன் நமது ஜாதக கட்டத்தில் நல்ல யோக அம்சத்துடன் இருப்பது அவசியம். இவருடைய தசா காலமான 20 வருடங்களில் மிகப்பெரிய ராஜ யோக பலன்கள் உண்டாகும். ஒவ்வொரு மாதமும் சுக்கிரப் பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு சுகபோகங்களை அள்ளித்தரும். சில ராசிக்காரர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

சுக்கிரன் களத்திரகாரகன் செவ்வாயை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார் சுக்கிரன். நவ கிரகங்களில் சுபர் சுக்கிரன். ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரன் வலுப்பெற வேண்டும். சுக்கிரன் வலிமையான நிலையில் இருந்தால் ஆடம்பர வாழ்க்கை கிடைக்கும். வண்டி வாகன சேர்க்கை ஏற்படும். சுகங்களைத் தருபவர் சுக்கிரன் குடும்ப வாழ்க்கையில் சந்தோஷத்தை தருபவர் சுக்கிரன். காதல் நாயகன் சுக்கிரன்
எந்த ராசிக்காரர்களுக்கு அற்புதங்களை நிகழ்த்தப்போகிறார் என்று பார்க்கலாம்.

மேஷம்

மேஷம்

உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் சுக்கிரன் மறைவதால் வீட்டில் தம்பதியர் இடையே சின்னச் ஊடல்கள் அவ்வப்போது எட்டிப்பார்க்கும். வாழ்க்கைத்துணையின் உடல் நலத்தில் கவனம் வைக்கவும். இருவருமே கவனமாக இருந்தால் பாதிப்பை தவிர்க்கலாம். இல்லாவிட்டால் மருத்துவ செலவுகள் எற்படும். விலை உயர்ந்த பொருட்களைப் பத்திரப்படுத்தவும். திடீர் செலவு வருகிறதே என்று கவலைப் பட வேண்டாம் கூடவே பண வரவும் அதிகரிக்கும். பாதிப்பை குறைக்க வெள்ளிக்கிழமையன்று துர்க்கை அம்மணுக்கு விளக்கேற்றி துர்க்கா மந்திரம் சொல்லி வணங்கலாம்.

ரிஷபம்

ரிஷபம்

காதல் நாயகன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு 7ஆம் வீட்டில் களத்திர ஸ்தானத்தில் அமரப்போவதால் வாழ்க்கை துணை உடனான காதல் உணர்வுகள் அதிகரிக்கும். சுக்கிரன் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் சிலருக்கு காதல் கணிந்து திருமணத்திலும் முடிய வாய்ப்பு உள்ளது. பெற்றோர் சம்மதத்துடன் கல்யாணம் நடைபெறும். சிலருடைய தசாபுத்திக்கு ஏற்ப குடும்ப வாழ்க்கையில் சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வேலை தொழில் விசயத்தில் ஜாக்கிரதையாக இருக்கவும். அலுவலகத்தில் எதிர்பாலினத்தவர்கள் விசயத்தில் சற்று கவனமாக இருக்கவும். இல்லை எனில் மதிப்பு மரியாதைக்கு பங்கம் ஏற்பட்டு விடும். வெள்ளிக்கிழமைகளில் சுக்கிர ஓரையில் விளக்கேற்றி வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

மிதுனம்

மிதுனம்

சுக்கிரன் உங்கள் ராசிக்கு 6வது இடத்தில் மறைவதால் உங்கள் உடல் நலனையும் பாக்கெட்டில் உள்ள பணத்தையும் பத்திரமாக பார்த்துக்கொள்ளவும். வீட்டில் வாழ்க்கைத்துணையினால் சின்னச்சின்ன சச்சரவுகள், ஊடல்கள் ஏற்பட்டு அதனால் சிலருக்கு மன அழுத்தம் ஏற்படும். அஷ்டமத்து சனி வேறு கஷ்டத்தை ஏற்படுத்துவார். வேலை பார்க்கும் இடத்தில் கடும் உழைப்பை கொடுக்க வேண்டிய காலமிது. கவலைகள், சங்கடங்கள் சூழும் காலம் என்பதால் வெள்ளிக்கிழமை அம்மன் கோவிலுக்கு சென்று நெய்தீபம் ஏற்றி வணங்கலாம்.

கடகம்

கடகம்

காதல் நாயகன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு 5ஆம் வீட்டில் பயணம் செய்யப்போகிறார். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சுக்கிரன் அமர்வதால் வருமானம் அதிகரிக்கும். வீட்டில் மனைவி, குழந்தைகள் மீது அன்பும் பாசமும் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைவர் உங்கள் மீது பாச மழை பொழியும் நேரமிது. பண வரவு அதிகரிக்கும். பிள்ளைகளுக்கு சுப காரியம் நடைபெறும். புது வரவு உண்டாகும். வெள்ளிக்கிழமை அம்மன் கோவில்களில் விளக்கேற்ற மேலும் நன்மைகள் நடக்கும்.

சிம்மம்

சிம்மம்

சுக்கிரன் உங்கள் ராசிக்கு 4வது வீட்டில் பயணம் செய்யப்போகிறார். மிகப்பெரிய மகிழ்ச்சியும் நிம்மதியும் உண்டாகப்போகிறது. பொருளாதார வளம் ஏற்படப்போகிறது. உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். புதிய வேலைகள் வெற்றியைத் தரும். கார்த்திகை மாதத்தில் தொட்டது துலங்கப்போகிறது. காரணம் சுக்கிரன் சுகங்களையும் சந்தோஷங்களையும் தரப்போகிறார். வீட்டுக்குத் தேவையான ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள். சிலர் வீடுகளை பராமரிப்பு செய்வீர்கள். அம்மாவின் உடல் நலத்தில் அக்கறை செலுத்த வேண்டும். குடும்பத்தில் உறவினர்களால் சில சங்கடங்கள் வர வாய்ப்புள்ளதுபேச்சில் கவனம் தேவை. சண்டை ஏற்பட்டால் விட்டுக்கொடுத்து செல்லவும்.

கன்னி

கன்னி

ராசி நாயகன் சுக்கிரன் ராசிக்கு 3ஆம் இடமான முயற்சி ஸ்தானத்தில் அமரப்போகிறார். உங்களின் பேச்சுத்திறமையும், அழகியலும் அதிகரிக்கும். உங்கள் நட்பு வட்டம் அதிகரிக்கும். உடல் நலனில் சின்னச் சின்ன ஏற்படும். எனவே அவ்வப்போது அக்கறையோடு சிறு பிரச்சினைகளையும் கவனியுங்கள். சிறு ஆன்மீகப் பயணம் செல்ல வேண்டியிருக்கும். வெள்ளிக்கிழமை மகாலட்சுமி தாயாரை விளக்கேற்றி வழிபட நன்மைகள் நடக்கும். சிவன் கோவிலுக்கு சென்று சந்தனம் வாங்கித் தரலாம்.

துலாம்

துலாம்

இதுநாள் வரை உங்கள் ராசியில் சஞ்சாரம் செய்து வந்த ராசி நாதன் சுக்கிரன் இனி உங்கள் ராசிக்கு 2வது வீட்டில் பயணம் செய்யப்போகிறார். தன ஸ்தானத்தில் அமரப்போகும் சுக்கிரனால் பண வருவாய் அதிகாிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். பொருளாதார வளம் அதிகரிப்பதால் மன நிம்மதியும் சந்தோஷமும் உண்டாகும். கணவன் மனைவிக்கு இடையேயான காதல் உணர்வுகள் அதிகரிக்கும். திருமண வயதில் இருப்பவா்களுக்கு திருமண பாக்கியம் கை கூடி வரும். அம்மன் கோவிலுக்கு சென்று வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

விருச்சிகம்

விருச்சிகம்

காதல் நாயகன் சுக்கிரன் உங்கள் ராசியில் பயணம் செய்யப்போகிறார். பெண்களுக்கு பொன்னும் பொருளும் சேரும் நேரம் இது. ஆடம்பரமான பொருட்களை வாங்குவதால் சுப செலவுகள் ஏற்படும். கணவன் மனைவி இடையே காதல் உணர்வுகள் அதிகரிக்கும். முகத்தில் பொலிவு கூடும் அழகும் ஆரோக்கியமும் அதிகரிக்கும். மாணவர்களுக்கு மேற்படிப்பு படிக்க வழி கிடைக்கும். ஆலய வழிபாடு செய்வதால் பாதிப்புகள் குறையும்.

தனுசு

தனுசு

உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானமாக 12வது வீட்டில் சுக்கிரன் அமரப்போவதால் குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடைபெறும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கை துணையுடன் நெருக்கம் அதிகரிக்கும். பணவரவு சிலருக்கு உற்சாகத்தை தரும். பணம் வரும் போது பத்திரப்படுத்துங்கள். படிப்புக்காக சிலர் வெளிநாடு செல்வார்கள். வெள்ளிக்கிழமைகளில் சிவ ஆலயத்திற்கு பால் அபிஷேகம் செய்ய நன்மைகள் அதிகரிக்கும்.

மகரம்

மகரம்

சுக்கிரன் உங்கள் ராசிக்கு 11வது வீடான லாப ஸ்தானத்தில் அமரப்போகிறார். திருமண வாழ்க்கையில் உற்சாகமடையும் வகையில் பல செயல்கள் நடைபெறும் மாதம் இது. சிலருக்கு ஞானம் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் பண வருவாய் அதிகாிக்கும். பிள்ளைகள் மூலம் ஏற்பட்ட சிக்கல்கள் நீங்கும். வீடு நிலம் வகையில் ஆதாயம் கிடைக்கும். திருமணமாகி குழந்தைக்காக காத்திருக்கும் சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

கும்பம்

கும்பம்

உங்கள் ராசிக்கு 10வது வீட்டில் தொழில் ஸ்தானத்தில் சுக்கிரன் அமரப்போகிறார். தொழில் ஸ்தானத்தில் சுக்கிரன் அமரப் போவதால் உங்கள் வேலையில், தொழிலில் உற்சாகம் உண்டாகும். பத்தாம் இட சுக்கிரன் பதவியை தேடித்தருவார். அரசு வேலைக்கான தேர்வு எழுதியவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் வார்த்தைகளில் கவனம் தேவை. அமைதியாக நிதானமாக பேசவும். குடும்பத்தில் மனைவியுடனோ அல்லது காதலியுடனோ சின்னச் சின்ன பிரச்சினைகள் வரலாம் விட்டுக்கொடுத்து செல்லவும். பசுவிற்கு வாழைப்பழம், பச்சரிசி வெல்லம் வாங்கித்தர நன்மைகள் உண்டாகும்.

மீனம்

மீனம்

உங்கள் ராசிக்கு 9ஆவது வீட்டில் சுக்கிரன் அமரப்போகிறார். பாக்ய ஸ்தானத்தில் அமரும் சுக்கிரனால் வீட்டில் மனைவியின் அன்பான ஆதரவு கிடைக்கும். காதலி நண்பர்கள், உறவினர்களுடன் உற்சாகமாக இருக்கும் காலம் இது. காதலிப்பவர்களால் இந்த மாதம் உற்சாகம் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கையில் சிலருக்கு குழப்பம் ஏற்படலாம் கவனம் தேவை. வெள்ளிக்கிழமையன்று சிவபெருமானுக்கு அபிஷேகத்திற்கு சந்தனம் வாங்கித்தர நன்மைகள் உண்டாகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+