Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சுக்கிரன் பெயர்ச்சி 2023: ரிஷபத்தில் அமரும் காதல் நாயகன்..மாளவியா யோகத்தை அனுபவிக்கப்போவது யார்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நவ கிரகங்களில் சுக்கிரன் சுகத்தை தரக்கூடியவர். ரிஷப ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்துள்ள சுக்கிரனால் மேஷம் முதல் மீனம் வரை எந்த ராசிக்காரர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும். சுக்கிரன் தரும் யோகத்தால் என்னமாதிரியான அதிர்ஷ்டம் கிடைக்கப்போகிறது என்றும் பார்க்கலாம்.

சுக்கிரன் ரிஷப ராசியின் அதிபதி. இந்த ராசியில் அமர்ந்துள்ள சுக்கிரன் சந்திரனுடன் இணையும் போது சில மாற்றங்களை ஏற்படுத்துவார். புதனோடு சேர்ந்து பயணிக்கும் காலத்தில் சில அதிர்ஷ்டங்களைத் தரப்போகிறார்.

சுகங்களை அள்ளித் தருவதில் சுக்கிரனுக்கு நிகர் சுக்கிரன்தான். சுக்கிரன் மற்ற கிரகங்களுடன் சேர்ந்திருக்கும்போது பலன்கள் மாறுபடும். இன்னும் சில வாரங்கள் ரிஷப ராசியில் பயணிக்கும் சுக்கிரன் தரும் பலன்களைப் பார்க்கலாம்.

மேஷம்

மேஷம்

தனம், குடும்பம், வாக்கு ஸ்தானத்தில் பயணிக்கும் சுக்கிரனால் உங்களுக்கு யோகங்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. தன வருமானம் கூடும். பொருளாதார வளம் அதிகரிக்கும். வார்த்தைகளுக்கு மதிப்பு மரியாதை கூடும். பேச்சில் இனிமை கூடும். குடும்பத்தோடு அதிக நேரம் செலவு செய்வீர்கள். வேலை செய்யும் இடத்தில் மதிப்பு மரியாதை கூடும்.

ரிஷபம்

ரிஷபம்

ராசியில் அமரும் சுக்கிரனால் முகப்பொலிவு கூடும். அழகு சாதன பொருட்களை அதிகரிகரிப்பீர்கள். நட்பு வட்டாரம் அதிகரிக்கும். ஆளுமைத்திறமை அதிகரிக்கும். மாளவியா யோகம் கைகூடி வரப்போகிறது. மனதிற்கு பிடித்தவரை சந்திக்கப்போகிறீர்கள். உங்கள் நட்பு வட்டத்தில் சிறப்பு கவனம் செலுத்தி நல்ல நண்பர்களிடம் மட்டும் பழகுங்கள்.

மிதுனம்

மிதுனம்

விரைய ஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமரும் சுக்கிரனால் விபரீத ராஜயோகம் கைகூடி வரும். பண வருமானம் அதிகரிக்கும். சுப விரைய செலவுகளும் வரும். வண்டி வாகனம் வாங்குவீர்கள்.பணத்தை செலவழித்து வெளிநாட்டு பயணத்தை அனுபவிக்க வேண்டியிருக்கும். நீங்கள் எங்காவது சுற்றுலா செல்ல திட்டமிட்டிருந்தால், இது அதற்கு உகந்த நேரம். ஆன்மீக பயணங்களும் அதிகரிக்கும். ஆலய தரிசனம் செய்வீர்கள்.

 கடகம்

கடகம்

உடலும் மனமும் உற்சாகமாக இருக்கும். லாப ஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமரும் சுக்கிரனால் பண வருமானம் அதிகரிக்கும். மூத்த சகோதரியின் ஆதரவைப் பெறுவீர்கள். தொழில் வியாபாரத்தில் அதிகரிக்கும். திடீர் பண வரவு வந்து திக்குமுக்காட வைக்கும். ஆணோ, பெண்ணோ எதிர்பாலினத்தவர்களிடம் எச்சரிக்கையுடன் இருங்கள். சண்டை சச்சரவு நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நேரம் தவறி சாப்பிடுவதை தவிர்க்கவும்.

 சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு தொழில் ஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமரும் சுக்கிரன் மாளவியா யோகத்தை தரப்போகிறார். வேலையில் உற்சாகம் ஏற்படும். புதிய உத்திகளைப் பயன்படுத்துவீர்கள். புதிய வேலைக்கு முயற்சி செய்வீர்கள். கொள்ளவும் பயன்படுத்தவும் ஆர்வம் காட்டுவீர்கள். பத்தில் சுக்கிரன் பதவி யோகத்தை தரப்போகிறார். வேலையில் புரமோசன் கிடைக்கும். உங்களுக்கு இந்த காலத்தில் அதிக வெற்றிகள் கிடைக்கும்.

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரர்களே..பாக்ய ஸ்தானத்தில் பலம் பெற்று அமரும் சுக்கிரனால் கன்னி ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அதிகரிக்கும். தடைபட்ட காரியங்கள் வெற்றிகரமாக முடிவடையும். பதவி உயர்வும் இந்த காலகட்டத்தில் ஏற்படும். தாய்வழி உறவினர்களுடன் தகராறு வேண்டாம். மன நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். அப்பா வழி உறவுகளினால் ஆதாயம் ஏற்படும்.

துலாம்

துலாம்

ராசிநாதன் சுக்கிரன் எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். சுக்கிரன் உங்கள் ராசி அதிபதி, எட்டாம் வீட்டிற்கு அதிபதி. விபரீத ராஜயோகம் வரும். பண வருமானம் அதிகரிக்கும் என்றாலும். நகை, பண விசயங்களில் கவனம் தேவை. எதிர்காலத்திற்காக அதிகம் திட்டமிடுவீர்கள். உங்களின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துங்கள். கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும்.

விருச்சிகம்

விருச்சிகம்

ராசிநாதன் சுக்கிரன் ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். சுக்கிரனின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைக்கிறது. மாளவியா யோகம் மன மகிழ்ச்சியை அதிகரிக்கும். நன்மைகள் நாடி வரும். நல்லவர்களை சந்திப்பீர்கள். பழைய நண்பர்களையும் சந்திக்க நேரிடும். புதிய உறவுகள் தேடி வரும். அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. சம்பள உயர்வும் அதிகரிக்கும்.

தனுசு

தனுசு

தனுசு ராசிக்காரர்களே, சுக்கிரன் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்யப்போகிறார். விபரீத ராஜயோகம் தேடி வரப்போகிறது. வேலை தொழிலில் பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கும். திடீர் இடமாற்றம் ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் பளு அதிகரிக்கும். கடுமையாக உழைப்பீர்கள். உற்சாகமான மனநிலையில் இருப்பீர்கள்.

மகரம்

மகரம்

மகர ராசிக்காரர்களே.. பூர்வ புண்ணிய ஸ்தானமான 5வது வீட்டில் பயணம் செய்யப்போகிறார். சுறுசுறுப்புக்கு சொந்தக்காரர் நீங்கள். உற்சாகமாக இருப்பீர்கள். எண்ணம் போல வாழ்க்கை என்பது போல நல்ல மனதிற்கு ஏற்ப நல்ல செய்திகள் தேடி வரும். பிள்ளைகள் மூலம் சுப காரியங்கள் நடைபெறும். நடக்கும் காரியங்கள் நற்காரியங்களாக அமையும். குல தெய்வ கோவிலுக்கு செல்வீர்கள்.

கும்பம்

கும்பம்

சுக்கிரன் உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் சுக ஸ்தானத்தில் பயணம் செய்வது யோகமான கால கட்டம். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழிலதிபர்களுக்கு இது நல்ல நாள். மாளவியா யோகம் மனதிற்கு சந்தோஷத்தை தரப்போகிறது. ஆடைகள் வாங்கவும் வீட்டினை அழகு படுத்தவும் அக்கறை காட்டுவீர்கள். ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள்.

மீனம்

மீனம்

மீன ராசிக்காரர்களே..மூன்றாவது வீடான முயற்சி ஸ்தானத்தில் பயணம் செய்யும் சுக்கிரனால் புது முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். வாழ்க்கை துணை மூலம் உதவிகள் கிடைக்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். நற்காரியங்கள் அதிகம் நடைபெறும் மாதமாக இந்த சுக்கிரப்பெயர்ச்சி இருக்கப்போகிறது. இளைய சகோதரர்களின் வீட்டு விஷேசங்களில் பங்கேற்பீர்கள். குடும்பத்தோடு செல்லும் சிறு பயணங்கள் உங்களுடைய மனதிற்கு சந்தோஷத்தை கொடுக்கப்போகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+