சுக்கிரன் பெயர்ச்சி: ஆடம்பர யோகத்தால் ஜொலிக்கப் போகும் 3 ராசிக்காரர்கள் யார் தெரியுமா?
சுக்கிரன் பெயர்ச்சி 2025: ஆடம்பர கிரகமான சுக்கிர பகவான் திருவோண நட்சத்திரத்தில் பிரவேஷம் செய்வது சில ராசிக்கரார்களின் வாழ்க்கையில் மாற்றத்தையும், பெரிய முன்னேற்றத்தையும் ஏற்படுத்தும். அந்த வகையில், எந்தெந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டங்களைப் பெறப் போகின்றனர் என்பது குறித்து விரிவாகத் தெரிந்து கொள்ளலாம்.. (Sukkiran peyarchi 2025)
2024 ஆம் ஆண்டு நிறைவடையவுள்ளது. புதிய எதிர்பார்ப்புகளுடனும், நம்பிக்கைகளுடன் 2025 புத்தாண்டு பிறக்க உள்ளது. எந்த ஆண்டிலும் இல்லாத அரிய நிகழ்வாக சனி பகவான் மார்ச் 29 ஆம் தேதி கும்பத்தில் இருந்து மீனத்துக்கு பெயர்ச்சி அடைகிறார். மே 14 ம் தேதி குரு பகவான் ரிஷபத்தில் இருந்து மிதுனத்துக்கு மாறுகிறார். மே 18 ஆம் தேதி ராகு - கேது இடமாற்றமும் நிகழ்கிறது. இந்த மூன்று நிகழ்வுகளும் ஒரே ஆண்டில் நிகழப் போகிறது.

அனைத்து செல்வங்களுக்கும், மகிழ்ச்சிக்கும் அதிபதியானவர் சுக்கிர பகவான். நவக்கிரகங்களில் சுக்கிரன் ஆடம்பர கிரகமாக விளங்கக்கூடியவர் சுக்கிரன். மாதத்துக்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக் கூடிய கிரகமாகும். சுக்கிர பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிக்காரர்களுக்கும் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும். செழிப்பு, செல்வம், பணப் புழக்கம், காதல், அழகு, ஆடம்பர வாழ்க்கை உள்ளிட்டவற்றுக்கு பிரதான காரணமாக இருப்பதே ஜாதகத்தில் சுக்கிரன் நல்ல நிலையில் இருப்பதால் தான்.
அந்த வகையில், சுக்கிர பகவான் திருவோண நட்சத்திரத்தில் தனது பயணத்தை துவங்கியுள்ளார். திருவோண நட்சத்திரத்தில் பயணிக்கும் சுக்கிர பகவானால் சில ராசிக்காரர்கள் நற்பலன்களைப் பெறப் போகின்றனர். அந்த வகையில், வரும் காலங்களில் அதிர்ஷ்டங்களை எந்த ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் அள்ளிக் கொடுக்கப் போகிறார் என்று இங்கு விரிவாகப் பார்க்கலாம்.

மேஷ ராசி (New year rasi palan for Mesham): சுக்கிரனின் இடமாற்றம் மேஷ ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை பெய்யப் போகிறது. அனைத்துவிதமான நற்பலன்களும் உங்களுக்கு கிடைக்கும். பண வரவு உண்டாகும். நிதி நிலைமை மேம்படும். பணம் தொடர்பான எந்த குறையும் ஏற்படாது. வியாபாரம், தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். புதிய வேலைக்கு மாற வேண்டும் என நினைப்பவர்களுக்கு புதிய வேலை கைகூடி வரும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும்.
கணவன், மனைவிக்கிடையே அன்பும், ஆதரவும் பெருகும். நீண்ட நாட்களாக திருமணத்துக்காக காத்திருந்தவர்களுக்கு திருமண யோகம் உண்டாகும். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். அலுவலகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு நீங்கள் எதிர்பார்த்தது போலவே கிடைக்கும். அதிர்ஷ்டமும், யோகமும் உங்களைத் தேடி வரும்.

கன்னி ராசி (New year rasi palan for kanni): சுக்கிரனின் திருவோண நட்சத்திரப் பயணம் கன்னி ராசிக்காரர்களுக்கு அனுகூலமான பலன்களைத் தரும். இதுவரை நீங்கள் பட்ட கஷ்டங்கள், துன்பங்கள் அனைத்தும் உங்களை விட்டு விலகும். அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கு பாராட்டுகள் குவியும். எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன. வேலை தேடி வந்தவர்களுக்கு நல்ல வேலை அமையும். புதிய பொறுப்புகள் தேடி வரும். அதனால், வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.
உயர் அலுவலர்களின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். உடன் பணியாற்றுபவர்களால் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும். கணவனுக்கும், மனைவிக்கும் இருவரிடமிருந்தும் முழு ஆதரவு கிடைக்கும். வரன்கள் தேடி வந்தவர்களுக்கு நல்ல திருமண வரன் அமையும். காதலிப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சமுதாயத்தில் உங்களுடைய மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். இதுவரை பட்டுவந்த சங்கடங்கள் அனைத்தும் தீரும்.

மகர ராசி (New year rasi palan for magaram): திருவோண நட்சத்திரத்தில் சுக்கிரன் பயணிப்பதால் மகர ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் இனி அனைத்து விஷயங்களும் ஏறுமுகமாக இருக்கும். நிதி பாதுகாப்பை பெறுவதற்கான சூழ்நிலை உருவாகும். உங்களுடைய வாழ்க்கை தரம் உயரும். இதுவரை தடைபட்டு வந்த வேலைகள் அனைத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பண வரவு அதிகரிக்கும்.
பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண்பீர்கள். அதிர்ஷ்டம் உங்களுக்குள் குடிபெயரும். தொட்ட காரியங்கள் அனைத்தும் துலங்கும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு என மகிழ்ச்சியில் திளைப்பீர்கள். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி கூடும். திருமண வாழ்க்கையால் யோகங்கள் உண்டாகும். திருமணத்தை எதிர்பார்த்தவர்களுக்கு குட் நியூஸ் கிடைக்கும்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications