Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சுக்கிரன் பெயர்ச்சி 2021: தனுசுக்கு இடம் பெயரும் காதல் நாயகன் - 12 ராசிக்கும் பலன்கள்

விருச்சிகம் ராசியில் கேது உடன் குடியிருந்த காதல் நாயகன் சுக்கிரன் இனி தனியாக தனுசு ராசியில் பயணம் செய்யப்போகிறார். இந்த இடப்பெயர்ச்சியால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்களுக்கும் பலன்களைப் பார்க்கலாம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சுக்கிரன் களத்திரகாரகன் இல்லற வாழ்வுக்குறியவர். சுக்கிரன் விருச்சிகம் ராசியில் கேது உடன் இணைந்து பயணம் செய்தார். இனி தனுசு ராசியில் தனியாக சஞ்சரிக்கப்போகிறார். கிரகங்களின் இடப்பெயர்ச்சி பார்வையை வைத்து ராசிக்காரர்களுக்கு நன்மையும் தீமையும் நடைபெறும். தனுசு ராசியில் பயணிக்கும் சுக்கிரனால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

சுக்கிரன் மனைவி யோகம் தருபவர் ஆணுக்கு மனைவியைப்பற்றியும், பெண்ணுக்கு மண வாழ்க்கையைப் பற்றியும் சொல்லுகின்றவர். ஆகையால் சுக்கிரன் நமது ஜாதக கட்டத்தில் நல்ல யோக அம்சத்துடன் இருப்பது அவசியம். இவருடைய தசா காலமான 20 வருடங்களில் மிகப்பெரிய ராஜ யோக பலன்கள் உண்டாகும். ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரன் சனி சேர்க்கை பெற்றிருந்தால் அது கோடீஸ்வர யோகமாக அமைகிறது. வசதியான மனைவி அமைவார். நன்றாக சம்பாதிக்கும் மனைவி அமைவார்.

சுக்கிரன் சிற்றின்பம், திருமணம் முதலான சுகத்தை ஆணுக்கு அளிப்பவர். அதே போல் பெண்களுக்கு நளினத் தன்மையையும் அழகான தோற்றம், கவர்ச்சி, வீரியசக்தி, அறிவாற்றல், மனத்துக்கிசைந்த கணவனை அடையும் தகுதியையும், சுக போகங்களில் திளைத்து மகிழும் ஆற்றலையும் வழங்குவார். சுக்ரன் என்றால் இன்பம். மனித வாழ்க்கையில் அன்பு, பாசம், காதல் ஆகிய மூன்று இன்பங்களை அளிக்கக் கூடியவர். சுக்கிரன் சுக போகங்களின் அதிபதி. இந்த சுக்கிரன் பெயர்ச்சி யாருக்கு எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

மேஷம்

மேஷம்

சுக்கிரன் உங்கள் ராசிக்கு குடும்ப ஸ்தான அதிபதி களத்திர ஸ்தான அதிபதி. ராசிக்கு 9ஆவது வீடான பாக்ய ஸ்தானத்தில் சுக்கிரன் சஞ்சரிப்பதால் வீட்டில் மனைவியின் அன்பான ஆதரவு கிடைக்கும். காதலி நண்பர்கள், உறவினர்களுடன் உற்சாகமாக இருக்கும் காலம் இது. அப்பா வழியில் உதவி கிடைக்கும். காதலிப்பவர்களுக்கு இந்த மாதம் குதூகலமாக அமையும். வெளிநாடு யோகம் கைகூடி வருகிறது. பாஸ்போர்ட் எடுத்தவர்கள் விசாவிற்கு முயற்சி செய்யலாம். பணவரவும் அதிகரிக்கும்.

 ரிஷபம்

ரிஷபம்

உங்கள் ராசிநாதன் சுக்கிரன் எட்டாம் இடத்தில் சுக்கிரன் மறைகிறார். வாழ்க்கைத்துணையின் உடல் நலத்தில் அக்கறை செலுத்தவும். இல்லாவிட்டால் மருத்துவ செலவுகள் எற்படும். பணத்தை பத்திரப்படுத்துங்கள் விலை உயர்ந்த நகைகளை யாருக்கும் இரவல் கொடுக்க வேண்டாம். கணவன் மனைவி இருவருமே கவனமாக இருந்தால் பொருள், நகை பாதிப்பை தவிர்க்கலாம். வெள்ளிக்கிழமைகளில் பசுவிற்கு அகத்திக்கீரை தானம் செய்யலாம்.

மிதுனம்

மிதுனம்

காதல் நாயகன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு 7ஆம் இடத்தில் களத்திர ஸ்தானத்தில் அமர்வதால் சிறிய அளவில் உடல்நலக்குறைவு ஏற்படும். பெண்கள் விசயத்தில் சற்று கவனமாக இருக்கவும். இல்லை எனில் மதிப்பு மரியாதைக்கு பிரச்சினை ஏற்பட்டு விடும். வாழ்க்கை துணை உடனான காதல் உணர்வுகள் அதிகரிக்கும். சிலருக்கு காதல் கணிந்து திருமணத்திலும் முடிய வாய்ப்பு உள்ளது. தொழில் விசயத்தில் ஜாக்கிரதையாக இருக்கவும்.

கடகம்

கடகம்

சுக்கிரன் உங்கள் ராசிக்கு 6வது இடத்தில் மறைவதால் உங்கள் உடல் நலனையும் பாக்கெட்டில் உள்ள பணத்தையும் பத்திரமாக பார்த்துக்கொள்ளவும். வேலை பார்க்கும் இடத்தில் கடும் உழைப்பை கொடுக்க வேண்டிய காலமிது. வீட்டில் வாழ்க்கைத்துணையினால் சின்னச்சின்ன சச்சரவுகள், ஊடல்கள் ஏற்பட்டு அதனால் சிலருக்கு மன அழுத்தம் ஏற்படும். கவலைகள், சங்கடங்கள் நீங்க வெள்ளிக்கிழமை அம்பிகையை வணங்கவும்.

சிம்மம்

சிம்மம்

காதல் நாயகன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு 5ஆம் வீட்டில் அமர்ந்து உள்ளார். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பண்டிகை காலம் என்பதால் வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். பணவரவு அதிகரிக்கும். காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது. உங்களுக்கு கற்பனை வளமும் அழகுணர்ச்சியும் அதிகரிக்கும். வீட்டில் மனைவி, குழந்தைகள் மீது அன்பும் பாசமும் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைவர் உங்கள் மீது காதல் மழை பொழியும் நேரமிது. வாழ்க்கைத் துணையுடன் இதே வேகத்தோடு இன்ப சுற்றுலா சென்று வாருங்கள்.

கன்னி

கன்னி

சுக்கிரன் உங்கள் ராசிக்கு 4வது வீட்டில் அமர்ந்து பயணம் செய்வதால் வீட்டுக்குத் தேவையான அலங்கார பொருட்களை வாங்கி குவிப்பீர்கள். சிலர் வீடுகளை பராமரிப்பு செய்வீர்கள். அம்மாவின் உடல் நலத்தில் அக்கறை தேவை.வண்டி வாகனம் வாங்கும் போது மட்டும் கவனமாக வாங்க வேண்டும் இல்லை எனில் செலவு இழுத்து விட்டு விடும். வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவிலுக்கு மல்லிகை, முல்லை பூக்களை வாங்கித் தரலாம். பெண்கள் வலது விரலில் வைர மோதிரம் அணியலாம்.

துலாம்

துலாம்

துலாம் ராசிக்கு ராசி நாதன் சுக்கிரன் ராசிக்கு 3ஆம் இடமான முயற்சி ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். உங்களின் பேச்சுத்திறமையும், அழகியலும் அதிகரிக்கும். சிறு ஆன்மீகப் பயணம் செல்ல வேண்டியிருக்கும். உங்கள் நட்பு வட்டம் அதிகரிக்கும். உடல் நலனில் சின்னச் சின்ன ஏற்படும். எனவே அவ்வப்போது அக்கறையோடு சிறு பிரச்சினைகளையும் கவனியுங்கள். வெள்ளிக்கிழமை மகாலட்சுமி தாயாரை நெய் தீபம் ஏற்றி வழிபட நன்மைகள் நடைபெறும்.

விருச்சிகம்

விருச்சிகம்

உங்கள் ராசியில் கேது உடன் சஞ்சாரம் செய்து வந்த சுக்கிரன் உங்கள் ராசிக்கு 2வது வீட்டில் அமர்கிறார். தன ஸ்தான சுக்கிரனால் பண வருமானம் அதிகாிக்கும். திருமண வயதில் இருப்பவா்களுக்கு திருமண பாக்கியம் கிடைக்கும். சிலர் வீட்டில் குழந்தை பாக்கியம் கிடைக்கும். குடும்பத்தில் சுப காரிய நிகழ்ச்சிகள் நடைபெறும். கணவன் மனைவிக்கு இடையே காதல் உணர்வுகள் அதிகரிக்கும். சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வழிபட நன்மைகள் நடைபெறும்.

தனுசு

தனுசு

காதல் நாயகன் சுக்கிரன் உங்கள் ராசியில் பயணம் செய்கிறார். நல்ல வருமானம் வரும். பொன்னும் பொருளும் சேரும் நேரம் இது. தங்க நகைகள் வாங்கலாம். ஆடம்பரமான பொருட்களை வாங்குவதால் சுப செலவுகள் ஏற்படும். மாணவர்களுக்கு மேற்படிப்பு படிக்க வழி ஏற்படும். கணவன் மனைவி இடையே காதல் உணர்வுகள் அதிகரிக்கும். . சிலருக்கு வயிற்றில் பிரச்சினைகள் வரலாம் என்பதால் ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும்.

மகரம்

மகரம்

உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானமாக 12வது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்கிறார். சுப விரைய செலவு ஏற்படும். சிலருக்கு வெளிநாட்டு வாய்ப்பை எற்படுத்தி கொடுக்கும். படிப்புக்காக சிலர் வெளிநாடு செல்வார்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடைபெற வாய்ப்புள்ளது. வாழ்க்கை துணையுடன் அந்நியோன்னியம் அதிகரிக்கும். பணவரவு சிலருக்கு உற்சாகத்தை தரும். பணம் வரும் போது பத்திரப்படுத்துங்கள். பண்டிகை காலமாக இருப்பதால் வீட்டிற்குத் தேவையான டிவி பிாிட்ஜ் ஏசி பொருட்கள் வாங்கலாம். வெள்ளிக்கிழமைகளில் சிவ ஆலயத்திற்கு சென்று தயிர், பால் அபிஷேகம் செய்யலாம்.

கும்பம்

கும்பம்

சுக்கிரன் ராசிக்கு 11வது வீடான லாப ஸ்தானத்தில் அமர்ந்து உள்ளார். அரசனுக்கு இணையான வாழ்க்கை கிடைக்கும் காலமாகும். வாகன வசதி மேம்படும். பண வருவாய் அதிகாிக்கும். பிள்ளைகள் வழியில் சிறப்பான பலன்களை எதிா்பாா்க்கலாம். வீடு நிலம் வகையில் ஆதாயம் கிடைக்கும். திருமண வாழ்க்கையில் உற்சாகமடையும் வகையில் பல செயல்கள் நடைபெறும் மாதம் இது. சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். பெருமாள் கோவிலுக்குச் சென்று விளக்கேற்றி வழிபட நன்மைகள் நடைபெறும்.

மீனம்

மீனம்

உங்கள் ராசிக்கு 10வது வீட்டில் தொழில் ஸ்தானத்தில் சுக்கிரன் அமர்வதால் உங்கள் வேலையில், தொழிலில் முன்னேற்றம் கிடைக்கும். பத்தில் சுக்கிரன் பதவி யோகத்தையும் பதவியில் உயர்வையும் தருவார். பணி இடத்தில் வார்த்தைகளில் கவனம் தேவை. அமைதியாக நிதானமாக பேசவும். வெள்ளிக்கிழமைகளில் பசுவிற்கு வெல்லம் வாங்கித்தர நன்மைகள் அதிகம் நடைபெறும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+