Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சுக்கிரன் பெயர்ச்சி 2022: ராகு உடன் இணையும் சுக்கிரன்..காதலில் பிரச்சினை வரலாம் கவனம்

சுக்கிரன் போகத்திற்கு அதிபதியாக உள்ளார். ஆடம்பரம், சொகுசு வாழ்க்கைக்கு முக்கியக்காரகர். ராகு உடன் இணையும் சுக்கிரனால் சில ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கையில் சிக்கல் வர வாய்ப்பு உள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சுக்கிரன் இன்று முதல் மேஷ ராசியில் ராகு உடன் கூட்டணி சேருகிறார். ராகு உடன் சுக்கிரன் இணையும் போது ஏற்கனவே இருக்கும் ஆடம்பர, சொகுசு ஆசை மேலும் அதிகரிக்கும். சில ராசிக்காரர்கள் சுக போகத்தை அனுபவிக்கக் கூடியவர்களாக இருப்பார்கள். எதிர் பாலினத்தின் மீது அதிக ஆசை இருக்கும். காமம் அதிகமாக இருக்கும். சிலருக்கு காதலில் குடும்ப வாழ்க்கையில் சிக்கல்கள் வரலாம். எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

கடந்த மாதம் ராகு மேஷ ராசிக்குள் நுழைந்தார். இன்று முதல் சுக்கிரன் இணைகிறார். மேஷ ராசியில் ராகு-சுக்கிரன் இணைவது சில ராசிக்காரர்களுக்கு அசுபமான பலன்களை தரும். சில ராசிக்காரர்கள் இந்த நேரத்தில் கவனமாகவும் நிதானத்துடனும் செயல்பட வேண்டும்.

சில ராசிக்காரர்கள் கோபம், வாக்குவாதம் போன்றவற்றை தவிர்க்கவும். அடுத்த 27 நாட்களுக்கு சுக்கிரன் மேஷ ராசியில் ராகு உடன் இருப்பார் அதுவரை எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று பார்க்கலாம்.

மேஷம்

மேஷம்

ராகு-சுக்கிரன் சேர்க்கை மேஷ ராசிக்காரர்கள் கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள். நெருங்கியவர்களிடம் வாக்குவாதம் செய்யாதீர்கள். நல்ல வருமானம் வரும். பொன்னும் பொருளும் சேரும் நேரம் இது. தங்க நகைகள் வாங்கலாம். ஆடம்பரமான பொருட்களை வாங்குவதால் சுப செலவுகள் ஏற்படும். மாணவர்களுக்கு மேற்படிப்பு படிக்க வழி ஏற்படும். கணவன் மனைவி இடையே காதல் உணர்வுகள் அதிகரிக்கும். வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவிலுக்கு சென்று சிவப்பு ரோஜா வைத்து வணங்கி வர மேலும் நன்மைகள் நடைபெறும்.

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு ராகு-சுக்கிரன் இணைவு உறவுகளிலும் பணத்தை புத்திசாலித்தனமாக செலவு செய்யுங்கள், இல்லையெனில் நீங்கள் நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும். வீண் சர்ச்சைகளில் இருந்து விலகி இருங்கள்.
குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். கணவன் மனைவி மகிழ்ச்சியாய் இருப்பாா்கள். வாழ்க்கை துணையுடன் அந்நியோன்னியம் அதிகரிக்கும். பணவரவு சிலருக்கு உற்சாகத்தை தரும். பணம் வரும் போது பத்திரப்படுத்துங்கள். வெள்ளிக்கிழமைகளில் சிவ ஆலயத்திற்கு தயிரும் சர்க்கரையும் வாங்கித்தர மேலும் நன்மைகள் நடைபெறும்.

மிதுனம்

மிதுனம்

சுக்கிரன் உங்கள் ராசிக்கு 11வது வீடான லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். திருமண வாழ்க்கையில் உற்சாகமடையும் வகையில் பல செயல்கள் நடைபெறும் மாதம் இது. பண வருவாய் அதிகாிக்கும். பிள்ளைகள் வழியில் சிறப்பான பலன்களை எதிா்பாா்க்கலாம். அரசனுக்கு இணையான வாழ்க்கை கிடைக்கும் காலமாகும். வாகன வசதி மேம்படும். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். அம்மன் கோவிலுக்கு சந்தனம் வாங்கித்தர நன்மைகள் நடைபெறும்.

கடகம்

கடகம்


சுக்கிரன் உங்கள் ராசிக்கு 10வது வீட்டில் தொழில் ஸ்தானத்தில் பயணம் செய்வதால் உங்கள் வேலையில், தொழிலில் உற்சாகத்தை ஏற்படுத்தும். பணி இடத்தில் வார்த்தைகளில் கவனம் தேவை. அமைதியாக நிதானமாக பேசவும். குடும்பத்தில் மனைவியுடனே அல்லது காதலியுடனே சின்னச் சின்ன ஊடல் ஏற்படலாம் சமாளியுங்கள். வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவிலுக்கு நெய் வாங்கித்தர பாதிப்புகள் குறைந்து நன்மைகள் நடைபெறும்.

சிம்மம்

சிம்மம்

ராசிக்கு 9ஆவது வீட்டில் சுக்கிரன் அமர்கிறார். வீட்டில் மனைவியின் அன்பான ஆதரவு கிடைக்கும். காதலி நண்பர்கள், உறவினர்களுடன் உற்சாகமாக இருக்கும் காலம் இது. காதலிப்பவர்களுக்கு இந்த மாதம் குதூகலமாக அமையும் என்றாலும் ராகு-சுக்கிரன் சேர்க்கை சிம்ம ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கையில் சில சிக்கல்களை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. வாழ்க்கை துணையுடன் தகராறு ஏற்படலாம். வெளிநாடு யோகம் கைகூடி வருகிறது. பாஸ்போர்ட் எடுத்தவர்கள் விசாவிற்கு முயற்சி செய்யலாம். வெள்ளிக்கிழமை சிவபெருமானுக்கு அபிஷேகத்திற்கு சந்தனம் வாங்கித்தரலாம். பசுமரத்திற்கு தண்ணீர் ஊற்றலாம்.

கன்னி

கன்னி

சுக்கிரன் எட்டாம் இடத்தில் மறைகிறார். ராகு உடன் சுக்கிரன் இணைவதால் மனைவியின் உடல் நலத்தில் அக்கறை செலுத்தவும். இருவருமே கவனமாக இருந்தால் பொருள், நகை பாதிப்பை தவிர்க்கலாம். இல்லாவிட்டால் மருத்துவ செலவுகள் எற்படும். பணத்தை பத்திரப்படுத்துங்கள் விலை உயர்ந்த நகைகளை யாருக்கும் இரவல் கொடுக்க வேண்டாம். வெள்ளிக்கிழமைகளில் பசுவிற்கு அகத்திக்கீரை வாங்கிக்கொடுக்கலாம்.

துலாம்

துலாம்

ராசிநாதன் சுக்கிரன் ஏழாம் வீடான களத்திர ஸ்தானத்தில் ராகு உடன் இணைகிறார். வாழ்க்கை துணை உடனான காதல் உணர்வுகள் அதிகரிக்கும். சிலருக்கு காதல் கணிந்து திருமணத்திலும் முடிய வாய்ப்பு உள்ளது. தொழில் விசயத்தில் ஜாக்கிரதையாக இருக்கவும். சிறிய அளவில் உடல்நலக்குறைவு ஏற்படும். பெண்கள் விசயத்தில் சற்று கவனமாக இருக்கவும். இல்லை எனில் மதிப்பு மரியாதைக்கு பிரச்சினை ஏற்பட்டு விடும். ராகு-சுக்கிரன் சேர்க்கையால் திருமண வாழ்வில் சிக்கலை ஏற்படுத்தும். இந்த நேரத்தில் கவனமாக இருக்கவும். சிலர் தங்கள் துணையை விட்டு விலகிச் செல்ல வாய்ப்பு உள்ளது. சுக்கிரனின் அருட் பார்வை கிடைக்க வெள்ளிக்கிழமைகளில் சுக்கிர ஓரையில் விளக்கேற்றி வழிபடலாம்.

 விருச்சிகம்

விருச்சிகம்

சுக்கிரன் உங்கள் ராசிக்கு 6வது இடத்தில் மறைகிறார். உங்கள் உடல் நலனையும் பாக்கெட்டில் உள்ள பணத்தையும் பத்திரமாக பார்த்துக்கொள்ளவும். வேலை பார்க்கும் இடத்தில் கடும் உழைப்பை கொடுக்க வேண்டிய காலமிது. வீட்டில் வாழ்க்கைத்துணையினால் சின்னச்சின்ன சச்சரவுகள், ஊடல்கள் ஏற்பட்டு அதனால் சிலருக்கு மன அழுத்தம் ஏற்படும். வெள்ளிக்கிழமை அம்பிகையை வணங்கவும். பசுவிற்கு அரிசி மாவும், வெல்லமும் தானமாக அளிக்க நன்மைகள் நடைபெறும்.

தனுசு

தனுசு

காதல் நாயகன் சுக்கிரன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்வதால் பணவரவு அதிகரிக்கும். காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது என்று பாடுவீர்கள். வீட்டில் மனைவி, குழந்தைகள் மீது அன்பும் பாசமும் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைவர் உங்கள் மீது காதல் மழை பொழியும் நேரமிது. வெள்ளிக்கிழமை அம்மன் கோவில்களில் விளக்கேற்றி வழிபட மேலும் நன்மைகள் நடக்கும்.

மகரம்

மகரம்


சுக்கிரன் உங்கள் ராசிக்கு 4வது வீட்டில் பயணம் செய்வதால் வீட்டுக்குத் தேவையான அலங்கார பொருட்களை வாங்கி குவிப்பீர்கள். சிலர் வீடுகளை பராமரிப்பு செய்வீர்கள். அம்மாவின் உடல் நலத்தில் அக்கறை தேவை.வண்டி வாகனம் வாங்கும் போது மட்டும் கவனமாக வாங்க வேண்டும் இல்லை எனில் செலவு இழுத்து விட்டு விடும். வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவிலுக்கு மல்லிகை, முல்லை பூக்களை வாங்கித் தர பாதிப்புகள் நீங்கி நன்மைகள் நடைபெறும்.

கும்பம்

கும்பம்


ராகு-சுக்கிரன் இணைவதால் கும்ப ராசிக்காரர்களுக்கு கோபம் அதிகரிக்கும். அவர்களால் பணியிடத்தில் சரியாக கவனம் செலுத்த முடியாது. சவால்களை சந்திக்க நேரிடலாம். நெருங்கியவர்களுடன் வாக்குவாதம் ஏற்படலாம். இந்த நேரத்தில் பொறுமையை கையாளுங்கள். உடல் நலனில் சின்னச் சின்னபாதிப்புகள் ஏற்படும். எனவே அவ்வப்போது அக்கறையோடு சிறு பிரச்சினைகளையும் கவனியுங்கள். சிறு ஆன்மீகப் பயணம் செல்ல வேண்டியிருக்கும். வெள்ளிக்கிழமை மகாலட்சுமி தாயாரை விளக்கேற்றி வழிபட நன்மைகள் நடக்கும்.

 மீனம்

மீனம்

உங்கள் ராசியில் குரு உடன் சஞ்சாரம் செய்து வந்த சுக்கிரன் உங்கள் ராசிக்கு 2வது வீட்டில் அமர்கிறார். தன ஸ்தான சுக்கிரனால் பண வருமானம் அதிகாிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். கணவன் மனைவிக்கு இடையே காதல் உணர்வுகள் அதிகரிக்கும். திருமண வயதில் இருப்பவா்களுக்கு திருமண பாக்கியம் கைகூடும். சிலர் வீட்டில் குவா குவா சத்தம் கேட்கும். வெள்ளிக்கிழமை அம்மன் கோவிலுக்கு சென்று குங்குமம் வாங்கி தந்து வழிபட மேலும் நன்மைகள் நடைபெறும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+