சுக்கிரன் பெயர்ச்சி பலன் 2024: காதல் கிரங்கள் கூட்டணியால் இந்த ராசிக்காரர்களுக்கு காதல் இனிக்கும்
சென்னை: காதலர் தினம் கொண்டாடப்படும் இந்த நேரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி நிகழ்ந்துள்ளது. சனி வீடான மகர ராசியில் செவ்வாய் உச்சம் பெற்று அமர்ந்திருக்க சுக்கிரன் கூட்டணி சேர்ந்துள்ளார். காதல் கிரகங்களின் கூட்டணியால் தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளில் பிறந்த எந்த ராசிக்காரர்களுக்கு இந்த காதலர் தினத்தில் காதல் இனிக்கும் வாழ்க்கை துணையோடு உற்சாகமாக இருப்பீர்கள் என்று பார்க்கலாம்.
தனுசு: உங்கள் ராசிக்கு அதிபதி குரு ராசிக்கு இரண்டாம் வீடான தன ஸ்தானத்தில் செவ்வாய் உச்சம் பெற்று பயணம் செய்கிறார். சுக்கிரனால் தன யோகம் வரும் பண வருமானம் அதிகாிக்கும். குடும்பத்தில் திருமணம் சுப காரியங்கள் நடைபெறும். கணவன் மனைவிக்கு இடையே காதல் உணர்வுகள் அதிகரிக்கும். காதல் துணையுடனான உறவுகள் இனிக்கும். காதலும் நேசமும் அதிகரிக்கும். திருமண வயதில் இருப்பவா்களுக்கு திருமணம் கைகூடும். காதல் துணைக்கு அன்பான பரிசுகளை அள்ளித்தருவீர்கள்.

மகரம்: மகரம் ராசிக்கு யோகாதிபதி சுக்கிரன் உச்சம் பெற்ற செவ்வாய் உடன் இணைந்துள்ளார். சுக்கிரன் உங்கள் ராசியில் பயணம் செய்வதால் மனதில் மகிழ்ச்சி ஏற்படும். முகத்தில் பொலிவு ஏற்படும். வாழ்க்கை துணையை பரிசுகளால் திணறடிப்பீர்கள். பொருளும் சேரும் நேரம் இது. தங்க நகைகள் வாங்கலாம். கணவன் மனைவி இடையே காதல் உணர்வுகள் அதிகரிக்கும்.
கும்பம்: சுக்கிரன் உங்களுடைய ராசிக்கு யோகாதிபதி. குடும்பத்தில் சுப காரியம் நடைபெறும். மனம் மகிழ்ச்சியில் துள்ளி விளையாடும். சுப விரைய செலவு ஏற்படும். குடும்பத்தில் கசப்புணர்வுகள் மறைந்து கணவன் மனைவி மகிழ்ச்சியாய் இருப்பாா்கள். வாழ்க்கை துணையுடன் நெருக்கம் அதிகரிக்கும். பணவரவு சிலருக்கு உற்சாகத்தை தரும். பணம் வரும் போது பத்திரப்படுத்துங்கள். அன்பான பரிசுகளால் அசரடிப்பீர்கள்.
மீனம்: சுக்கிரன் உங்களுடைய ராசிக்கு முயற்சி ஸ்தான அதிபதி, சுக்கிரன் உங்க ராசிக்கு 11வது வீடான லாப ஸ்தானத்தில் செவ்வாயுடன் அமர்ந்து உள்ளார். குடும்பம் திருமண வாழ்க்கையில் உற்சாகமடைவீர்கள். அன்பான வாழ்க்கை துணையால் மனம் மகிழ்ச்சியடையும். பண வருமானம் அதிகாிக்கும். செவ்வாயும் சுக்கிரனும் இணைந்திருப்பதால் காதலோடு உற்சாகமாக இருப்பீர்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications