Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சுக்கிரன் பெயர்ச்சி பலன் 2024: சனி வீட்டில் காதல் கிரகங்கள் கூட்டணி.. யாருக்கு காதல் மலரும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: காதலர் தினம் கொண்டாடப்படும் இந்த நேரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி நிகழ்ந்துள்ளது. சனி வீடான மகர ராசியில் செவ்வாய் உச்சம் பெற்று அமர்ந்திருக்க சுக்கிரன் கூட்டணி சேர்ந்துள்ளார். காதல் கிரகங்களின் கூட்டணியால் எந்த ராசிக்காரர்களுக்கு இந்த காதலர் தினத்தில் காதல் மலரும் என்று பார்க்கலாம்.

சுக்கிரன் சுக போகங்களின் அதிபதி. சுக்ரன் என்றால் இன்பம். மனித வாழ்க்கையில் அன்பு, பாசம், காதல் ஆகிய மூன்று இன்பங்களை அளிக்கக் கூடியவர். சுக்கிரன் சிற்றின்பம், திருமணம் முதலான சுகத்தை ஆணுக்கு அளிப்பவர். அதே போல் பெண்களுக்கு நளினத் தன்மையையும் அழகான தோற்றம், கவர்ச்சி, வீரியசக்தி, அறிவாற்றல், மனத்துக்கிசைந்த கணவனை அடையும் தகுதியையும், சுக போகங்களில் திளைத்து மகிழும் ஆற்றலையும் வழங்குவார்.

Sukran Peyarchi Palan 2024: Venus transit from Dhanusu to Makaram prediction for 12 Zodiac Sign


சுக்ரன் மனைவி யோகம் தருபவர் ஆணுக்கு மனைவியைப்பற்றியும், பெண்ணுக்கு மண வாழ்க்கையைப் பற்றியும் சொல்லுகின்றவர். ஆகையால் சுக்கிரன் நமது ஜாதக கட்டத்தில் நல்ல யோக அம்சத்துடன் இருப்பது அவசியம். இவருடைய தசா காலமான 20 வருடங்களில் மிகப்பெரிய ராஜ யோக பலன்கள் உண்டாகும். ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரன் சனி சேர்க்கை பெற்றிருந்தால் அது கோடீஸ்வர யோகமாக அமைகிறது. சுக்கிரன் ஒருவருக்கு நல்ல நிலையில் இருந்தால் வசதியான மனைவி அமைவார். நன்றாக சம்பாதிக்கும் மனைவி அமைவார். இந்த சுக்கிர பெயர்ச்சி யாருக்கு எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

மேஷம்: சுக்கிரன் உங்க ராசிக்கு இரண்டு மற்றும் ஏழாம் வீட்டிற்கு அதிபதி. சுக்கிரன் உங்கள் ராசிக்கு பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் உடன் கூட்டணி சேர்ந்துள்ளார். அங்கிருந்து சுக்கிரன் பார்வை உங்க சுக ஸ்தானத்தை பார்க்கிறார். பெண்களுக்கு பொன் நகைகள் சேர்க்கை அதிகரிக்கும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். கூட்டுத் தொழில் வியாபாரத்தில் கவனமாக இருங்க. வேலை செய்யும் இடத்தில் வார்த்தைகளில் கவனம் தேவை. அமைதியாக நிதானமாக பேசவும். கோபப்பட்டு பேசி நல்லதை கெடுத்துக்கொள்ள வேண்டாம். குடும்பத்தில் மனைவி அல்லது காதலியுடன் சின்னச் சின்ன ஊடல் ஏற்படலாம் சமாளியுங்கள். ராசி அதிபதி செவ்வாயின் உங்களுக்கு உச்சம் பெற்று அமர்ந்து ருச்சிக யோகத்தை தருவதால் இது காதலை சொல்லவும் காதலிக்கவும் அற்புதமான கால கட்டம். உங்கள் அன்பான வாழ்க்கை துணைக்கு மனம் மகிழும் பரிசினை கொடுங்கள்.

ரிஷபம்: உங்க ராசி அதிபதி சுக்கிரன் ஒன்பதாம் வீட்டில் செவ்வாயுடன் இணைந்திருப்பது அற்புதமான அம்சம். இதுநாள்வரை உங்களுக்குத் தடைபட்டிருந்த காரியங்கள் மளமளவென முடியும். புதிய வேலை கிடைக்கும் உற்சாகமாக இருப்பீர்கள். பண வரவு அதிகரிக்கும். நீங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறும். இதுநாள் வரை நடக்காத விசயங்கள் இனி நடக்கும். புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். சுக்கிரன் பாக்ய ஸ்தானத்திற்கு வந்தாலே இன்பம்தான். கூடவே பாக்ய ஸ்தானத்தின் மீது செவ்வாய் பார்வையும் விழுவது சிறப்பு. வீட்டில் மனைவியின் அன்பான ஆதரவு கிடைக்கும். உங்களின் அன்பிற்குரியவர்களுடன் உற்சாகமாக இருக்கும் காலம் இது. காதலிப்பவர்களுக்கு இந்த மாதம் குதூகலமாக அமையும். இந்த காதலர் தினத்தில் மனம் மகிழும் பரிசினை கொடுத்து வாழ்க்கை துணையை அசரடியுங்கள்.

மிதுனம்: சுக்கிரன் மிதுனம் ராசிக்கு 12ஆம் வீட்டு அதிபதி உங்களுக்கு எட்டாம் வீடான மகரம் ராசியில் உச்சம் பெற்ற செவ்வாயுடன் பயணம் செய்வது விபரீத ராஜயோக அமைப்பை கொடுக்கப்போகிறது. திடீர் காதல் மலரும். உங்க ராசிக்கு குடும்ப ஸ்தானத்தை பார்ப்பது சிறப்பு. பண வரவு அற்புதமாக இருக்கும். உங்க சொல் வெல்லும் சொல்லாக இருக்கும். பிறரது மனதை கவரும் வகையில் பேசுவீர்கள். திடீர் தன யோகம் வரும். வாழ்க்கை துணையின் உடல் நலத்தில் அக்கறை செலுத்தவும். இல்லாவிட்டால் மருத்துவ செலவுகள் எற்படும். இருவருமே கவனமாக இருந்தால் பொருள், நகை பாதிப்பை தவிர்க்கலாம். விலை உயர்ந்த பரிசுப்பொருள் உங்கள் வீடு தேடி வரப்போகிறது.

கடகம்: களத்திர காரகன் சுக்கிரன் களத்திர ஸ்தானத்தில் அமர்வதால் கணவன் மனைவி இடையே பிரச்சினைகள் ஏற்படும். காதல் துணையுடன் வீண் வாக்குவாதம் வேண்டாம். சுக்கிரன் பார்வை உங்க ராசியின் மீது விழுவது சிறப்பு. இனிக்க இனிக்க காதலோடு பேசுவீர்கள். புதிய காதல் மலரும். வாழ்க்கை துணை உடனான காதல் உணர்வுகள் அதிகரிக்கும். சிலருக்கு காதல் கணிந்து திருமணத்திலும் முடிய வாய்ப்பு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+