சுக்கிரன் பெயர்ச்சி பலன்.. மீனத்தில் உச்சம் பெறும் சுக்கிரன்.. மாளவியா யோகத்தால் யார் வீட்டில் பணமழை
சென்னை: சுக்கிரன் காதல் நாயகன்.. களத்திர காரகன் சுக போகங்களின் அதிபதி. மீன ராசியில் உச்சம் பெறும் சுக்கிரன் ராகு உடன் இணைவதுதான் சிறப்பம்சமே. 18 ஆண்டுகளுக்குப் பிறகு மீன ராசியில் பயணம் செய்யும் ராகு உடன் உச்சம் பெறும் சுக்கிரன் கூட்டணி சேரப்போவதால் மாளவியா யோகம் கிடைக்கப்போகிறது. சில ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகத்தை கொடுக்கப்போகிறது.
மாளவியா யோகம்: ஆடம்பரத்திற்கும் அழகியலுக்கும் காரணகர்த்தாவான சுக்கிரன் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாதம் ஒருமுறை இடம் பெயர்வார். சுக்ரன் என்றால் இன்பம். மனித வாழ்க்கையில் அன்பு, பாசம், காதல் ஆகிய மூன்று இன்பங்களை அளிக்கக் கூடியவர். சுக்கிரன் சுக போகங்களின் அதிபதி. களத்திரகாரகன் சுக்கிரன் வாழ்க்கைத் துணையை அமைத்துக் கொடுப்பவர். ஆகையால் சுக்கிரன் நமது ஜாதக கட்டத்தில் நல்ல யோக அம்சத்துடன் இருப்பது அவசியம். இவருடைய தசா காலமான 20 வருடங்களில் மிகப்பெரிய ராஜ யோக பலன்கள் உண்டாகும். சுகிக்ரன் ரிஷபம், துலாம் ராசிகளில் ஆட்சி பெற்று அமரும் போதும் மீன ராசியில் உச்சம் பெறும் போதும் மாளவியா யோகம் எனப்படும் ராஜயோகத்தை தரப்போகிறார்.

ரிஷபம்: உங்கள் ராசிநாதன் சுக்கிரன் ராசிக்கு 11வது இடத்தில் லாப ஸ்தானத்தில் உச்சம் பெற்று பயணம் செய்யப்போகிறார். மனைவி வழியில் பண வருமானம் அதிகரிக்கும். லாப ஸ்தானத்தில் பயணம் செய்யும் சுக்கிரனால் உங்களுக்கு பல வழிகளில் இருந்தும் பணம் வரும். விருந்து விஷேசம் என்று பங்கேற்பீர்கள். சமூகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். வெள்ளிக்கிழமைகளில் பாயாசம் செய்து சிறு குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
மிதுனம்: சுக்கிரன் உங்கள் ராசிக்கு 10வது வீட்டில் அமரப்போகிறார். தொழில் ஸ்தானத்தில் சுக்கிரன் அமர்ந்துள்ளது உங்கள் வேலையில், தொழிலில் உற்சாகத்தை ஏற்படுத்தும். 10ஆம் வீட்டில் சுக்கிரன் உச்சம் பெற்று அமரப்போவதால் மாளவியா யோகம் தேடி வரப்போகிறது. பணியிடங்களில் அமைதியாகவும் அன்பாகவும் பேசவும். குடும்பத்தில் மனைவியுடனோ அல்லது காதலியுடனோ நெருக்கம் ஏற்படும். அஷ்டலட்சுமி யோகம் தேடி வரப்போகிறது.
கன்னி: காதல் நாயகன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு 7ஆம் இடத்தில் உச்சம் பெற்று அமரப்போகிறார். உச்சமடைந்த சுக்கிரன் தனது 7வது பார்வையால் கன்னி ராசிக்காரர்களை பார்வையிடுகிறார். வாழ்க்கை துணை உடனான காதல் உணர்வுகள் அதிகரிக்கும். சிலருக்கு காதல் மணியடிக்கும் காலமாகும். சிலருக்கு காதல் கனிந்து திருமணத்திலும் முடிய வாய்ப்பு உள்ளது. தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பெண்கள் விசயத்தில் சற்று கவனமாக இருக்கவும். விநாயகரை அருகம் புற்களால் அர்ச்சனை செய்ய நன்மைகள் அதிகரிக்கும்.
தனுசு: தனுசு ராசிக்கு 4வது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்யப்போவதால் சுகமும் சந்தோஷமும் அதிகரிக்கும். வீட்டுக்குத் தேவையான அலங்கார பொருட்களை வாங்கி வீட்டை அழகு படுத்துவீர்கள். அம்மா வழி சொத்துக்கள் கிடைக்கும். மனைவி குழந்தைகளினால் மகிழ்ச்சி அதிகரிக்கும். சிவபெருமான் பார்வதியை பச்சரிசி கொண்டு வணங்க நன்மைகள் ஏற்படும்.
மீனம்: உங்கள் ராசியில் சுக்கிரன் உச்சம் பெற்று அமரப்போகிறார் சுக்கிரன். உச்சம் பெற்று அமையும் சுக்கிரனால் மாளவியா யோகம் தேடி வரப்போகிறது. தங்கம், நகைகள் சேர்க்கை ஏற்படும். சிலருக்கு காதல் உணர்வுகள் அதிகரிக்கும்.. வங்கியில் பணமிருந்தாலும் அவ்வப்போது அக்கவுண்ட்டை செக் செய்து கொள்ளுங்கள். எதிரிகளிடம் சற்றே கவனம் தேவை. தினசரியும் விஷ்ணு சகஸ்ராநாமம் படிக்க நன்மைகள் அதிகரிக்கும்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications