சமசப்தம யோகம் பாடாய் படுத்தப் போகுது.. கவனமாக இருக்க வேண்டிய 4 ராசிகள்
சூரியன் பெயர்ச்சி: மகர ராசிக்குள் சூரிய பகவான் பெயர்ச்சியாகியுள்ளார். செவ்வாய் மிதுனத்தில் வக்ர நிலையில் சஞ்சரித்து வருவதால், சூரியன், செவ்வாய் சமசப்தம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் சில ராசிக்கார்கள் பாதிப்பை சந்திப்பார்கள். எந்தெந்த ராசிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று இந்த கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
செவ்வாயும், சூரிய பகவானும் தற்போது எதிரெதிர் ஸ்தானத்தில் அமரந்துள்ளனர். இதனால், ஒருவார காலத்துக்கு சில ராசிக்காரர்கள் குடும்பம் மற்றும் வேலையில் கடினமான பாதிப்புகளைச் சந்திப்பார்கள். ஜனவரி 14 முதல் ஜனவரி 22 ஆம் தேதி வரையிலான ஒருவார காலத்தில் சூரியன், செவ்வாய் கிரகங்கள் எதிரெதிராக சமசப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கின்றனர். இதனால், குடும்பத்தில் தேவையில்லாத பிரச்னைகள், பாதகமான சம்பங்கள் நடக்கும்.

வியாபாரம், தொழிலில் இழப்பு, மனக் கவலைகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் குறைபாடு, பணி அழுத்தம் போன்ற பிரச்னைகள் சிரமம் ஏற்படும். புதிய தொழில் தொடங்குவது, முதலீடு செய்வது போன்ற பணம் சார்ந்த விஷயங்களை தவிர்ப்பது நன்மை பயக்கும். மன அழுத்தங்கள் அதிகரிக்கும். உடல்நலத்தில் பாதிப்புகள் ஏற்படும். திட்டமிட்டு வேலைகளை செய்து முடிப்பதால் உங்களுடைய அழுத்தத்தை சமாளிக்கலாம்.
கடகம்: சப்தம ஸ்தானத்தில் சூரியனும், செவ்வாயும் கடக ராசியில் சந்திக்கின்றனர். இதனால் உறவுகளுக்கிடையை பிரச்னைகள் ஏற்படும். காதல் வாழ்க்கை, குடும்பத்தில் பிரச்னை உருவாகும் வாய்ப்புள்ளது. வேலையில் பதற்றமான சூழல் உண்டாகும். பெரியவர்களுடன் தேவையில்லாத கருத்து வேறுபாடுகளும், மனக் கசப்புகளும் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே பிரச்னை ஏற்படும். எதிர்காலம் தொடர்பான கவலை மற்றும் குழப்பம் உருவாவதற்கான சூழல் உள்ளது. தொழிலில் போட்டி உண்டாகும். அதனால் பிரச்சனையையும் சந்திப்பீர்கள். தந்தை, உடன் பிறந்தவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.
சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு சவாலான காலமாகத்தான் இருக்கப் போகிறது. வியாபாரம், தொழிலில் போட்டிகளைச் சந்திக்கும் சூழல் உருவாகும். தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் கிடைக்காது. சில தேவையற்ற பயணங்களால் உடல்நலப் பிரச்னைகள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே பிரச்னைகள் ஏற்படும். நீண்ட பயணங்களால் நீங்கள் எதிர்பார்த்த லாபம் கிடைக்காது. நிதி சார்ந்த பிரச்னைகளால் குடும்பத்தில் பிரச்னைகள் ஏற்படும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் உருவாகுவதைத் தவிர்க்க வேண்டும்.
கும்பம்: கும்ப ராசிக்காரர்களுக் கடினமான காலமாக இருக்கும். தேவையற்ற பிரச்னைகளால் சிரமத்தை சந்திப்பீர்கள். குடும்பத்தில் இணக்கமில்லாத சூழல் ஏற்படும். மனக் கவலைகள் அதிமாகும். உங்களுடைய மன தைரியம் குறையும். நம்பிக்கை இழப்பீர்கள். வேலையில் திட்டமிட்டு செய்து முடிக்க முயற்சிப்பது நல்லது. நிர்வாகம், ராணுவம், காவல் துறை, விளையாட்டுத் துறை, வியாபாரத் துறையில் உள்ளவர்களுக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்காது. வாகனம் பயன்படுத்தும்போது கவனமாக இருக்க வேண்டியது அவசியம். புதிய திட்டங்களைத் தவிர்ப்பது நல்லது.
செவ்வாய் வக்கிர நிலையில் பின்னோக்கி நகர்ந்து கடகத்தில் இருந்து மிதுன ராசியில் ஜனவரி 21 ஆம் தேதி நுழைவார். இதனால் சூரியன் மற்றும் செவ்வாய் கிரகங்கள் ஏற்படுத்தி வந்த சமசப்தம யோகம் நிறைவடையும். இதனால், சில ராசிகளுக்கு கடினமான விளைவுகள் அனைத்தும் குறையும்.
-
குருப்பெயர்ச்சி: மிதுன ராசிக்கு பேச்சில் தான் கண்டமே.. இந்த விஷயங்களை செய்திடவே செய்திடாதீங்க -
ஆனி மாத பலன்கள்: கடக ராசிக்கு வச்ச குறி தப்பாது.. ஜூலை 1க்கு பிறகு ராஜயோகம்.. பேச்சு தான் பிரச்சனையே -
குருப்பெயர்ச்சி: குருவின் அருளால் ரிஷப ராசிக்கு பொற்காலம் ஆரம்பம்.. வேலையில் முன்னேற்றம் -
Guru Peyarchi: மேஷ ராசிக்கு அதிர்ஷ்டத்தை தரும் குருப்பெயர்ச்சி.. வாழ்க்கையை மாற்றும் 3 விஷயங்கள் -
பத்ர ராஜயோகத்தால் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. இந்த 5 விஷயம் உங்களுக்கு கண்டிப்பா நடக்கும் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications