Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரிஷபத்திற்கு இடப்பெயர்ச்சியாகும் சூரியன்.. வெற்றிகளை குவிக்கப்போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா

மேஷ ராசியில் உள்ள சூரியன் ரிஷப ராசிக்கு இடப்பெயர்ச்சியாகப்போகிறார். சுக்கிரன் வீட்டில் அமரும் சூரியனால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: உச்ச பெற்ற மேஷ வீட்டில் இருந்து உழைப்பின் வீடான ரிஷப ராசிக்கு இடப்பெயர்ச்சியாகிறார் சூரியன். சுக்கிரனின் வீடான ரிஷப ராசியில் அமரப்போகும் சூரியனால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமும் செல்வாக்கும் தேடி வரும். புதிய தொழில் தொடங்கலாம். காதல் மலரும், திருமணம் கை கூடி வரும். இந்த கிரகப்பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு யோகம் தேடி வரும் என்று பார்க்கலாம்.

வைகாசி மாதம் ரிஷப மாதம். சூரியன் ரிஷப ராசியில் பயணம் செய்யும் கால கட்டத்தில் சூரியனின் பார்வை விருச்சிக ராசியின் மீது விழுகிறது. சூரியன் அரச கிரகம் என்பதால் சிலருக்கு அரசு தொடர்பான ஆதாயம் கிடைக்கும்.

அரசு வேலைக்கு தேர்வு எழுதுபவர்களுக்கு வெற்றிகரமான மாதமாக அமையும். அரசாங்கத்திடம் இருந்து வர வேண்டிய பணம் தேடி வரும். சில ராசிக்காரர்களுக்கு இந்த சூரியப்பெயர்ச்சி சில பாதகங்களையும் தரும். எந்த ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் அதிர்ஷ்டகரமான மாதமாக அமைந்துள்ளது என்று பார்க்கலாம்.

ரிஷபம்

ரிஷபம்

சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களே, சூரியன் உங்கள் ராசியில் வந்து அமர்கிறார். ராசியில் அமரும் சூரியனால் நல்ல பண வருமானம் வரும். பெரிய அளவில் முதலீடு செய்வீர்கள். வாழ்க்கைத் துணையுடன் அதிக வாக்குவாதங்கள் வர வாய்ப்பு உள்ளது. உழைப்பாளிகள் நீங்கள் என்பதால் இந்த மாதம் அதிக உழைப்பை கொடுக்க வேண்டியிருக்கும். திருமணம் சுப காரியம் தொடர்பாக பேசும் போது யோசித்து பெரியவர்களை ஆலோசித்து முடிவெடுக்கவும். காதலிப்பவர்களுக்கு இந்த மாதம் அதிக கலகலப்பாக இருப்பாது.
உங்களின் உடல் ஆரோக்கியத்திலும் அம்மாவின் உடல் ஆரோக்கியத்திலும் அக்கறை காட்டவும். குறிப்பாக கண்களில் கவனம் தேவை. உடலிவ் சூடு அதிகரிக்கும். பெரிய அளவில் முடிவெடுக்கும் முன்பாக ஒருமுறைக்கு இருமுறை யோசித்து புத்திசாலித்தனமாக முடிவெடுப்பது நல்லது.

கடகம்

கடகம்

நீர் ராசி கடக ராசி. சந்திரன் ஆட்சியாக அமரும் வீடு கடகம். உங்களுக்கு சூரியன் லாப வீட்டில் பயணிப்பதால் அதிக பண வரவு வரும். வரக்கூடிய பணத்தை பத்திரமாக முதலீடு செய்யுங்கள். வருமானத்தை அதிகரிக்கும் நிதி ஆதாரங்களைத் தேடுவீர்கள். பெற்றோரின் ஆசியும் அவர்களின் ஆலோசனையும் அவசியம். புதிய தொழிலை தொடங்க இது சாதகமான நேரம் என்பதால் அதற்கான முயற்சிகளை எடுக்கலாம். நவகிரகங்களின் குருவின் பார்வையும் உங்களுக்கு இந்த மாதம் கிடைப்பதால் வெற்றிகள் தேடி வரும். நற்காரியங்கள் அதிகம் நடைபெறும் மாதம் என்பதால் திருமணம் தொடர்பாக முயற்சி செய்யலாம். வரன் பார்க்கலாம். பேசி முடிவெடுக்கலாம். உங்களின் மன ஆசைகள் நிறைவேறும் மாதமாக இந்த மாதம் அமைந்துள்ளது.

துலாம்

துலாம்

சூரியன் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் பயணம் செய்வதால் செயல்களில் நிதானம் அவசியம். வண்டி வாகனங்களில் போகும் போது கவனமும் நிதானமும் அவசியம். புத்திசாலித்தனத்தை பயன்படுத்தவும். பொறுமை அதிகம் தேவைப்படும் காலகட்டமாகும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. அதிக நெருக்கடிகள் வரலாம் என்பதால் எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவெடுக்கவும். நெருப்பு விசயங்களில் கவனம் தேவை. சூரியனால் ஏற்படும் பாதிப்புகள் குறைய 'ஓம் பாஸ்கராய நம' என்று தினமும் காலை நேரத்தில் உச்சரித்து சூரிய நமஸ்காரம் செய்வது அவசியம்.

விருச்சிகம்

விருச்சிகம்

செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களே, உங்கள் ராசிக்கு நேர் எதிரே ஏழாம் வீட்டில் சூரியன் பயணம் செய்வது சாதகமாக இல்லை. கணவன் மனைவி இடையே வாக்குவாதங்கள் அதிகம் நடைபெறும். விட்டுக்கொடுத்து செல்லுங்கள். அன்பை அபரிமிதமாக செலுத்துங்கள் உங்களுக்கு சாதகமாகவே சண்டை முடியும். தொழிலில் பண முதலீடுகளை அதிகம் செய்ய வேண்டாம். அகலக்கால் வைக்க வேண்டாம் ஆபத்தாகி விடும். பண விவகாரங்களில் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். அலர்ஜி தொடர்பான நோய்கள் வர வாய்ப்பு உள்ளது கவனம்.

தனுசு

தனுசு

நெருப்பு ராசி தனுசு ராசி. குருபகவான் ஆட்சியாக அமரும் வீடு என்பதால் உங்களுக்கு இந்த மாதம் அற்புதங்கள் நடைபெறும். காரணம் சூரியன் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணிப்பதால் புதிய வேலை கிடைக்கும். வெற்றிகரமான மாதமாக அமைந்துள்ளது. வெளியூர் பயணம் தேடி வரும். பண வரவும் அதிகரிக்கும். வெளியூர் பயணங்கள் தேடி வரும். அப்பா உடனான உறவுகள் அற்புதமாக இருக்கும். அப்பா வழி உறவுகளினால் சுப செய்திகள் தேடி வரும்.

மீனம்

மீனம்

சூரியன் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் இருந்து மூன்றாம் வீடான முயற்சி ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். வாழ்க்கையில் முன்னேற்றம் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகளுக்கு வெற்றிகள் கிடைக்கும். உங்களின் தொழில் முதலீடுகளில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். எந்த ஒரு வேலையையும் சுறுசுறுப்பாக ஆர்வத்துடன் செய்து முடிப்பீர்கள். கடின உழைப்பை கொடுக்க வேண்டிய மாதமாகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+