வார ராசி பலன்: ஜனவரி 13 முதல் 19 வரை அதிர்ஷ்டம் பெறும் 5 ராசிகள்.. என்னென்ன பலன்கள் கிடைக்கும்?
வார அதிர்ஷ்ட ராசிபலன்: ஜனவரி 13 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் முக்கிய கிரகங்களான சந்திரன், சூரியனின் பெயர்ச்சிகள் நடைபெறுகின்றன. முக்கியமாக, சூரிய பகவான் மகர ராசிக்கு பெயர்ச்சி ஆவதால் இந்த வாரத்தில் எந்தெந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம், செல்வம் என்று இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்...
2025 புத்தாண்டில் முக்கிய கிரகங்களின் மாற்றங்கள் நடைபெறவுள்ளதால் அனைத்து ராசிகளிலும் தாக்கம் ஏற்படும். ஜனவரி 13 முதல் 19 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் சூரிய பகவான் மகர ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். சூரியனும், குரு பகவானும் நவபஞ்சம ஸ்தானத்தில் அமர்ந்து யோகத்தை உருவாக்கப் போகின்றனர். இதன் மூலமாக ஐந்து ராசிக்காரர்களுக்கு யோகம் கொட்டப் போகிறது. நற்பலன்களை பெறப்போகும் அந்த 5 ராசிக்காரர்கள் குறித்து விரிவாக காணலாம்.

மேஷம் (Mesham): மேஷ ராசிக்காரர்களுக்கு இருந்து வந்த அனைத்து விதமான பிரச்னைகளில் இருந்தும் விடுபடப் போகிறீர்கள். உங்கள் மனதை ஆக்கிரமித்திருந்த அனைத்து கவலைகளும் விலகிப் போகும். உங்களுடைய பணி சூழல் மேம்படும். வீட்டில் மகிழ்ச்சி பெருகும். பேச்சில் கவனமாக இருப்பது நல்லது. நல்ல இனிமையான பேச்சுகளால் உங்களுடைய மரியாதை அதிகரிக்கும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு பெருகும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். அதன் மூலம் சில ஆதாயங்களையும் அடைவீர்கள்.
ரிஷபம் (Rishabam): ரிஷப ராசிக்காரர்களுக்கு ஜனவரி மூன்றாம் வாரம் முதல் அதிர்ஷ்டம் நிறைந்த காலமாக மாறப்போகிறது. நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் நடக்கும். வியாபாரம், தொழில், வேலையில் நல்ல முன்னேற்றத்தைப் பெறுவீர்கள். குடும்பத்திலும், வெளி வட்டாரத்திலும் மற்றவர்களின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் இணக்கமான சூழ்நிலை உண்டாகும். உங்களுடைய பயணங்கள் இனிமையானதாக இருக்கும். பெரிய விஷயங்களை செய்து முடிப்பதற்கான வாய்ப்பு ஏற்படும். குடும்ப உறுப்பினர்களின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். இணையுடன் மகிழ்ச்சியான தருணத்தை அனுபவிப்பீர்கள்.
சிம்மம் (Simmam): சிம்ம ராசிக்காரர்களுக்கு நற்பலன்களைத் தரும் வாரமாக இந்த வாரம் இருக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த அனைத்து விஷயங்களும் நடக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் தொடர்பான நல்ல செய்திகள் வந்து சேரும். பதவி உயர்வு, சம்பள உயர்வைப் பெறுவீர்கள். புதிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும். சமுதாயத்தில் உங்களுடைய மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். வேலை செய்யும் பெண்களுக்கு வெற்றி வாய்ப்புகள் தேடி வரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. ஆரோக்கியம் மேம்படும்.
துலாம் (Thulam): துலாம் ராசிக்காரர்களுக்கு சற்று வேகமான வாரமாக இந்த வாரம் இருக்கும். அதன் மூலம் நல்ல பலன்களும் கிடைக்கும். செய்யும் வேலையின் சுமை அதிகரிக்கும். பணியிடத்தில் முக்கிய பொறுப்புகள் கிடைக்கும். உங்களுடைய புத்திக்கூர்மை மற்றும் விவேகத்தால் சவால்களை சமாளிப்பீர்கள். வேலையில் சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். குடும்பப் பிரச்னைகளில் இருந்து விடுதலையாவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உறவினர்களின் ஆதரவு உங்களுக்கு உற்சாகத்தை தரும். உறவுகளுக்குள் இணக்கம் ஏற்படும்.
விருச்சிக (Viruchigam): விருச்சிக ராசிக்காரர்களுக்கு நீண்ட நாள்களாக தடைபட்டு வந்த அனைத்து காரியங்களையும் செய்து முடிப்பீர்கள். உங்களுடைய வருமானம் அதிகரிக்கும். பொருளாதார சூழல் சீராகும். ஆன்மிக நடவடிக்கைகைளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். தொழில், வியாபாரம், வேலையில் சிறந்து விளங்குவீர்கள். புதிய வருமானத்துக்கான ஆதாரங்கள் உண்டாகும். உங்களுடைய சேமிப்புகளை அதிகரிப்பற்கான வாய்ப்புகள் உண்டாகும். புதிய முதலீடுகளை செய்ய நினைப்பவர்களுக்கு சாதகமான காலமாக இருக்கும். வாழ்க்கையில் ஒருபடி மேலே செல்வதற்கான அனைத்து விஷயங்களும் கைகூடி வரும். கூடுதல் வருமானத்துக்கான முயற்சிகளை செய்யும் வாய்ப்பு உண்டாகும்.












Click it and Unblock the Notifications