Solar Eclipse 2023: சூரிய கிரகண நாளில் வரும் சதுர்கிரஹி யோகம்.. யாருடைய தலை எழுத்து மாறும்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் 20, 2023 வியாழக்கிழமையன்று நிகழ உள்ளது. மேஷ ராசியில் 4 கிரகங்கள் இணைந்துள்ளதால் சதுர்கிரஹி யோகமும் வரப்போகிறது. இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது என்றாலும் இந்த கங்கண வளைய சூரிய கிரகணத்தின் போது, 6 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அதிரடி மாற்றங்கள் நிகழப்போகிறது. யாரெல்லம் கவனமாக இருக்க வேண்டும் என பார்க்கலாம்.

சூரிய கிரகணம் ஏப்ரல் 20ஆம் தேதி வியாழக்கிழமை காலை 7.04 மணிக்கு தொடங்கி மதியம் 12.29 மணிக்கு முடியும். இந்த முறை சூரிய கிரகணத்தின் காலம் 5 மணி 24 நிமிடங்கள் இருக்கும். மேஷ ராசியில் சூரியன், சந்திரன், புதன், ராகு ஆகிய கிரகங்கள் இணைந்துள்ளன. இந்த நான்கு கிரக சேர்க்கை சதுர்கிரஹி யோகத்தை தரப்போகிறது.

 Surya Grahan 2023 Rasi Palangal: These 6 Zodiac Signs People Needs to be More Careful on Solar Eclipse

மேஷம் ராசிக்காரர்களுக்கு 18 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த அற்புத யோகம் உருவாக உள்ளது. மேஷ ராசியில் நான்கு கிரகங்கள் இணைந்துள்ளதால் ஆளுமைத்திறன் அதிகரிக்கும். வேலையில் திறமை அதிகரிக்கும். புரமோஷனும் சம்பள உயர்வும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. நீண்ட நாட்களாக எதிர்பார்த்த நல்ல காரியங்கள் கைகூடி வரும். இந்த நாளில் நீங்கள் செய்யும் செயலால் திடீர் பண வரவும் ஜாக்பாட் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு விரைய ஸ்தானத்தில் கிரகணம் நிகழ்கிறது. நான்கு கிரகங்கள் விரைய ஸ்தானத்தில் இணைந்துள்ளதால் திடீர் செலவுகள் வரும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். பணத்தை பத்திரப்படுத்துங்கள்.

கன்னி ராசிக்காரர்களுக்கு உங்கள் ராசிக்கு எட்டாவது வீட்டில் சூரிய கிரகணம் நிகழ்கிறது. அஷ்டம ஸ்தானத்தில் சூரியன்,ராகு, புதன், சந்திரன் ஆகிய 4 கிரகங்கள் இணைவதால் வாகன பயணங்களில் கவனம் தேவை. பேசும் வார்த்தைகளில் கவனமும் நிதானமும் தேவைப்படும். பணம், நகை,விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக வைத்திருக்கவும். பணத்தை யாருக்கும் கடனாக தர வேண்டாம். ஜாமீன் கையெழுத்து போட்டு கடனாக தரும் பணம் திரும்ப வர வாய்ப்பு இல்லை.

விருச்சிக ராசிக்காரர்களுக்கு உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் சூரிய கிரகணம் நிகழ்கிறது. ஆறாம் வீட்டில் நான்கு கிரகங்கள் இணைவதால் நோய்கள் நீங்கும் ஆரோக்கியம் அதிகரிக்கும். எதிரிகள் பிரச்சினை முடிவிற்கு வரப்போகிறது. நீண்ட நாட்களாக நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத திடீர் பண வரவு உண்டாகும். மனதில் உற்சாகமும் தெம்பும் பிறக்கும்.

மகரம் ராசிக்காரர்களுக்கு சூரிய கிரகணம் நான்காம் வீட்டில் நிகழ்கிறது. நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் சூரியன், புதன்,சந்திரன் ராகு இணைந்து பயணம் செய்வதால் எதிர்பாராத திடீர் திருப்பங்கள் உண்டாகும். வீடு, வண்டி வாகனம் வாங்குவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. சொத்து, மனை வாங்கும் போது தாய் பத்திரங்களை பார்த்து வாங்குவது நல்லது.

கும்பம் ராசிக்காரர்களுக்கு சூரிய கிரகணம் மூன்றாவது வீட்டில் முயற்சி ஸ்தானத்தில் நிகழ உள்ளது. வேலை தொழில் விசயமாக புதிய முடிவுகளை எடுக்கும் முன்பாக கொஞ்சம் முன் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. ஒரு விஷயத்திலும் தடை, தாமதங்கள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் அக்கறையும் கவனமும் தேவைப்படும். இளைய சகோதரர்கள் வீட்டு விஷேசங்களில் பங்கேற்பீர்கள்.

மீனம் ராசிக்காரர்களே..உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் சூரிய கிரகணம் நிகழ உள்ளது. இரண்டாம் வீடான குடும்ப ஸ்தானத்தில் நான்கு கிரகங்கள் இணைகின்றன. குடும்பத்தில் கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன சண்டைகள் வந்து போகும். பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. பண வருமானம் அதிகரிக்கும். கடன் பிரச்சினை நீங்கும். எதிலும் கவனமாகவும் நிதானமுடனும் செயல்படுவது நல்லது. பண விவகாரங்களில் கவனம் தேவை. உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். மருத்துவ செலவுகள் வரலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+