இந்தியா – நியூசிலாந்து இறுதி போட்டி.. உலக கோப்பையை வெல்ல போவது யார்.. ஜோதிட கணிப்பு
உலகக்கோப்பை கணிப்பு: ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் உலகக் கோப்பை இந்தியா - நியூசிலாந்து இறுதி போட்டிக்காக காத்திருக்கிறார்கள். இந்தியா வென்று சாதனை படைக்கும், நியூசிலாந்து அணியின் கோப்பை தாகம் நிறைவேறுமா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஜோதிட ரீதியாக கிரக நிலைகள் எப்படி இருக்கின்றன, எந்த அணி வெற்றி பெறும் என்பதை இந்தக் கட்டுரையில் காணலாம்.
டி20 உலக கோப்பை இறுதி போட்டியில் இன்று இந்தியா - நியூசிலாந்து அணிகள் இன்று இரவு மோதுகின்றன. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெறவுள்ளது. நடப்பு சாம்பியன் இந்தியா கோப்பையை தக்க வைக்கும் முனைப்பிலும், நியூசிலாந்து முதல் முறையாக உலக கோப்பையை தட்டித் தூக்கும் இலக்கிலும் களம் காண்கிறார்கள்.

இந்தியா - நியூசிலாந்து இறுதி போட்டி
பொதுவாக 20 ஓவர் உலக கோப்பையில் நியூசிலாந்து அணியை இந்தியா வென்றதே கிடையாது. நடப்பு சாம்பியன்கள் மீண்டும் கோப்பையை தக்க வைத்ததாகவோ, போட்டியை நடத்தும் நாடுகளே 20 ஓவர் உலகக் கோப்பையை வென்றதும் இல்லை என தரவுகள் கூறுகின்றன. பழைய தரவுகளை எல்லாம் தவிடு பொடியாக்கி இந்தியா கோப்பையை வெல்ல வேண்டும் என கோடிக்கணக்கான ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.
உலகக் கோப்பை நாக் அவுட் போட்டிகளில் இந்தியா நியூசிலாந்து போட்டியில் இந்தியாவுக்கு அதிக கண்டம் இருக்கிறது. இந்தியாவை வீழ்த்தி தான் நியூசிலாந்து டெஸ்ட் சாம்பியன் பட்டம் வென்றது. 2019 ஆம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பை செமி பைனல் போட்டியிலும் நியூசி நம்மை வீழ்த்தினார்கள். ஆனால் 2023 உலகக் கோப்பை செமி பைனல், கடந்த வருடம் நடைபெற்ற சாம்பியன் டிராபி இறுதி போட்டியில் நியூசியை இந்தியா வென்றுள்ளது.
இந்தியாவுக்கு எப்படி?
நடப்பு உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக நடந்த டி20 தொடரிலும் நியூசிலாந்தை இந்தியா வீழ்த்தியுள்ளது. கடந்த 2023 உலகக் கோப்பை இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா, இந்தியாவை வீழ்த்திய அதே நரேந்திர மோடி மைதானத்தில் போட்டி நடைபெறுவதால் இந்திய ரசிகர்கள் பெரும் பதற்றத்திலும் பயத்திலும் இருக்கிறார்கள். ஜோதிட ரீதியாக இன்றைய போட்டி எந்த அணிக்கு சாதகமாக உள்ளது.
விளையாட்டில் செவ்வாய், புதன், வியாழன், சனி, சந்திரன் கிரகங்களின் அமைப்பு மிகவும் முக்கியமானது. இந்திய வீரர்கள் பெரும்பாலோனருக்கு செவ்வாய் மற்றும் சூரிய பகவான் ஆதிக்கம் நிலவுகிறது. இது தைரியம் மற்றும் தலைமை பண்பை குறிக்கும். கேப்டன் சூர்யகுமார் யாதவுக்கு செவ்வாய் மற்றும் புதன் தாக்கம் அதிகமாக உள்ளது.
வெற்றி பெறுமா
முக்கியமான தருணங்களில் தெளிவான முடிவு எடுப்பது, ஷாட் செலக்ஷன் ஆகியவற்றில் இது உதவும். ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவின் ஜாதகத்திலும் செவ்வாய் ஆதிக்கம் உள்ளது. இதனால் அவர் அதிரடியாக விளையாட வாய்ப்புள்ளது. நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்ப்ரீத் பும்ராவுக்கு செவ்வாய் மற்றும் சனி திசை நிலவுகிறது. இது அவரின் செயல்பாட்டை துல்லியமாக்கும்.
உலகக் கோப்பையில் நட்சத்திர வீரராக ஜொலிக்கும் சஞ்சு சாம்சனுக்கு புதன் திசை வலுவாக உள்ளது. இதனால் அணியின் தேவையை அறிந்து அவர் சிறப்பாக செயல்பட வாய்ப்புள்ளது. இந்தியா முதலாவது பேட்டிங் என்றால் அதிக ரன்களை சூவித்து, நியூசிலாந்துக்கு நெருக்கடி கொடுத்து வெற்றி பெற வாய்ப்புள்ளது. சேஸிங் என்றால் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும்.
நியூசிலாந்துக்கு எப்படி
நியூசிலாந்து அணிக்கு சனி மற்றும் சந்திரன் திசை வலுவாக உள்ளது. இதனால் அவர்களின் கேம் பிளானை துல்லியமாக செயல்படுத்த வாய்ப்புள்ளது. முக்கிய பார்ட்னர்ஷிப், ஷார்பான பௌலிங் இருக்கும். அந்த அணியின் கேப்டன் மிட்சல் சான்ட்னருக்கு புதன் மற்றும் சனியின் தாக்கம் இருக்கிறது. இதனால் எந்த அழுத்தமும் இல்லாமல் அவர் கேப்டன் கூலாக வலம் வருவார்.
செவ்வாய், வியாழன் தாக்கம் ஆகியவற்றால் இந்தியா வெற்றி பெற வாய்ப்புள்ளது. இரவு 10.36 - 10.41 மணி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த தருணத்தில் நடைபெறும் நகர்வு போட்டியில் டிவிஸ்ட் ஏற்படுத்தலாம். சேஸிங்கில் திட்டமிடல் இல்லாமல் இந்தியா சொதப்பினால் நூலிழையில் கோப்பை பறிபோவதற்கும் கூட வாய்ப்புள்ளது.
-
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்!












Click it and Unblock the Notifications