Tamil Puthandu Palan: தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கும் 5 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க!
தமிழ் புத்தாண்டு பலன்: தமிழ் புத்தாண்டு முன்னிட்டு அனைவரும் தங்களின் வரவிருக்கும் ஆண்டின் பலன்களை அறிந்து கொள்ள ஆவலாக இருப்பீர்கள். அந்த வகையில், இந்த ஆண்டு ஜாக்பாட் அடிக்கும் 5 ராசியினர் வாழ்க்கையில் என்ன மாற்றங்கள் நடக்கும்? தொழில், பணம், உடல்நலம், குடும்பம், காதல், திருமணம் போன்ற முக்கிய அம்சங்களில் ஏற்படும் முன்னேற்றம், சவால்கள் குறித்தது இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி காலை 8.42 மணிக்கு சதயம் நட்சத்திரத்தில் தமிழ் புத்தாண்டு (சித்திரை 1) பிறக்கிறது. மீனத்தில் சூரியன் வரக்கூடிய நாளே சித்திரை 1 ஆம் நாள். விசுவாவசு ஆண்டு நிறைவடைந்து பராபவ ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். இந்த ஆண்டில் 12 ராசிகளுக்கும் கிரக நிலைகளின் அடிப்படையில் பலன்கள் கிடைக்கும். அந்த வகையில், இந்த ஆண்டு ஜாக்பாட் அடிக்கும் 5 ராசியினர் யார், கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

ரிஷபம்
இந்த ஆண்டு உங்களுக்கு பணவரவு அதிகரிக்கும். முதலீடுகள் லாபம் தரும். குடும்பத்தில் சந்தோஷம் கூடும். எதிர்பாராத வருமான வாய்ப்புகள் கிடைக்கும். நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும் காலகட்டம். பொருள் சேர்க்கை உண்டாகும். வாங்குவது, விற்பது, திருமணம் நடப்பது, வீடு கட்டுவது, வீட்டில் இன்டீரியர் டெக்கரேட் செய்யும் யோகம் உண்டாகும். தாய் தந்தைக்கு 60 ஆவது திருமணம் செய்து வைப்பது போன்ற அமைப்பு உள்ளது.
வீடு வாங்கும் யோகம்
குழந்தை பாக்கியம் கிடைக்கும். அப்பா, அம்மாவுக்கு வீடு, வண்டி வாங்கிக் கொடுக்கும் யோகம் உண்டு. பெற்றோரின் மனதை குளிர வைப்பீர்கள். முதலீடுகளைச் செய்து மகிழ்வீர்கள். சொந்த தொழில் தொடங்குவதற்கான யோகம் உண்டாகும். பெரிய தொழிலதிபராவது, அரசியலில் மந்திரி, எம்எல்ஏ, ஊராட்சி கவுன்சிலர் போன்ற பதவிகள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. பணி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும்.
மேலதிகாரிகள் உங்களிடம் பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். மனதில் புதிய தெளிவு பிறக்கும். சக ஊழியர்கள் நட்பு பாராட்டுவார்கள். அலுவலகப் பயிற்சிகளில் தேர்ச்சியடைவீர்கள். பூர்வீகச் சொத்துகள் கைக்கு வரும். அதில் இருந்து வரும் வருமானத்தை வைத்து நற்செயல்களைச் செய்வீர்கள். அதில் வரும் வருமானத்தை வைத்து சில தான தர்மங்களைச் செய்வீர்கள். குழந்தைகளால் சந்தோஷம் அடைவீர்கள்.
கடகம்
வேலை மற்றும் தொழிலில் பெரிய முன்னேற்றம். பதவி உயர்வு அல்லது புதிய வேலை வாய்ப்பு கிடைக்கலாம். பணநிலையும் நிலையாக இருக்கும். ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். சனி அஷ்டமத்தில் இருந்து விலகி இருக்கிறது. ராகு 8 இல் இருப்பது திடீர் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். ஏப்ரல் 14 ஆம் தேதியில் இருந்து நன்மைகள் நடக்கும் காலகட்டமாக இருக்கும். நல்ல பொறுப்புகளுக்கு வரக்கூடிய அமைப்பு உள்ளது. பெரிய பொறுப்புகள், அதிகாரம் கிடைக்கும். ஏற்றம் ஏற்படும் காலகட்டம். உத்தியோகத்தில் அனுகூலம் காணப்படும்.
பிள்ளைகள் விஷயத்தில் ஏற்றங்கள் ஏற்படும். பிள்ளைகளுககு திருமண யோகம் உண்டாகும். அவர்களின் படிப்பு, தொழிலில் ஏற்றம் ஏற்படும். குடும்பத்தில் புதிய வரவுகள் உண்டாகும். இடமாற்றம், வீடு மாற்றம், உத்தியோக மாற்றம், மனை மாற்றம் ஏற்படும். முதுகு தண்டுவடத்தில் பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதால் கவனம் தேவை.
சிம்மம்
இந்த வருடம் உங்கள் லைஃப் டர்னிங் பாயிண்ட் ஆக இருக்கும். பெயர், புகழ், பணம் - மூன்றிலும் வளர்ச்சி. அரசாங்கம் தொடர்பான விஷயங்களில் நல்ல செய்தி. நிறைய நன்மைகள் நடக்கும். மன அழுத்தம் இல்லாம் பார்த்துக் கொள்ள வேண்டும். நல்லவர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய அறிமுகங்களிடம் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். ஆண்களாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.
கடன் தீரும்
பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். எதிரிகள் விஷயத்தில் இருந்து வந்த சிக்கல் தீரும். வியாபாரத்தில் இருந்த பாதிப்புகள் நீங்கும். பொருளாதாரத்தில நல்ல முன்னேற்றண் ஏற்படும். யோக பலன்கள் அடுத்தடுத்து நடக்கும் காலகட்டம். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் இருந்து வந்த பாதிப்புகள் நீங்கி, அதீத நன்மைகள் உண்டாகும்.
விருச்சிகம்
பழைய பிரச்சனைகள் முடிவுக்கு வரும். திடீர் பணவரவு அல்லது சொத்து சம்பந்தமான லாபம். தொழிலில் பெரிய முன்னேற்றம்.விருச்சிகம் ராசியினருக்கு பிள்ளைகளின் விஷயத்தில் இருந்து வந்த பாதிப்புகள் நீங்கும். எல்லா விஷயங்களிலும் ஏற்றம் ஏற்படும். குடும்பத்தில் புதிய வரவுகள் வரும். சுபகாரியங்கள் அடுத்தடுத்து நிறைய நடக்கும் நல்ல காலகட்டம்.
பெற்றோர் வண்டி, வாகனத்தில் செல்லும்போது மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பூர்வீகத்தில் சொத்து கிடைத்தால் வாங்கிக் கொள்வது நல்லது. உடனிருப்பவர்கள் சதி செய்வார்கள் என்பதால் மிகுந்த கவனம். நிறைய நன்மைகள் உண்டாகும் காலகட்டம். அஷ்டலட்சுமி கடாட்சம் ஏற்படும். ஆடை, ஆபரணங்களை வாங்குவீர்கள். முதலீடுகளை செய்து மகிழ்வீர்கள். தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும்.
புதிய முயற்சிகள் கைகூடும். கண் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் பரிபூரணமாக நீங்கும். எல்லா சூழ்நிலையிலும் நல்ல முடிவுகளை எடுப்பீர்கள். சரியான நேரத்தில் கடன்களை அடைத்து முடிப்பீர்கள். சவால்கள், போட்டிகளை சாதுரியமாக சமாளிக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். தெய்வக் கோயில்களுக்கு திருப்பணிகள் மேற்கொள்வீர்கள்.
மீனம்
இந்த ஆண்டு உங்களுக்கு அதிர்ஷ்டம் பக்கம் நிற்கும். நீண்டநாள் ஆசைகள் நிறைவேறும். திருமணம், வேலை, வெளிநாடு வாய்ப்புகள் கிடைக்கும். மீனம் ராசியினருக்கு ஜென்மசனி நடந்து கொண்டிருக்கிறது. திருமணம், தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு போன்றவற்றில் இருந்த தடைகள் எல்லாம் நீங்கும். அடுத்தடுத்து முன்னேற்றங்கள் ஏற்படும் காலகட்டமாக இருக்கும். ஜென்ம சனியில் குடும்பத்தில் காணப்பட்டிருந்த பிரச்சனைகள் அனைத்தும் தீரும். உறவுகள் தொடர்பான விஷயங்களில் மேன்மை ஏற்படும்.
கனவுகள் நிறைவேறும்
பெற்றோர், பெரியோரின் நீண்ட நாள் கனவுகளை நிறைவேற்றி வைப்பீர்கள். அஷ்டலட்சுமி கடாட்சம் உண்டாகும். பண வரவு அபரிமிதமானதாக இருக்கும். வாகனத்தில் அற்புதமான மாற்றம் ஏற்படும். வண்டி, வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள். உங்களுக்குப் பிடித்த வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள். தைரியம் ஏற்படும். தூக்கமின்மை, பயம் பரிபூரணமாக நீங்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தினந்தோறும் உடற்பயிற்சி அவசியம்












Click it and Unblock the Notifications