Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ் புத்தாண்டு பலன்: கும்ப ராசிக்கு ஜென்மசனி விலகியாச்சு.. எதிர்பார்க்காத ஜாக்பாட் பணவரவு நிச்சயம்

Subscribe to Oneindia Tamil

தமிழ் புத்தாண்டு பலன்: தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி வரவுள்ளது. வரும் புத்தாண்டு புதுமைகளைத் தரும் ஆண்டாக அமைய வேண்டும் என்பதுதான் அனைவருடைய ஆசையாகவும் இருக்கும். அந்த வகையில், கும்ப ராசிக்காரர்களுக்கு வரும் தமிழ் புத்தாண்டில் என்ன மாதிரியான நற்பலன்கள் கிடைக்கும் என்று இந்த ஜோதிட கட்டுரையில் துல்லியமாகப் பார்க்கலாம்.

தமிழ்ப் புத்தாண்டை ஏராளமான மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இந்தப் புத்தாண்டு மாற்றங்களைத் தரக் கூடியதாகவும், முன்னேற்றம் மிக்கதாவும் இருக்குமா என்கிற எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருக்கும். வருட கிரகங்கள் என்று சொல்லக்கூடிய குரு சனி ராகு கேதுவின் பெயர்ச்சியை வைத்துதான் இந்த புத்தாண்டு பலன்கள் கணிக்கப்படுகின்றன.

tamil-new-year-lets-take-a-look-at-the-good-benefits-and-yogas-that-kumbam-aquarius-people-will

புராதன காலகட்டத்தில் அப்போது வாழ்ந்த சித்தர்கள் எழுதி வைத்த பாடல்களைப் பொருத்துதான் அந்த வருடத்தின் முழு வெண்பாவும் அமையும் என்பதை பொதுப் பலன்கள் என்று கூறுவோம். அந்த அடிப்படையில் இந்த ஆண்டு விசுவாசுவ வருடம் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி சுவாதி நட்சத்திரத்தில் இந்த வருடம் தொடங்குகிறது.

இந்த வருடத்தில் மழைப் பொழிவு அதிகமாக இருக்கும். அதேபோல, இந்த ஆண்டு கண்டிப்பாக 12 ராசிக்காரர்களுக்கும் மகத்துவம் வாய்ந்த காலகட்டமாக இருக்கும். அந்த வகையில், கும்ப ராசியினருக்கு தமிழ்ப் புத்தாண்டில் கிடைக்கும் நல்ல பலன்கள், கிடைக்கக்கூடிய யோகங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கும்பம்: கும்ப ராசிக்காரர்களைப் பொருத்தவரை இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே ஜென்ம சனி விலகுகிறார். இதனால் மன இறுக்கம், பதட்டம், மனநோய் விலகும். வீட்டுக்குள் வந்தாலே நிம்மதி இல்லை என்ற சூழ்நிலை மாறும். புதிய தன்னம்பிக்கை, தைரியம், தெம்பு உண்டாகும். மே 11 ஆம் தேதி குருப்பெயர்ச்சி நடைபெறவுள்ளதால் குருவின் பூரண அருள் பலன் உங்களுக்கு கிடைக்கும்.

ஜாக்பாட்

ராசியை குரு பார்ப்பதால் குரு சந்திர யோகம் உண்டாகும். எதிர்பார்க்காத ஜாக்பாட், பண வரவு கிடைக்கும். டபுள் புரோமோஷன் கிடைக்கும். பல வருடமாக குழந்தைக்காக வைத்தியம் பார்த்து வருபவர்களுக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். பிள்ளைகளால் பெயர், புகழ் கிடைக்கும், பெரிய உச்சத்தை ஏற்படுத்தும். ராசியில் ராகு வருவதால், 7 ஆவது இடத்தில் கேது வருவதால் புதிய உறவுகள் அறிமுகமாவார்கள்.

காதல் மலரும்

புதிய காதல் கும்ப ராசியினருக்கு மலரும். 8 இல் இருக்கக்கூடிய கேது விலகுவதால் கொடுக்கல் வாங்கலில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். கடனை அடைக்க முடியாமல் சிரமப்பட்டவர்கள் எல்லோராலும் கடனை படிப்படியாக அடைப்பீர்கள். வம்பு வழக்குகளில் சிக்கியிருந்தவர்களுக்கு சாதகமான தீர்ப்பு உண்டாகும். 9 ஆம் இடத்தை குரு நேராக பார்ப்பதால் பெரிய எதிர்பாராத திருப்பம் உண்டாகும்.

பண வரவு கொட்டும்

மன தைரியம் உண்டாகும். பூர்வீக சொத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் தீரும். குடும்பத்துடன் ஒன்று சேரும் அணைப்பு உண்டாகும். 11 ஆம் இடத்தை குரு பார்ப்பதால் பணம் கட்டு கட்டாக வைத்திருப்பீர்கள். எல்லோருக்கு நீங்கள் பணம் கொடுக்கும் சூழல் வரும். 4 இல் இருந்த குரு 5 ஆம் இடத்துக்குப் போவதால் அருமையான காலகட்டமாக இருக்கும். நீங்கள் இருக்கும் இடத்தில் சந்தோஷம் உண்டாகும்.

அதிர்ஷ்டம்

புதிய வீடு, கார், நகை, ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டு. புதிய தொழில்கள் தொடங்கி அதில் வெற்றி பெறுவீர்கள். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் காலகட்டமாக இருக்கும்.

எச்சரிக்கை

உடல்நலனில் அக்கறை செலுத்துவது நல்லது. ராகுவும் சந்திரனும் சேர்வதால் தேவையில்லாத உறவுகளில் சிக்கக்கூடிய வாய்ப்புள்ளது. அதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குடும்ப உறவுகளுக்குள் இருக்கும் பிரச்சனைகளை மூன்றாம் நபர்களிடம் சொல்லாமல் இருப்பது நல்லது. தனிப்பட்ட விஷயம், தாம்பத்தியம் குறித்து பகிர்ந்து கொள்ளக் கூடாது. உடலையும், மனதையும் பாதிக்கக்கூடிய விஷயங்களை செய்யாமல் இருப்பது நல்லது. இல்லையெனில் மிகப்பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

பெண்கள், மாணவர்கள்

2 ஆம் இடத்தில் சனி பகவான் வருவதால் படிக்கும் மாணவர்கள் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. இருப்பினும் ராசியை குரு பார்ப்பதால் கடின உழைப்பை போட்டால் நல்ல மதிப்பெண் பெறும் வாய்ப்பு உண்டாகும். நினைத்தது நடக்கும் காலகட்டமாக இருக்கும். போட்டித் தேர்வுகள் எழுதுபவர்களுக்கு நல்ல துறை கிடைக்கும்.

பெண்களைப் பொருத்தவரை இனி அருமையான காலகட்டமாக இருக்கும். மிகப்பெரிய அடித்தளத்தை 5 ஆம் இட குரு ஏற்படுத்துவார். பெண் பிள்ளைகளுக்கு செல்வ செழிப்பு, பெயர், புகழ் உண்டாகும். தொடங்கும் அனைத்து காரியங்களிலும் வெற்றியைத் தரக்கூடியதாக இருக்கும். உடலில் இருந்து வந்த அனைத்து பிரச்சனைகளும் சரியாகும்.

மதிப்பெண்

கும்ப ராசிக்காரர்களுக்கு 100க்கு 90 சதவீதம் நல்ல அமைப்பாக இருக்கும்.

வழிபட வேண்டிய தெய்வம், பரிகாரம்

சிவபெருமானை வழிபடுவது நல்லது. பெளர்ணமி காலகட்டங்களில் சிவன் ஆலயங்களுக்குச் சென்று ஏதாவதொரு தானமாக அளிப்பது நல்லது. பெளர்ணமியில் 9 முறை கோயிலை வலம் வந்து சிவனை வழிபடுவது நினைத்த காரியங்களை நடத்தும் யோகத்தை தரும். வில்வம், பால் வாங்கிக் கொடுப்பது பெரிய வெற்றியைத் தரும். பாத சனியாக இருப்பதால் தர்ம காரியங்களைச் செய்வது நல்லது. மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் வாங்கிக் கொடுப்பது நன்மை பயக்கும்.

Take a Poll

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+