தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் தனுசு ராசிக்கு கொட்டும் அதிர்ஷ்டம்..1 விஷயத்தில் ரொம்ப கவனம்
தமிழ் புத்தாண்டு பலன்: வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. தமிழ் புத்தாண்டு முன்னிட்டு அனைவரும் தங்களின் வரவிருக்கும் ஆண்டின் பலன்களை அறிந்து கொள்ள ஆவலாக இருப்பீர்கள். அந்த வகையில், இந்த ஆண்டு தனுசு ராசியினர் வாழ்க்கையில் என்ன மாற்றங்கள் நடக்கும்? தொழில், பணம், உடல்நலம், குடும்பம், காதல், திருமணம் போன்ற முக்கிய அம்சங்களில் ஏற்படும் முன்னேற்றம், சவால்கள் குறித்தது இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி காலை 8.42 மணிக்கு சதயம் நட்சத்திரத்தில் தமிழ் புத்தாண்டு (சித்திரை 1) பிறக்கிறது. தனுசில் சூரியன் வரக்கூடிய நாளே சித்திரை 1 ஆம் நாள். விசுவாவசு ஆண்டு நிறைவடைந்து பராபவ ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். இந்த ஆண்டில் 12 ராசிகளுக்கும் கிரக நிலைகளின் அடிப்படையில் பலன்கள் கிடைக்கும். அந்த வகையில், இந்த ஆண்டு தனுசு ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

தனுசு ராசி பலன் (Dhanusu Rasi Palan)
தனுசு ராசியினருக்கு அர்த்தாஷ்டமசனி நடந்து கொண்டிருக்கிறது. கால் வலி, கை வலி, கழுத்து வலி, முதுகு வலி போன்றவை வரும் என்பதால் தினந்தோறும் உடற்பயிற்சி செய்வது நல்லது. உறவுகள் தொடர்பான விஷயங்களில் ஏற்றம் ஏற்படும். நண்பர்கள், உறவினர்களை சந்திப்பீர்கள். புதிய தொழில் தொடங்கும் யோகம் உண்டாகும். துணை உங்களைத் தாங்கும் அமைப்பு உள்ளது.
புதிய தொழில்
தாய் வழி உறவு, தந்தை வழி உறவு மேன்மை அடையும். புதிய தொழில் தொடங்கும் அமைப்பு உள்ளது. திடீர் அதிர்ஷ்டம் வரும். பிள்ளைகளுக்கு வேற்று மொழி மனிதர்களால் ஆதாயம் ஏற்படும். பிள்ளைகளுக்கு அனுகூலம் ஏற்படும். புதிய வரவுகள் குடும்பத்தில் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகுகம். நல்ல வேலை ஆட்கள், முதலாளிகள் கிடைப்பார்கள். உங்களை முழுதும் நம்பும் மனிதர்கள் கிடைப்பார்கள்.
குரு பார்வை
ஆசிர்வாதம் கிடைக்கும். 2 ஆம் இடத்தையும், 12 ஆம் இடத்தையும் குரு பார்க்கிறார். பணம் அபரிமிதமாக கிடைக்கும். செலவுகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். சந்தோஷ செலவுகளைச் செய்து மகிழ்வீர்கள். வாழ்க்கையை அனுபவித்து மகிழ்ச்சியாக வாழும் அமைப்பு உள்ளது. ஆத்ம திருப்தி அடைவீர்கள். திருக்கொள்ளிக்காடு சென்று வருவது ஏற்றத்தைக் கொடுக்கும்.
பயணங்கள்
வருமானம் திருப்தியாக இருக்கும். பழைய கடன்களுக்கான வட்டிகளை செலுத்துவீர்கள். பெரிய கடன் அமைப்புகள் ஏற்படாது. தொழிலில் புதிய மாற்றங்களைச் செய்வீர்கள். வருமானம் தரக்கூடிய பயணங்களை மேற்கொள்வீர்கள். மன அழுத்தம் ஏற்படும். தேவையில்லாத பிரச்சனைகளில் சிக்கிக் கொள்வதை தவிர்ப்பது நல்லது.
சேமிப்பில் கவனம்
கடினமான வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. தேவைகளைப் பூர்த்தி செய்யும் காலகட்டம். கடமைகளை முழு ஈடுபாட்டோடு செய்து முடிப்பீர்கள். சேமிப்பில் கவனம் அதிகரிக்கும். பழைய முதலீடுகள் மூலமாக வருமானம் வரும். பேச்சில் நிதானமும், பொறுமையும் ஏற்படும். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டு.
பதவிகள் தேடி வரும்
எண்ணங்கள் செயல்வடிவம் பெறும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். மனதில் குதூகலம் ஏற்படும். முதலீடுகளில் லாபம் உண்டாகும். பேச்சுக்கு நல்ல மதிப்பு கிடைக்கும். புதிய பதவிகள் தேடி வரும். குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும்.












Click it and Unblock the Notifications