தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு பொற்காலம் ஆரம்பம்.. புத்தாண்டில் கிடைக்கும் பலன்கள்?
தமிழ் புத்தாண்டு பலன் 2026: தமிழ் புத்தாண்டு பலன்: வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. தமிழ் புத்தாண்டு முன்னிட்டு அனைவரும் தங்களின் வரவிருக்கும் ஆண்டின் பலன்களை அறிந்து கொள்ள ஆவலாக இருப்பீர்கள். அந்த வகையில், இந்த ஆண்டு கன்னி ராசியினர் வாழ்க்கையில் என்ன மாற்றங்கள் நடக்கும்? தொழில், பணம், உடல்நலம், குடும்பம், காதல், திருமணம் போன்ற முக்கிய அம்சங்களில் ஏற்படும் முன்னேற்றம், சவால்கள் குறித்தது இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி காலை 8.42 மணிக்கு சதயம் நட்சத்திரத்தில் தமிழ் புத்தாண்டு (சித்திரை 1) பிறக்கிறது. கன்னியில் சூரியன் வரக்கூடிய நாளே சித்திரை 1 ஆம் நாள். விசுவாவசு ஆண்டு நிறைவடைந்து பராபவ ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். இந்த ஆண்டில் 12 ராசிகளுக்கும் கிரக நிலைகளின் அடிப்படையில் பலன்கள் கிடைக்கும். அந்த வகையில், இந்த ஆண்டு கன்னி ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

கன்னி ராசி பலன் (Kanni Rasi Palan)
கன்னி ராசியினருக்கு ஏழாம் இடத்தில் கண்டகச் சனி நடந்து கொண்டிருக்கிறது. அதனால், தினந்தோறும் தவறாமல் உடற்பயிற்சியை செய்வது நன்மை பயக்கும். கணவன், மனைவி உடல்நிலையில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பிள்ளைகள் தொடர்பான எல்லா விஷயங்களிலும் அனுகூலம் காணப்படும். பிள்ளைகளில் தொழில், வியாபாரம், உத்தியோகம், படிப்பில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும்.
கடன் தீரும்
பழைய கடன்களை அடைத்து முடிக்கும் யோகம் உண்டு. கடனை அடைக்கும் முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். இதுவரை இருந்து வந்த தடைகள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும். கோளார் பதிகத்தை தினமும் கேட்பதும், படிப்பதும் அஷ்டலட்சுமி யோகத்தை தரும். நிறைய பணவரவு ஏற்படும். தேவையில்லாத பொருள்கள் வாங்குவது, வண்டிகள் வாங்குவீர்கள். அதனைத் தவிர்ப்பது நல்லது.
திடீர் அதிர்ஷ்டம்
அற்புதமான அமைப்பு உள்ளது. திடீர் அதிர்ஷ்டம், யோகம் உண்டாகும். எல்லா விஷயத்திலும் அனுகூலம் காணப்படும். எதிர்பார்க்காத விஷயங்கள் நடக்கும் காலகட்டம். இழுபறியாக இருந்து வந்த சிக்கல்கள் எல்லாம் தீரும். முதலீடுகள் தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை. புதிய கூட்டாளிகளால் பெரும் பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளதால் கவனம் தேவை.
பணவரவு
உங்களுடைய துணை, பெற்றோர், பெரியோர், சகோதர, சகோதரிகலிடம் ஆலோசித்துவிட்டு பெரிய காரியங்களைச் செய்வது நல்லது. இந்த ஆண்டில் திருமணம் நடக்கும் யோகம் உள்ளது. பிரிந்த கணவன், மனைவி மீண்டும் சேரும் யோகம் உண்டாகும். பண வரவு அபரிமிதமானதாக இருக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
தொழில்
புதிய பொறுப்புகள் கிடைக்கும். வாழ்க்கையில் அடுத்தகட்டத்துக்கு செல்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். தொழிலில் நல்ல வருமானம் கிடைக்கும். இழுபறியாக இருந்த நிலைமைகள் மாறும். குழந்தைகளுக்காக காத்திருந்தவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். திட்டமிட்டு செய்யும் காரியங்களில் ஏற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான காலகட்டமாக இருக்கும். கன்னி ராசியினருக்கு பெருமாள், அலமேலு தாயார் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.
-
Rasi Palan This Week: மிதுன ராசிக்கு பேச்சுதான் பிரச்சனையே.. இந்த விஷயங்களில் ரொம்ப கவனம் -
Rasi Palan This Week: ரிஷப ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி.. கவனம் அவசியம் -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு இந்த வாரத்தில் வரும் அதிர்ஷ்டம்.. பணவரவு கொட்டும் -
துலாம் ஜூன் மாத ராசிபலன் 2026: காதல், திருமணம், பணவரவில் அதிர்ஷ்டம் காத்திருக்கிறது! -
Meenam: மீன ராசியினரே கவனம்!.. ஜூன் மாதத்தில் வரப்போகும் சோதனைகள் என்ன? -
Kumbam: கும்ப ராசிக்கு ஜூனில் வரும் திருப்புமுனை.. குருவின் அருளால் அற்புத யோகம் -
Magaram: மகர ராசிக்கு 30 நாட்களில் நடக்கும் அதிசயம்.. தொழிலில் வரப்போகும் சூப்பர் மாற்றம் -
தனுசு ராசிக்கு பணமழை கொட்டப் போகுது.. உச்ச குருவால் வரப்போகும் 5 அதிர்ஷ்டங்கள் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications