தமிழ் புத்தாண்டு பலன்: சிக்ஸர் அடிக்கப் போகும் விருச்சிகம் ராசி.. தொட்டதெல்லாம் தங்கமாகும் யோகம்
தமிழ் புத்தாண்டு பலன்: வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. தமிழ் புத்தாண்டு முன்னிட்டு அனைவரும் தங்களின் வரவிருக்கும் ஆண்டின் பலன்களை அறிந்து கொள்ள ஆவலாக இருப்பீர்கள். அந்த வகையில், இந்த ஆண்டு விருச்சிகம் ராசியினர் வாழ்க்கையில் என்ன மாற்றங்கள் நடக்கும்? தொழில், பணம், உடல்நலம், குடும்பம், காதல், திருமணம் போன்ற முக்கிய அம்சங்களில் ஏற்படும் முன்னேற்றம், சவால்கள் குறித்தது இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி காலை 8.42 மணிக்கு சதயம் நட்சத்திரத்தில் தமிழ் புத்தாண்டு (சித்திரை 1) பிறக்கிறது. விருச்சிகத்தில் சூரியன் வரக்கூடிய நாளே சித்திரை 1 ஆம் நாள். விசுவாவசு ஆண்டு நிறைவடைந்து பராபவ ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். இந்த ஆண்டில் 12 ராசிகளுக்கும் கிரக நிலைகளின் அடிப்படையில் பலன்கள் கிடைக்கும். அந்த வகையில், இந்த ஆண்டு விருச்சிகம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

விருச்சிகம் ராசி பலன் (Viruchigam Rasi Palan)
விருச்சிகம் ராசியினருக்கு பிள்ளைகளின் விஷயத்தில் இருந்து வந்த பாதிப்புகள் நீங்கும். எல்லா விஷயங்களிலும் ஏற்றம் ஏற்படும். பிள்ளைகளுக்கும், உங்களுக்கும் இடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் புதிய வரவுகள் வரும். சுபகாரியங்கள் அடுத்தடுத்து நிறைய நடக்கும் நல்ல காலகட்டம். அப்பா, அம்மாவின் ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்ள வேண்டும்.
அனுகூலம்
பெற்றோர் வண்டி, வாகனத்தில் செல்லும்போது மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். அப்பா, அம்மா தொலைதூரத்தில் இருப்பவர்கள் அவர்களுக்கு அழைத்து வீடியோ காலில் பேசுவது நன்மை பயக்கும். பூர்வீக கோயில்களுக்குச் சென்று வருவது நன்மை பயக்கும். குலதெய்வ கோயிலுக்கு சென்று வருவது, கிராம தேவதை கோயில்களுக்குச் சென்று வருவது ஏற்றத்தைத் தரும்.
சொத்துகள்
பூர்வீகத்தில் சொத்து கிடைத்தால் வாங்கிக் கொள்வது நல்லது. உடனிருப்பவர்கள் சதி செய்வார்கள் என்பதால் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். நிறைய நன்மைகள் உண்டாகும் காலகட்டம். அஷ்டலட்சுமி கடாட்சம் ஏற்படும். ஆடை, ஆபரணங்களை வாங்குவீர்கள். முதலீடுகளை செய்து மகிழ்வீர்கள். தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும்.
செல்வாக்கு கூடும்
நண்பர்கள், கூட்டாளிகள் மத்தியில் உங்களுடைய செல்வாக்கு கூடும். இதுவரை இருந்து வந்த ஒருவிதமான மன பயம் நீங்கும். பங்குச் சந்தையில் திடீர் அதிர்ஷ்டங்கள் ஏற்படும். சொத்து மதிப்பு உயரும். நிறைய பயணங்களை மேற்கொள்வீர்கள். வழக்குகளில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்யும் யோகம் உண்டாகும்.
முயற்சியில் வெற்றி
புதிய முயற்சிகள் கைகூடும். கண் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் பரிபூரணமாக நீங்கும். எல்லா சூழ்நிலையிலும் நல்ல முடிவுகளை எடுப்பீர்கள். சரியான நேரத்தில் கடன்களை அடைத்து முடிப்பீர்கள். சவால்கள், போட்டிகளை சாதுரியமாக சமாளிக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். தெய்வக் கோயில்களுக்கு திருப்பணிகள் மேற்கொள்வீர்கள்.
வழிபாடு
மன சஞ்சலங்கள் இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. ஆரோக்கியத்தில் சளி தொந்தரவு, தொற்றுநோய்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். விருச்சிக ராசியினர் வைத்தீஸ்வரன் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்வது ஏற்றத்தைத் தரும்.












Click it and Unblock the Notifications