தமிழ் புத்தாண்டு பலன்: கடக ராசியா.. கரன்ஸி ராசியா.. கொட்டும் லாபம்!

Subscribe to Oneindia Tamil

தமிழ் புத்தாண்டு பலன் 2025: விசுவாவசு வருடம் ஏப்ரல் 14 ஆம் தேதி சுவாதி நட்சத்திரத்தில் சித்திரை மாதம், தமிழ் புத்தாண்டு பிறக்கப் போகிறது. இந்த புத்தாண்டு கடகம் ராசிக்காரர்களுக்கு ஏற்றம் தரும் புத்தாண்டாக இருக்குமா, எந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும், வழிபாடு முறைகள் என்ன என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.

2025 ஆம் ஆண்டில் தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி நடைபெறவுள்ளது. சித்திரைப் பிறக்கவுள்ளது. தமிழ் வருடத்தில் சித்திரைப் பிறப்பு என்பது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இடைக்காடர் எனும் சித்தரால் உருவாக்கப்பட்டது. தமிழ் வருடங்களின் 60 ஆண்டுகளில் 38 ஆவது ஆண்டாக வரக்கூடிய விசுவாவசு வருடம் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி சுவாதி நட்சத்திரத்தில் இந்த வருடம் தொடங்குகிறது.

tamil-puthandu-palan-for-kadagam-what-kind-of-benefit-will-get-kadagam-cancer-rasi-people-during

இந்த ஆண்டு கண்டிப்பாக 12 ராசிக்காரர்களுக்கும் மகத்துவம் வாய்ந்த காலகட்டமாக இருக்கும். அந்த வகையில், கடகம் ராசியினருக்கு தமிழ்ப் புத்தாண்டில்
கிடைக்கும் நல்ல பலன்கள், கிடைக்கக்கூடிய யோகங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கடகம் - வீண், பதற்றம் மன அழுத்தம் குறையும். நீண்ட காலமாக உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்னை நீங்கும். பண வரவு திருப்தியாக இருக்கும். பழைய கடன்கள் தீரும். உத்யோகம் மற்றும் தொழிலில் நல்ல ஏற்றம் உண்டு. தொழிலில் லாபம் சிறப்பாக இருக்கும். பெரிய மனிதர்களுடன் சந்திப்பு ஏற்படும். அஷ்டம சனி விலகுவதால் அடுத்தடுத்து அதிர்ஷ்டங்கள் கூடி வரும்.

வாகனம்

வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை கண் கூடாக பார்க்கலாம். புதிய வண்டி, வாகனங்களை வாங்குவீர்கள். வாகனங்களால் அணுகூலம் உண்டு. சுப காரியங்களில் இருந்த தடைகள் நீங்கும். பிள்ளைகள் விஷயத்தில் நீண்ட காலமாக இருந்த வருத்தங்கள் தீரும். பழைய பாக்கி வசூலாகும். முதியவர்களால் ஆதாயம் உண்டு. எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் தேடி வரும்.

உயர்வு

புதிய ஒப்பந்தங்கள் வரும். குழப்பங்கள் தீரும். வாழ்க்கையில் பெரிய சாதனைகளை செய்து அடுத்தடுத்து ஏற்றங்களை காண்பீர்கள். பயணங்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும். வாழ்வில் நீண்ட காலமாக திட்டமிட்ட விஷயங்களை ஒவ்வொன்றாக நிறைவேற்றுவீர்கள். உத்யோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வால் புதிய பொறுப்புகள் கூடும். கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

கல்வி

பாக்கிய ஸ்தானத்தில் சனி, ராகு, கேது ஆகிய கிரகங்கள் இணைந்திருப்பதால் சிறப்பான பலன்கள் கிடைக்கும். தொழிலில் புதிய முயற்சிகளை செய்வீர்கள். முதலீட்டில் நல்ல லாபம் கிடைக்கும். விரய ஸ்தானத்துக்கு குரு பகவான் பெயர்ச்சி ஆகிறார். இதனால் குழந்தைகள் கல்வி, வேலை வாய்ப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல மாற்றம் இருக்கும்.

வெளிநாடு

வெளிநாடு முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வீட்டில் உள்ள பிரச்னைகள் குறைந்து மகிழ்ச்சி பொங்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடைபெறும். நிலம், வீடு உள்ளிட்ட சொத்து வாங்குவதற்கான வாய்ப்பு உள்ளது. லாட்டரி, பங்குச்சந்தை மூலம் ஜாக்பாட் கிடைக்கும். தங்கம், ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட துறைகளில் இருப்போர் புதிய உச்சம் தொடுவீர்கள்.

கவனம்

வார்த்தைகளில் மட்டும் கவனமாக இருக்க வேண்டும். வயிறு, ஜீரணம், நரம்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சொத்து, முதலீடு ஆகியவற்றில் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். திருவண்ணாமலை அருணாச்சலேஷ்வரர் கோயில் சென்று வழிபடுவது நல்ல பலன்களை கொடுக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+