தமிழ் புத்தாண்டு பலன்: மாற்றம்.. முன்னேற்றம்.. மீன ராசிக்கு போனஸ்
தமிழ் புத்தாண்டு பலன் 2025: விசுவாவசு வருடம் ஏப்ரல் 14 ஆம் தேதி சுவாதி நட்சத்திரத்தில் சித்திரை மாதம், தமிழ் புத்தாண்டு பிறக்கப் போகிறது. இந்த புத்தாண்டு மீன ராசிக்காரர்களுக்கு ஏற்றம் தரும் புத்தாண்டாக இருக்குமா, எந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும், வழிபாடு முறைகள் என்ன என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்காலம்.
2025 ஆம் ஆண்டில் தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி நடைபெறவுள்ளது. சித்திரைப் பிறக்கவுள்ளது. தமிழ் வருடத்தில் சித்திரைப் பிறப்பு என்பது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இடைக்காடர் எனும் சித்தரால் உருவாக்கப்பட்டது. தமிழ் வருடங்களின் 60 ஆண்டுகளில் 38 ஆவது ஆண்டாக வரக்கூடிய விசுவாவசு வருடம் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி சுவாதி நட்சத்திரத்தில் இந்த வருடம் தொடங்குகிறது.

இந்த ஆண்டு கண்டிப்பாக 12 ராசிக்காரர்களுக்கும் மகத்துவம் வாய்ந்த காலகட்டமாக இருக்கும். அந்த வகையில், மீன ராசியினருக்கு தமிழ்ப் புத்தாண்டில் கிடைக்கும் நல்ல பலன்கள், கிடைக்கக்கூடிய யோகங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மீனம் - தொழில் சிறப்பாக இருக்கும். தொழிலில் நல்ல மாற்றம், லாபம் கிடைக்கும். புதிய தொழில் முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் ஏற்படும். பழைய கடன் வசூலாகும். நிலம், வீடு, வண்டி, ஆடை, ஆபரணம் உள்ளிட்ட சொத்துகள் சேரும். முதலீட்டில் லாபம் கிடைக்கும்.
சுப விரயம்
சுப விரயங்கள் ஏற்படும். பெற்றோர் வழி உறவுகளால் மகிழ்ச்சி ஏற்படும். வாழ்க்கை துணையுடன் மனக்கசப்புகள் நீங்கி அன்யோன்யம் அதிகமாகும். மனதில் இருந்த சங்கடங்கள் நீங்கும். கடன் சுமை குறையும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் இருக்கும். எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டு. சனி, ராகு, சுக்கிரன், புதன் சேர்க்கையால் வீடு, உத்யோகம், கல்வி ஆகியவற்றில் இடமாற்றம் நிச்சயம் உருவாகும்.
முன்னேற்றம்
அந்த மாற்றங்கள் நன்மைகளையே கொடுக்கும். குரு நான்காம் இடத்துக்கு பெயர்ச்சி ஆகும்போது மனம் தெளிவடையும். கல்வியில் முன்னேற்றம் உண்டு. உங்கள் வாழ்க்கைக்கு தேவையான உயர்கல்விகளை கற்பீர்கள். மருத்துவம், ரசாயனம் உள்ளிட்ட துறைகளை சார்ந்தவர்களுக்கு இந்தாண்டு சிறப்பாக இருக்கும். பெரிய பிரச்னைகள் வந்தாலும் அதன் பாதிப்புகள் சற்று குறைவாகத்தான் இருக்கும்.
ஆரோக்கியம்
ரத்த பந்த உறவுகளுடன் வாக்கு வாதம் வேண்டாம். கால், பாதம், ரத்தநாளம், சர்க்கரை, வயிறு சம்பந்தப்பட்ட விஷயங்களில் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். நீண்ட காலமாக உள்ள நோய்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை மேற்கொள்வது அவசியம். ஜென்ம சனி இருப்பதால் உடற்பயிற்சி செய்வது மிக மிக அவசியம். வாகனத்தில் கவனம் தேவை. பயணங்களில் அதிக எச்சரிக்கை தேவை.
கவனம்
தாயாரின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கூடா நட்பை தவிர்ப்பது மிகவும் நல்லது. வீண் வாக்குவாதம் தவிர்க்க வேண்டும். பணிச்சுமை, அலைச்சல் அதிகரிக்கும். அடுத்த இரண்டு மாதங்கள் எல்லாவற்றிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தேனி மாவட்டத்தில் உள்ள குச்சனூர் சனீஸ்வரன் கோயில் சென்று வழிபடுவது வெற்றிகளை கொடுக்கும். குடை மற்றும் செருப்பு தானம் செய்வதால் கெடு பலன்கள் விலகி நன்மைகள் நடைபெறும்.
-
ஆனி மாத பலன்: துலாம் ராசிக்கு பத்ர ராஜயோகத்தால் வரும் அதிர்ஷ்டம்.. என்னென்ன பலன்கள்? -
மகரம், கும்பம், மீன ராசிக்கு அதிர்ஷ்ட வாரம்... பணம், பதவி, முன்னேற்றம் காத்திருக்கிறது! -
இந்த வாரம் அதிர்ஷ்டம் யாருக்கு?.. கடகம், சிம்மம், கன்னி ராசிக்கான முழு பலன்கள் -
ஆனி மாத பலன் 2026: கும்ப ராசிக்கு ராஜயோகம், தொழில் வளர்ச்சி மற்றும் பணவரவு அதிகரிப்பு! -
ஆட்டத்தை ஆரம்பிக்கும் மகர ராசி.. பிரச்சனைகளுக்கு எல்லாம் எண்டு கார்டு.. தொட்டது துலங்கும் யோகம் -
ஆனி மாதத்தில் அதிர்ஷ்டத்தை அள்ளும் தனுசு ராசி.. குரு சுக்கிரனால் வரப்போகும் அற்புத மாற்றம் -
ஆனி மாத பலன்: விருச்சிகம் ராசிக்கு 15 வருடங்களுக்கு பிறகும் நல்ல காலம்.. தேடி வரும் யோகங்கள் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு












Click it and Unblock the Notifications