தமிழ் புத்தாண்டு பலன்: சிக்ஸர் அடிக்கும் சிம்ம ராசி.. செம யோகம்
தமிழ் புத்தாண்டு பலன் 2025: விசுவாவசு வருடம் ஏப்ரல் 14 ஆம் தேதி சுவாதி நட்சத்திரத்தில் சித்திரை மாதம், தமிழ் புத்தாண்டு பிறக்கப் போகிறது. இந்த புத்தாண்டு சிம்மம் ராசிக்காரர்களுக்கு ஏற்றம் தரும் புத்தாண்டாக இருக்குமா, எந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும், வழிபாடு முறைகள் என்ன என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்காலம்.
2025 ஆம் ஆண்டில் தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி நடைபெறவுள்ளது. சித்திரைப் பிறக்கவுள்ளது. தமிழ் வருடத்தில் சித்திரைப் பிறப்பு என்பது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இடைக்காடர் எனும் சித்தரால் உருவாக்கப்பட்டது. தமிழ் வருடங்களின் 60 ஆண்டுகளில் 38 ஆவது ஆண்டாக வரக்கூடிய விசுவாவசு வருடம் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி சுவாதி நட்சத்திரத்தில் இந்த வருடம் தொடங்குகிறது.

இந்த ஆண்டு கண்டிப்பாக 12 ராசிக்காரர்களுக்கும் மகத்துவம் வாய்ந்த காலகட்டமாக இருக்கும். அந்த வகையில், சிம்மம் ராசியினருக்கு தமிழ்ப் புத்தாண்டில்
கிடைக்கும் நல்ல பலன்கள், கிடைக்கக்கூடிய யோகங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
சிம்மம் - அஷ்டம சனியை நினைத்து குழப்பம் வேண்டாம். இந்த தமிழ் புத்தாண்டு ஓரளவுக்கு நல்ல பலன்களை தான் கொடுக்கும். சுப காரிய தடைகள் நீங்கும். நீண்ட காலமாக திருமணம் ஆகாதவர்களுக்கு இந்தாண்டு திருமணம் நடைபெறும். அடுத்தடுத்து நல்ல பலன்கள் கிடைக்கும். எடுத்த காரியங்களில் வெற்றியை வாரி குவிப்பீர்கள். தொலைதூரத்தில் இருந்து நல்ல தகவல்கள் கிடைக்கும்.
சொத்து
பயணங்களால் ஆதாயம் உண்டு. வெளியூர், வெளிநாடு சம்பந்தப்பட்ட பல்வேறு பயணங்களை மேற்கொள்வீர்கள். குரு 11 ஆம் இடத்துக்கு பெயர்ச்சி ஆவதால் நிலம், வீடு, வண்டி, வாகனம் உள்ளிட்ட சொத்துகள் சேரும். முதலீடுகளில் சிறப்பான லாபம் கிடைக்கும். உத்யோகம் மற்றும் தொழிலில் இருந்த தடைகள் நீங்கும். பொருளாதாரத்தில் நல்ல ஏற்றம் கிடைக்கும்.
மதிப்பு, மரியாதை
கல்வியில் நல்ல முன்னேற்றம் காணப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உங்களின் பெற்றோர், பெரியவர்கள் மூலம் நல்ல ஆதாயம் கிடைக்கும். அவர்களின் ஆரோக்கியத்தில் நல்ல மாற்றம் இருக்கும். மதிப்பு, மரியாதை, கெளரவம் அதிகரிக்கும். மே மாதத்துக்கு பிறகு சிறப்பான பலன்கள் கிடைக்கும். வயதில் இளையவர்களால் நல்ல பலன் உண்டு.
மாற்றம்
குரு பகவான் மூன்றாம் இடத்தை பார்ப்பதால் வாழ்க்கையில் நல்ல மாற்றம் இருக்கும். சகோதர உறவுகளால் ஆதாயம் உண்டு. மனதில் தெளிவு பிறக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிரிந்த குடும்ப உறவுகள் ஒன்றிணைவார்கள். நீண்ட காலமாக திட்டமிட்ட பயணங்களை மேற்கொண்டு மகிழ்வீர்கள்.
ஆரோக்கியம்
கேது பகவான் சிம்மத்துக்கு பெயர்ச்சி ஆவதால் உங்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். கேது, செவ்வாய் இணைவதால் நெருப்பு, விபத்து போன்ற அபாயங்கள் உண்டு. அதில் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். எதிலும் நிதானமாக செயல்பட்டால் உங்களின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. உங்களின் தியாகத்தால் நல்ல பலன்கள் உண்டு.
சனி
அஷ்டமத்தில் சனி இருப்பதால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நரம்பு, தலை, கழுத்து ஆகியவற்றில் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்வது தேவை. உத்யோகம், வாழ்க்கை துணை ஆகியோரிடம் பிடிவாதம், வாக்குவாதம் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். நாமக்கல் நரசிம்மர், நாமக்கல் ஆஞ்சிநேயர் ஆகியோரை வழிபடுவதால் எல்லாவற்றிலும் நல்ல பலன்கள் கிடைக்கும்.
-
ஆனி மாத பலன்: துலாம் ராசிக்கு பத்ர ராஜயோகத்தால் வரும் அதிர்ஷ்டம்.. என்னென்ன பலன்கள்? -
மகரம், கும்பம், மீன ராசிக்கு அதிர்ஷ்ட வாரம்... பணம், பதவி, முன்னேற்றம் காத்திருக்கிறது! -
இந்த வாரம் அதிர்ஷ்டம் யாருக்கு?.. கடகம், சிம்மம், கன்னி ராசிக்கான முழு பலன்கள் -
ஆனி மாத பலன் 2026: கும்ப ராசிக்கு ராஜயோகம், தொழில் வளர்ச்சி மற்றும் பணவரவு அதிகரிப்பு! -
ஆட்டத்தை ஆரம்பிக்கும் மகர ராசி.. பிரச்சனைகளுக்கு எல்லாம் எண்டு கார்டு.. தொட்டது துலங்கும் யோகம் -
ஆனி மாதத்தில் அதிர்ஷ்டத்தை அள்ளும் தனுசு ராசி.. குரு சுக்கிரனால் வரப்போகும் அற்புத மாற்றம் -
ஆனி மாத பலன்: விருச்சிகம் ராசிக்கு 15 வருடங்களுக்கு பிறகும் நல்ல காலம்.. தேடி வரும் யோகங்கள் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு












Click it and Unblock the Notifications