Tamil Puthandu Palan: மேஷ ராசிக்கு லாபம் கொட்டும்.. அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும் உச்ச குரு
தமிழ் புத்தாண்டான பராபவ ஆண்டு பிறந்துள்ளது. கிருஷ்ணபட்சத்தில் துவாதசி திதியில், சதயம் நட்சத்திரத்தில் இந்தப் புத்தாண்டு பிறந்துள்ளது. இந்த தமிழ்ப் புத்தாண்டு மேஷ ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும், கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
பரிவர்த்தன யோகத்தோடு உருவாகியுள்ள இந்த தமிழ் புத்தாண்டில் பல்வேறு யோகங்கள் கண்டிப்பாக கிடைக்கும். வரும் குருப்பெயர்ச்சியின் மூலமாக குரு பகவான் உச்சமடைவதால் நடுத்தர குடும்பத்தினருக்கு பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படும். பொருளாதார முன்னேற்றங்கள் நல்லவிதமாக இருக்கும். ஆக்கப்பூர்வமான நன்மைகள் கிடைக்கும் அற்புதமான ஆண்டாக இருக்கும்.

குரு பகவான் வீட்டில் புதன் பகவானும், புதன் பகவான் வீட்டில் குரு பகவானும் இருப்பதால் சரளமான வகையில் சிறப்பு, உத்தியோகத்தில் நல்ல பொறுப்பு கிடைக்கும். ஏழ்மை விலகி செல்வாக்கு அடையும் சிறந்த ஆண்டாகும். மழைப்பொழிவு நன்றாக இருக்கும். விளைச்சல் அதிகமாக இருக்கும். பசுக்கள் நிறைய பாலை கொடுக்கும். உரத் தொழிற்சாலைகள் நம் நாட்டிலேயே அதிகளவில் உற்பத்தி செய்யப்படும்.
விவசாயிகளுக்கு நிறைய சலுகைகள் கிடைக்கும். காப்பீடில் நிறைய மாற்றம் ஏற்படும். மகசூல் நன்றாக இருக்கும். அந்த வகையில், இந்த தமிழ்ப் புத்தாண்டில் மேஷ ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
மேஷ ராசி பலன்கள் (Mesham Rasi Palangal)
மேஷம் ராசியினருக்கு இந்த தமிழ்ப் புத்தாண்டு சந்தோஷமான விஷயங்களைக் கொடுக்கும். இதுவரை ஏழரை சனி ஆரம்பித்ததில் இருந்து நிறைய கஷ்டங்களை அனுபவித்து வந்திருப்பார்கள். அந்த கஷ்டத்தை விட்டு வெளியில் வரும் ஆண்டாக இந்த ஆண்டு அமையும். ராகு 11 ஆம் இடத்தில் இருப்பதாலும், குரு உச்சமடைவதாலும் மேஷ ராசியினருக்கு நல்ல மாற்றங்கள் கிடைக்கும்.
முன்னேற்றம்
தொழிலில் நஷ்டமடைந்து வந்தவர்களுக்கு ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மாதத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பங்குச் சந்தையில் டிரேடிங் செய்வர்களுக்கு மேற்கண்ட 3 மாதங்கள் அட்டகாசமாக இருக்கும். செலவுகள் அதிகமாக இருக்கக்கூடிய ஆண்டாக இருக்கும். இருப்பினும் அதற்கேற்ப வருமானங்கள் பெரிய அளவில் வந்து கொண்டே இருக்கும்.
குருப்பெயர்ச்சி
ஜூன் மாதம் நடக்கக்கூடிய குருப்பெயர்ச்சியின் மூலமாக 12 ஆம் இடத்தை உச்ச குரு பார்ப்பது வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும் பாக்கியங்கள் ஏற்படும். இளைய வயதினருக்கு திருமணம் கைகூடும். பெரியவர்களுக்கு ஆரோக்கிய குறைபாடுகள் நீங்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ராசியதிபதி மங்களகாரகனாக இருப்பதால் சுபகாரியங்களை தலைமை ஏற்று நடத்தக்கூடிய அமைப்பு உள்ளது.
புகழ் கிடைக்கும்
பாசம், நேசம் சம்பந்தப்பட்ட விஷயங்களை வெளிப்படுத்தக்கூடிய நல்ல ஆண்டாக இருக்கும். வரவு, செலவு சம்பந்தப்பட்ட விஷயத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். உங்களைத் தேடி புகழ், செல்வாக்கு வரும். குடும்பத்தில் பெரிய கெளரவம் ஏற்படும். கெட்ட பெயர் வாங்கிக் கொண்டிருந்தவர்கள் நல்ல பெயர் வாங்கக்கூடிய அமைப்பு உண்டாகும்.
லாபம் கொட்டும்
மேஷ ராசியினருக்கு லாப ஸ்தானத்தில் தமிழ்ப் புத்தாண்டு பிறந்துள்ளதால், பண வரவு, செல்வாக்கு அதிகரிக்கும். அக்டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரி போன்ற மாதங்கள் உங்களுக்கு அதிர்ஷ்டம் தரும் ஆண்டாக இருக்கும். இந்த காலகட்டத்தில் வீடு, மனை வாங்குவது, சொத்துகள் வாங்குவது, திருமணம் கைகூடும் யோகம் உண்டாகும்.
வழிபாடு
மேஷ ராசியினர் இந்த தமிழ் புத்தாண்டு முழுவதும் வெற்றியைக் குவிக்க திருப்பரங்குன்றத்தில் அருள்பாலிக்கும் முருகப் பெருமானை சஷ்டி திதி அல்லது வியாழக்கிழமை சென்று வழிபாடு செய்வது முன்னேற்றத்தையும், வளர்ச்சியையும் கொடுக்கும்.












Click it and Unblock the Notifications