Tamil Puthandu Rasi Palan: மேஷம் ராசிக்கு புத்தாண்டில் அடிக்கும் ஜாக்பாட்.. வீடு, கார் கலக்கப் போறீங்க
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி புத்தாண்டு பிறக்கவுள்ளது. பிறக்கும் இந்த பராபவ ஆண்டில் மேஷ ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
மேஷம்
மேஷம் ராசியினருக்கு இந்த பராபவ ஆண்டில் ராசியில் சூரிய பகவானும், சுக்கிர பகவானும் அமர்ந்துள்ளனர். குலதெய்வ வழிபாட்டைச் செய்யும் மேஷ ராசியினருக்கு மிகப்பெரிய முன்னேற்றங்கள் ஏற்படும். மேஷ ராசி பெண்கள் எந்த துறையில் இருந்தாலும் அதில் தலைமைப் பொறுப்புக்கு வரும் யோகம் உண்டு. திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு கண்டிப்பாக திருமணம் நடக்கும்.

வீடு வாகன யோகம்
3 வது ஸ்தானத்தில் குரு பகவான் இருப்பதால் இளைய சகோதரனுடன் கருத்து மாறுபாடு வருவதற்கான வாய்ப்புள்ளது. வெளியூர், வெளிமாநிலத்தில் வசிப்பவர்கள், வேலை பார்ப்பவர்களுக்கு வெற்றிகள் ஏற்படும். 4 ஆம் இடத்துக்கு குரு பகவான் வரப்போகிறார். புதிய வீடு, வாகனம் வாங்கும் இந்த ஆண்டில் ஏற்படும். குழந்தை பாக்கியம் ஏற்படும். கல்வியில் அற்புதமான வளர்ச்சி ஏற்டும். ஏழரை சனியை கண்டு அச்சப்படத் தேவையில்லை. சமயபுரம் மாரியம்மனை வழிபாடு செய்வது ஏற்றத்தைத் தரும்.
சவால்கள் வரும்
இந்த ஆண்டில் நிறைய சவால்களை எதிர்கொள்வீர்கள். சொந்த வீடு வாங்க முடியாமல் தடைபட்டுக் கொண்டே இருப்பவர்களுக்கு இந்த ஆண்டில் வீடு வாங்கும் யோகம் உண்டாகும். சொத்து தகராறுகள் பரிபூரணமாக நீங்கும். பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என எல்லோருக்கும் நிறைய வாய்ப்புகள் வரும். வெளிநாட்டில் படிப்பது, ஸ்காலர்ஷிப் கிடைப்பது போன்ற அமைப்புள்ளது. முயற்சி செய்தால் கட்டாயம் வெற்றி பெறும் யோகம் உண்டு.
வெளிநாடு வாய்ப்பு
வெளிநாடு செல்லும் யோகம், வான்வழிப் பயணம் மேற்கொள்ளும் அமைப்பு உள்ளது. உங்கள் ஆசைகள், இலக்கை அடைய கடின உழைப்பு, முயற்சியை போட வேண்டியதிருக்கும். மன உறுதி உங்களுக்கு அதிகரிக்கும். உங்களுடைய பலம் உங்களுக்குத் தெரியும். பிள்ளைகளுக்கு நல்ல படிப்பு கிடைக்கும். மகள்களுக்கு திருமணம் செய்து வைப்பீர்கள். சுபவிரயங்கள், சுப செலவுகளளை செய்து மகிழ்வீர்கள்.
கனவுகள் நிறைவேறும்
கொடுத்த வாக்குகளை நிறைவேற்றும் யோகம் உண்டு. பிறருக்காக உழைக்கும் அமைப்பு உண்டு. மிகச்சிறந்த மாற்றத்தையும், திருப்பத்தையும் தரக்கூடிய ஆண்டாக இருக்கும். வைகாசி மாதத்திற்குப் பிறகு 4 ஆம் இடத்தில் குரு உச்சமடைவதால் உங்களுடைய நீண்ட கால கனவுகளை நிறைவேற்றுவீர்கள். தொழில் தொடங்கி அதில் வெற்றி பெறுவீர்கள். மனதிற்குப் பிடித்த வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள்.
குரு பார்வை
கொடுக்கல் வாங்கலில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். மறுமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். குரு 10 ஆம் இடத்தைப் பார்ப்பதால் இந்த வருடத்தில் புதிய பட்டம், புகழ், பெயர் கிடைக்கும் யோகம் உண்டு. நிறைய பயணங்களை மேற்கொள்வீர்கள். வீட்டிற்குத் தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். வீடு, நிலம், கல்வி என்று அற்புதமான யோகங்கள் இந்த ஆண்டில் உள்ளது.
-
தங்கத்தை அடகு வைத்து.. அந்த பணத்தில் புதிதாக தங்கம் வாங்கலாமா? மிக ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன் -
Thaai Kizhavi OTT: சொன்ன தேதிக்கு முன்பு ஓடிடியில் வந்த தாய் கிழவி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு! ட்விஸ்ட் -
வேட்பாளர் லிஸ்டில் பெயர் இல்லை.. அண்ணாமலை இன்று மாலையே முக்கிய மூவ்.. வியந்து போன வானதி.. அசத்தல் -
1988ல் "மக்கள் ஆணையிட்டால்" படத்தில்! விஜயகாந்துக்காக ஸ்டாலின் பாடிய பாடல் இதுதான்! -
கொத்தாக காலியாகும் டெபாசிட்.. தவெக விஜய்க்கு பெரிய சிக்கல்.. 3 பெரிய சர்வேவில் இருக்கும் வார்னிங்! -
திசைமாறிய திருமாவளவன்.. திடீரென தேர்தல் ‘ரிவர்ஸ்’ கியர்.. அப்செட்டான திமுக! இதான் ரியல் காரணம்? -
மகளிர் உரிமை தொகை ரூ.2 ஆயிரம், ரூ.8,000 கூப்பன் வாக்குறுதிகள் என்னை கவர்ந்தது.. நடிகை ரோகிணி! -
ராஜ்யசபா எம்பி சீட் தருவதாக கூறி ஏமாற்றியவர் எடப்பாடி பழனிசாமி! ஆதாரத்தை காட்டி பிரேமலதா விமர்சனம் -
திமுக கூட்டணியின் 'பவர் மேக்னட்' ஆன பிரேமலதா.. ஸ்டாலினின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. என்ன நடந்தது? -
“எங்கள் கைதியாக இருப்பதே உங்க பையனுக்கு பாதுகாப்பு!” அமெரிக்க விமானியின் தாய்க்கு ஈரான் மெசேஜ் -
அறிவார்ந்த அரசியல்வாதி.. சுந்தர்.சி-யால் பயத்தில் இருக்காரு.. பிடிஆரை சீண்டும் பாஜக நிர்வாகி குஷ்பு! -
Tata: டாடா அறக்கட்டளையிலிருந்து விலகினார் "டிவிஎஸ்" வேணு சீனிவாசன்! பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications