தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு

Subscribe to Oneindia Tamil

தமிழ் புத்தாண்டு ராசி பலன்: ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. பராபவ ஆண்டு என்று அழைக்கப்படும் இந்த ஆண்டானது 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை வருவதாகும். இந்த காலகட்டத்தில், சனி குரு திரிகோணத்தில் இணைவது என்பது 32 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழும். குருவுக்கு சக்தி கொடுப்பது போல சனி திரிகோணத்தில் அமர்ந்திருப்பதால் மிகப்பெரிய அதிர்ஷ்டங்கள் உண்டாகும். இந்த காலகட்டத்தில் மேஷ ராசியினருக்கு ஏற்படப் போகும் நன்மைகள், படிப்பு, தொழில் எப்படி இருக்கும் என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

மேஷம் ராசி பலன்

மேஷ ராசியினருக்கு அதிர்ஷ்டங்கள் தேடி வரும் காலகட்டமாக இருக்கும். வீடு, நிலம், வாசல், சொத்துகள் தொடர்பான விஷயங்களில் அபரிமிதமான லாபம் உண்டாகும். 4 ஆம் இடத்தில் குரு வந்து அமர்ந்து, திரிகோணத்தில் சனி அமைவதால் மிகப்பெரிய யோகம் உண்டாகும். நிலம் வாங்கினால் இரட்டிப்பு லாபம் கிடைப்பது, வீடு கட்டுவதால் நிறைய சுப விஷயங்கள் நடப்பது போன்ற யோகம் நிறைந்த காலகட்டமாக இருக்கும்.

tamil-puthandu-palan-what-kind-of-benefits-will-get-mesham-rasi-people-during-this-tamil-puthandu

திருமண யோகம்

மாணவர்கள் நன்றாகப் படிக்கும் காலகட்டமாக இருக்கும். ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் நல்ல முன்னேற்றங்கள், அனுகூலம் ஏற்படும். புதிதாக வீடு கட்டிச் செல்பவர்களுக்கு அக்டோபர் மாதத்திற்குப் பிறகு திருமண யோகம் உண்டாகும். பூர்வீக நிலம், பூர்வீக இடம், பூர்வீகக் கோயில்களுக்குச் சென்று திருமணம் செய்யும் யோகம் உண்டாகும்.

வீடு வாங்கும் யோகம்

குழந்தைகளுக்கு அக்டோபர் முதல் ஜனவரி மாதம் வரை மொட்டை போடும் யோகம் உண்டாகும். நீர்நிலைகள் அருகே அமர்ந்திருக்கும் பகுதிகளில் இடங்கள் உங்களுக்கு அமையும். இடம், பொருள், வீடு, தோட்டம் வாங்கும் யோகம் உண்டு. நீர்நிறைந்த பகுதிகளில் தோட்டம் அமையும். வசதியான பகுதிகளில் வீடு கட்டும் யோகம் உண்டாகும்.

நீட் தேர்ச்சி

மேஷ ராசியில் பிறந்த மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் யோகம் உண்டு. வேலையில் நெருக்கடி, பாதிப்புகளைச் சந்தித்து வருபவர்களுக்கு இடமாற்றம் உண்டாகும், வேலை மாற்றம் உண்டாகும். தொழில் மாற்றம் ஏற்படும். ஊர் மாறும், நிலம் மாறும், வீடு மாறும் யோகம் உண்டாகும். வெளிநாட்டில் இருப்பவர்கள் இந்தியாவுக்கு வரும் யோகம் உண்டாகும்.

தொழில் தொடங்கும் யோகம்

புதிதாக தொழில் ஆரம்பிப்பதற்கான யோகம் உண்டாகும். நிறைய பேர் விவசாயப் புரட்சி செய்வதற்கான வாய்ப்பு ஏற்படும். பெண்களுக்கு நல்ல மாற்றங்கள் ஏற்படும். திடீரென நல்ல வாய்ப்புகள் வந்து சேரும். பெண்களுக்கு சாதகமான ஆண்டாக இருக்கும். ஆண்களுக்கு இடமாற்றத்துடன் சேர்ந்த பெரிய வளர்ச்சி ஏற்படும். உச்ச ஸ்தானம் பெறக்கூடிய குருவால் புதிய நபர்களின் சந்திப்பு உண்டாகும். புதிய நபர்களால் ஒத்துழைப்பு கிடைக்கும்.

ஆதாயம், அனுகூலம்

நிறைய வேலைகளைச் செய்வதற்கான அமைப்பு உண்டு. 2026 ஜூன் மாதம் முதல் 2027 ஜூன் மாதத்துக்குள் எல்லா விதமான நல்ல விஷயங்களும் உங்களுக்கு நடக்கும். விரயத்தில் சனி வரும்போது மாத்திரை செலவுகள் அதிகமாக இருக்கும். இந்த ஆண்டு சதயம் நட்சத்திரத்தில் ஆரம்பிக்கிறது. லாப ஸ்தானத்தில் ராகு அமர்ந்திருக்கிறார். இதனால், வேறு மொழி பேசும் நபர்களின் மூலமாக ஆதாயம் உண்டாகும். பாசிட்டிவான ஆண்டாக இருக்கும். விட்டமின் குறைபாடு, தோல் பிரச்சனை, பெரியவர்களுக்கு மார்பகம், நெஞ்சகம் சார்ந்த பகுதிகளில் கட்டிகள் வருவதற்கான வாய்ப்புள்ளதால் கவனம் தேவை.

பணவரவு

கையிருப்பு பணம் அதிகமாக இருக்கும் காலகட்டம். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மாணவர்களுக்கு படிப்பில் நல்ல முன்னேற்றண் ஏற்படும். நதிப் பகுதிகளில் இருக்கும் தெய்வங்கள், ராகவேந்திரர் சுவாமி வழிபாடு செய்வது நல்ல மாற்றத்தைக் கொடுக்கும். ரிஷி, முனி, சந்நியாசிகளை வழிபாடு செய்வது ஏற்றத்தைக் கொடுக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+