Tamil Puthandu Palan: துலாம் ராசிக்கு அஷ்டலட்சுமி கடாட்சத்தால் வரும் ராஜயோகம்.. சொத்துகள் வாங்கும் யோகம்

Subscribe to Oneindia Tamil

Tamil Puthandu Palan: தமிழ் புத்தாண்டான பராபவ ஆண்டு பிறந்துள்ளது. கிருஷ்ணபட்சத்தில் துவாதசி திதியில், சதயம் நட்சத்திரத்தில் இந்தப் புத்தாண்டு பிறந்துள்ளது. இந்த தமிழ்ப் புத்தாண்டு துலாம் ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும், கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

பரிவர்த்தன யோகத்தோடு உருவாகியுள்ள இந்த தமிழ் புத்தாண்டில் பல்வேறு யோகங்கள் கண்டிப்பாக கிடைக்கும். வரும் குருப்பெயர்ச்சியின் மூலமாக குரு பகவான் உச்சமடைவதால் நடுத்தர குடும்பத்தினருக்கு பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படும். பொருளாதார முன்னேற்றங்கள் நல்லவிதமாக இருக்கும். ஆக்கப்பூர்வமான நன்மைகள் கிடைக்கும் அற்புதமான ஆண்டாக இருக்கும்.

Tamil puthandu palan Thulam lucky zodiac sign

குரு பகவான் வீட்டில் புதன் பகவானும், புதன் பகவான் வீட்டில் குரு பகவானும் இருப்பதால் சரளமான வகையில் சிறப்பு, உத்தியோகத்தில் நல்ல பொறுப்பு கிடைக்கும். ஏழ்மை விலகி செல்வாக்கு அடையும் சிறந்த ஆண்டாகும். மழைப்பொழிவு நன்றாக இருக்கும். விளைச்சல் அதிகமாக இருக்கும். பசுக்கள் நிறைய பாலை கொடுக்கும். உரத் தொழிற்சாலைகள் நம் நாட்டிலேயே அதிகளவில் உற்பத்தி செய்யப்படும்.

விவசாயிகளுக்கு நிறைய சலுகைகள் கிடைக்கும். காப்பீடில் நிறைய மாற்றம் ஏற்படும். மகசூல் நன்றாக இருக்கும். அந்த வகையில், இந்த தமிழ்ப் புத்தாண்டில் துலாம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

துலாம் ராசி பலன்கள் (Thulam Rasi Palangal)

12 ராசிகளில் கோச்சார கிரகங்கள் பெருமளவு சாதகமாக இருப்பது துலாம் ராசியினருக்கு தான். குரு பகவான் 10 ஆம் இடத்தில் உச்சத்தில் வரப்போகிறார். தொழில் அமைப்புகளில் மிகப்பெரிய சிறப்புகள் ஏற்படும். தமிழ் புத்தாண்டு முழுவதுமே 6 ஆம் இடத்தில் சனி இருப்பதால் கடன், நோய், பகை, எதிரி இல்லாத நிலைமை உண்டாகும். குடும்பத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அமைதியான சூழல் ஏற்படும். 80 சதவீதம் நல்ல பலன்கள் உங்களுக்கு கிடைக்கும்.

அஷ்டலட்சுமி கடாட்சம்

ராசியாதிபதி சுக்கிர பகவான் சப்தம ஸ்தானத்தில் இருப்பதால் சத்தமில்லாமல் வெற்றிகளைக் குவிக்கும் யோகம் உண்டு. சனி பகவான் 6 ஆம் இடத்தில் சாதகமாக இருப்பதால் அஷ்டலட்சுமி கடாட்சம் உண்டாகும். கஷ்டங்கள் எல்லாம் விலகி அதிர்ஷ்டம் நிறைந்த காலகட்டமாக இருக்கும். அடமானம் வைத்த தங்க நகைகள், சொத்த பத்திரங்களை மீட்டெடுக்கக் கூடிய நிலைமை ஏற்படும்.

சொத்துகள் வாங்கும் யோகம்

புதிய சொத்துகளை வாங்கக்கூடிய அமைப்பு உள்ளது. குரு உச்சமடைவதால் நல்ல அமைப்புகள் உண்டு. 6 இல் சனி இருப்பதால் மனப்போராட்டம், உடல் ரீதியான போராட்டம், சிந்தனைப் போராட்டம் அனைத்தும் நீங்கி வெற்றி பெறுவீர்கள். நல்ல மனிதர்களின் சந்திப்பு, புகழ்பெற்றவர்களின் சந்திப்பு அவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும் காலகட்டமாக இருக்கும்.

கிரகப் பெயர்ச்சி

குடும்பத்தில் மனைவிக்கு தேவையானவற்றை நிறைவேற்றும் அமைப்பு உண்டு. எதிரிக்கு கூட நல்லது செய்யும் தயாள குணம் வாய்ந்த உங்களுக்கு 6 ஆம் இடத்தில் சனி இருப்பதால் அற்புதமான யோகம் ஏற்படும். குரு பகவான் மாறி வந்தாலும் யோகாதிபதிகளின் நட்சத்திரத்தில் பயணிப்பதால் நல்ல நன்மைகள் ஏற்படும். குருப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி நன்றாக இருக்கும்.

இடம் வாங்கும் யோகம்

இடம் வாங்கும் யோகம் உண்டு. சாதாரண நிலையில் இருந்து உன்னத நிலைக்குச் செல்வீர்கள். வாழ்க்கைத் தரம் உயரும். பிரகாசமான மாற்றங்கள் ஏற்படும். இந்தப் புத்தாண்டு உங்களுக்கு ராஜ யோகத்துடன் தொடங்குகிறது. நீண்ட கால கனவுகள், ஆசைகள் நிறைவேறும் புத்தாண்டாக இருக்கும். நோய், எதிர்ப்பு, கடன், வியாதியால் எந்த பாதிப்பும் இருக்காது. நரசிம்மர் வழிபாடு உங்களுக்கு அற்புதமான ஏற்றத்தையும், வளர்ச்சியையும் ஏற்படுத்தும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+