Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சார்வரி தமிழ் வருடத்தில் ராகு கேதுவினால் எந்த ராசிக்காரர்கள் ஹெல்த்தை கவனிக்கணும்

மிதுனம் ராசியில் ராகுவின் சஞ்சாரத்தினால்தான் கொரோனா வைரஸ் பரவ காரணம் என்றும் இன்றும் சில மாதங்களில் ராகு கேது பெயர்ச்சி நிகழும் போது கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டு விடும் என்றும் ஜோதிடர்கள் கூறியுள

Subscribe to Oneindia Tamil

சென்னை: சார்வரி தமிழ் புத்தாண்டு வரும் ஏப்ரல் 14ஆம் தேதி 2020, செவ்வாய்கிழமை பிறக்கிறது. இந்த சார்வரி வருடத்திற்கு தமிழில் வீறியெழல் என்று பெயர். உலகமே கொரோனா வைரஸ் பீதியில் இருக்கிறது. வைரஸ் பரவ காரணம் காற்று ராசியான மிதுனத்தில் ராகு பகவான் தனது சுய நட்சத்திரமான திருவாதிரையில் சஞ்சரிப்பதுதான் என்று ஜோதிடர்கள் தெரிவித்துள்ளனர். மருத்துவ உலகம் இரவும் பகலுமாக கொரோனா வைரஸ்க்கு எதிரான போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறது. நோய் பரவாமல் தடுப்பதில் ஒவ்வொரு தனி மனிதர்களுக்கும் பொறுப்புணர்வு இருக்கிறது. பிறக்கப்போகும் சார்வரி வருடத்தில் ஆரோக்கிய குறைபாட்டினால் யாருக்கு மருத்துவ செலவுகள் வரும் யாரெல்லாம் மருத்துவ செலவுகளில் இருந்து தப்பிக்கலாம் என்று பார்க்கலாம்.

திருக்கணிதப்பஞ்சாங்கப்படி ஆண்டு பிறக்கும் போது மேஷத்தில் சூரியன், ரிஷபத்தில் சுக்கிரன், மிதுனத்தில் ராகு, மீனம் ராசியில் புதன், மகரத்தில் செவ்வாய்,குரு, சனி, தனுசு ராசியில் சந்திரன் கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. ராகு கேது பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கப்படி நிகழ உள்ளது. ராகு ரிஷபத்திற்கும் கேது விருச்சிகத்திற்கும் மாறுகிறார்.

சத்தான உணவுகளை சாப்பிட்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொண்டாலே எந்த நோய் வந்தாலும் எதிர்த்து போரிடலாம். இந்த சார்வரி தமிழ் புது வருடத்தில் யாருடைய ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். யாரெல்லாம் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும் என்று பார்க்கலாம்.

மேஷம்

மேஷம்

மேஷம் ராசிக்காரர்களே, இப்போது ராகு உங்க ராசிக்கு மூன்றாம் வீட்டிலும் கேது ஒன்பதாம் வீட்டிலும் சஞ்சரிக்கிறார்கள். உடல் ஆரோக்கியமாகவும் உற்சாகமாகவும் இருக்கிறது. உங்களுடைய ராசிக்கு மூன்றாம் வீட்டிற்கு குருவின் பார்வை கிடைக்கிறது. இந்த மாத இறுதியில் குரு அதிசாரமாக மகரம் ராசிக்கு செல்கிறார். ராகுவிற்கு குருவின் பார்வை கிடைப்பதில் தடை ஏற்படும். சார்வரி புதுவருடம் இன்னும் சில வாரங்களில் பிறக்கப் போகிறது. திருக்கணித பஞ்சாங்கப்படி புரட்டாசி மாதம் ராகு கேது பெயர்ச்சி நிகழப்போகிறது. ராகு உங்க ராசிக்கு 2வது வீட்டிற்கும், கேது எட்டாவது வீட்டிற்கும் வருகிறார். அடுத்த ஆறு மாதத்திற்கு நீங்க உங்க உடல் ஆரோக்கியத்தில கவனமாக இருங்க. இரவு நேரம் அதிகமாக கண் விழிக்காதீங்க அது உங்களுக்கு நல்லதில்லை. ஏதோ ஒரு குறை இருக்கிறதே என்ற கவலையும் பதற்றமும் ஏற்படும். ராகு காலத்தில் துர்க்கை அம்மனை வணங்குங்க நல்லதே நடக்கும். ஆயுள் ஸ்தானத்தில் இருக்கும் கேது பல அற்புதங்களை நிகழ்த்துவார். மருத்துவ செலவுகளுக்கு இன்சூரன்ஸ் போட்டு வச்சிக்கங்க.

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே, பலமுறை தடுக்கி விழுந்து இப்போதுதான் நிமிர்ந்திருக்கிறீர்கள். அஷ்டத்து சனி முடிந்தாலும் சில பாதிப்புகள் தொடரவே செய்கிறது. விகாரி வருடத்தின் இறுதியில் இருக்கிறோம். உங்களுக்கு ராகு கேதுவின் சஞ்சாரத்தை பார்த்தால் ராசிக்கு இரண்டாம் வீட்டில் ராகுவும் எட்டாம் வீட்டில் கேதுவும் சஞ்சரிக்கின்றனர். சர்ப்ப கிரகங்கள் புரட்டாசி மாதம் வரை இதே நிலையில்தான் நீடிக்கும். நேரத்திற்கு சாப்பிடுங்க. நெருங்கியவர்களாலேயே உங்களுக்கு உடல் நல பாதிப்புகள் வரலாம். அலைச்சலும் அதனால் மன உளைச்சலும் ஏற்படும். கொரோனா வைரஸ் தொற்று நோய் குறித்த அச்சம் நிலவும் இந்த சூழ்நிலையில் மன அமைதியும் தியானமும் நன்மை தரும். மருத்துவ செலவுகளில் இருந்து தப்பிக்கலாம்.

மிதுனம்

மிதுனம்

மிதுனம் ராசிக்காரர்களே ஏற்கனவே ஜென்ம ராகு மனதிலும் உடலிலும் ஒருவித சஞ்சலத்தை ஏற்படுத்தும். அதே நேரத்தில் இப்போது அஷ்டமத்து சனி வேறு ஆட்டிப்படைகிறது. குருவும் அதிசாரமாக அஷ்டமத்தில் அமரப்போகிறார் எதற்கும் எச்சரிக்கையாகவே இருங்கள். உங்க ஆரோக்கியத்தில நீங்கதான் அக்கறையாக இருக்கணும். கண்ட நேரத்தில கண்டதை வாங்கி சாப்பிடாதீங்க. தொட்டாலே ஒட்டிக்கொள்ளும் நோய்கள் பரவும் காலம் இருந்து யாரிடம் இருந்து சில அடிகள் தள்ளியே இருங்க. புரட்டாசி மாதத்திற்கு பிறகு ராகு பெயர்ச்சியாகி விரைய ஸ்தானத்திற்கும், கேது பெயர்ச்சியாகி ஆறாவது வீட்டிற்கும் வரைப்போகின்றனர். இதனால் உங்களுக்கு நோய் பாதிப்புகள் இருந்தாலும் அது கட்டுப்படும். நோய் எதிர்ப்பு சக்திகள் அதிகமாகி எதையும் எளிதில் சமாளிக்கும் தெம்பும் தைரியமும் வரும். மருத்துவ செலவுகள் கட்டுப்படும்.

கடகம்

கடகம்

கடகம் ராசிக்காரர்களே, உங்களுக்கு இப்போது கண்டச்சனி நடக்கிறது. குருவும் அதிசாரமாக ஏழாம் வீட்டில் அமரப்போகின்றனர். விரைய ராகு, ஆறாம் இடத்திற்கு கேதுவும் உங்களுக்கு தெம்பை கொடுத்தாலும் வேலைச்சுமை நேரத்திற்கு சாப்பிட முடியாமல் உடல் ஆரோக்கியத்தை கவனிக்க முடியாமல் செய்கிறது. சாப்பாட்டு விசயத்தில கவனமாக இருங்க சர்ப்ப கிரகங்கள் எப்போதுமே கடக ராசிக்கு நன்மைகளைத்தான் செய்யும் என்றாலும் கொஞ்சம் உங்க ஆரோக்கியத்தில நீங்களும் அக்கறை காட்டணும். இல்லாட்டி மருத்துச செலவுக்கு மிகப்பெரிய அளவில் பணத்தை சேமிக்க வேண்டியிருக்கும்.

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசிக்காரங்க இந்த வருஷம் பூராவும் உற்சாமாக இருப்பீங்க. சும்மாவே உங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகவே இருக்கும். மருத்துவ செலவுகள் உங்களுக்கு எதுவும் ஏற்படாது என்றாலும் ஐந்தாம் வீட்டில் இருக்கும் கேதுவினால் வயிறு பிரச்சினை வரலாம் கவனம். ராகுவின் சஞ்சாரம் லாப ஸ்தானத்திலும் வருட பிற்பகுதியில் தொழில் ஸ்தானத்திற்கும் மாறுவதால உங்க நலம் நன்றாக இருக்கும். பணிச்சுமை குறையும் மன அழுத்தமும் குறையும்.

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரங்களே இந்த வருடம் உங்க ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும் காரணம் ராகு உங்க தொழில் ஸ்தானத்திலும் பின்னர் பாக்ய ஸ்தானத்திற்கும் மாறுகிறார். கேது உங்க ராசிக்கு நான்காம் வீட்டிலும் வருட இறுதியில் மூன்றாம் வீட்டிற்கும் மாறுவதால் உடல் வலிமை அதிகரிக்கும் தெம்பும் தைரியமும் கூடும். மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்தால் உங்களின் நோய்கள் படிப்படியாக குறைந்து உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக மருத்துவத்திற்காக செலவு செய்கிறோமே என்ற மன அழுத்தம் நீங்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+