தமிழ் புத்தாண்டு பலன்: கடக ராசிக்கு பிரச்சனைகளுக்கு எண்டு கார்டு.. இனி ஏறுமுகம் தான்
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி சித்திரை 1 ஆம் நாளான தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. இந்தப் புத்தாண்டு மாற்றம் தரும் ஆண்டாக அமைய வேண்டும் என்பதே எல்லோருடைய எண்ணமுமாக இருக்கும். அந்த வகையில், தமிழ் புத்தாண்டில் கடகம் ராசியினருக்கு கிடைக்கப் போகும் நன்மைகள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள், வழிபட வேண்டிய தெய்வம், பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமானது ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் சுப பலன்களையும், அசுப பலன்களையும் ஏற்படுத்தும். ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு பிறக்கவுள்ளது. பிறக்கும் பராபவ தமிழ் புத்தாண்டு சனி மற்றும் குருவின் திரிகோண சேர்க்கையுடன் ஏற்பட்டுள்ளது.

இந்த கிரக நிலையானது 12 ராசிக்காரர்களுக்கும் பல நல்ல மாற்றங்களையும், சவால்களையும் கொண்டுவர உள்ளது. சில ராசிகளுக்கு யோக பலன்களையும், சில ராசிகளுக்கு அசுப பலன்களையும் கொடுக்கும். அந்த வகையில் இந்த தமிழ் புத்தாண்டில் கடகம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
கடகம் ராசி பலன் (Kadagam Rasi Palan)
கடக ராசியினருக்கு சனி பரிபூரணமாக விலகி 9 ஆம் இடத்துக்குச் சென்றுவிட்டது. பெரிய பெரிய பொறுப்புகளுக்கு வரக்கூடிய அற்புதமான காலகட்டமாக இருக்கும். உங்களை பலரும் திட்டியிருப்பார்கள். அவமானப்படுத்தி இருப்பார்கள். பெற்றோர், நண்பர்கள் என யாரும் மதிக்காத, மன உளைச்சலாக இருந்த நிலைமைகள் எல்லாம் மாறும். முன்னேற்றம் தரக்கூடிய காலகட்டமாக இருக்கும்.
மாற்றங்கள் வரும்
பிள்ளைகள் விஷயத்தில் அனுகூலம் ஏற்படும். திருமண யோகம் உண்டாகும். நிறைய கடக ராசியினர் இந்த காலகட்டத்தில் திருமணம் செய்து கொள்வீர்கள். இடமாற்றம், தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம், வியாபார மாற்றம் உண்டாகும். குடும்பத்தை விட்டு பிரிந்து செல்ல முடியாது என்று எல்லாம் யோசிக்காமல் மாற்றங்களை பயன்படுத்திக் கொள்வது நல்லது.
முன்னேற்றம்
முன்னேற்றம் நிறைந்த காலகட்டமாக இருக்கும். ராகு கேது அமைப்பு உள்ளதால் கோளார் பதிகத்தை தினந்தோறும் கேட்பது முக்கியம். ரத்த அழுத்தம், குறை ரத்த அழுத்தம், ஹார்மோன் குறைபாடு, ஹீமோகுளோபின் போன்றவற்றை கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். சர்ப்ப தோஷத்தில் கவனம் தேவை. தந்தை, தாயின் ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்ள வேண்டும்.
பிரிந்தவர்கள் சேரும் யோகம்
இப்போது இருக்கும் நிலைமையில் இருந்து நான்கு மடங்கு முன்னேற்றம் ஏற்படும். துணையின் நீண்ட நாள் கஷ்டங்களை தீர்ப்பீர்கள். விவாகரத்து வரை சென்ற கணவன், மனைவி மீண்டும் சேரக்கூடிய நிலைமை ஏற்படும். குடும்பத்தில் இணக்கமாகப் பேசி ஒற்றுமையைக் கடைப்பிடிப்பது நன்மை பயக்கும். உங்கள் குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையிடுவது, மற்றவர்கள் குடும்ப விஷயத்தில் நீங்கள் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது.
வழிபாடு
தொந்தரவுகள் நீங்கும். பிரிந்த குடும்பத்தினர் மீண்டும் சேரக்கூடிய அற்புதமான காலகட்டம். பொருளாதாரத்தில் ஏற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். கடக ராசியினர் காலஹஸ்தி சென்று வழிபாடு செய்வது அற்புதத்தை ஏற்படுத்தும். மாதத்தில் ஒரு சனிக்கிழமை பிள்ளையார் கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்வது, காரியசித்தி மாலை சொல்வது ஏற்றத்தைக் கொடுக்கும்.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications