தமிழ் புத்தாண்டு பலன்: மீன ராசிக்கு அடிக்கும் லக்கி ஜாக்பாட்.. அஷ்டலட்சுமி கடாட்சம் பெறும் யோகம்
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி சித்திரை 1 ஆம் நாளான தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. இந்தப் புத்தாண்டு மாற்றம் தரும் ஆண்டாக அமைய வேண்டும் என்பதே எல்லோருடைய எண்ணமுமாக இருக்கும். அந்த வகையில், தமிழ் புத்தாண்டில் மீனம் ராசியினருக்கு கிடைக்கப் போகும் நன்மைகள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள், வழிபட வேண்டிய தெய்வம், பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமானது ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் சுப பலன்களையும், அசுப பலன்களையும் ஏற்படுத்தும். ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு பிறக்கவுள்ளது. பிறக்கும் பராபவ தமிழ் புத்தாண்டு சனி மற்றும் குருவின் திரிகோண சேர்க்கையுடன் ஏற்பட்டுள்ளது.

இந்த கிரக நிலையானது 12 ராசிக்காரர்களுக்கும் பல நல்ல மாற்றங்களையும், சவால்களையும் கொண்டுவர உள்ளது. சில ராசிகளுக்கு யோக பலன்களையும், சில ராசிகளுக்கு அசுப பலன்களையும் கொடுக்கும். அந்த வகையில் இந்த தமிழ் புத்தாண்டில் மீனம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
மீனம் ராசி பலன் (Meenam Rasi Palan)
மீனம் ராசியினருக்கு ஜென்ம சனி நடந்து கொண்டிருப்பதால் வயிறு சார்ந்த பாதிப்புகளில் கவனமாக இருக்க வேண்டும். முதுகு, கால், பாதம், நகம் சார்ந்த விஷயங்களில் கவனம் தேவை. உடற்பயிற்சியை தவறாமல் செய்ய வேண்டும் படிக்கட்டுகள், வழுக்கலான பகுதிகளில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நிறைய நன்மைகள் தரக்கூடிய காலகட்டமாக இருக்கும்.
முன்னேற்றம்
வேலை, தொழில், வியாபாரம், படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே அந்நியோன்யம் பெருகும். குழந்தைகளுக்கு நிறைய நல்லவை செய்வீர்கள். சேமிப்புகளைத் தொடங்குவீர்கள். அஷ்டலட்சுமி கடாட்சம் உண்டாகும். வங்கியில் பணத்தை சேமிக்க ஆரம்பிப்பீர்கள். நல்ல நிறுவனத்தில் சிட் போடலாம். அஞ்சலக்ததில் சேமிப்பது ஏற்றத்தைக் கொடுக்கும்.
ஐஸ்வர்யம்
தேர்தலில் நன்மைகள் நடக்கும். பெரிய பொறுப்புகளுக்கு வருவீர்கள். ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆக வேண்டும் என்ற நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். ராசியில் உத்திரட்டாதி நட்சத்திரம் உள்ளது. வேர்வை வரும் அளவுக்கு உழைப்பது, உடற்பயிற்சி செய்வது நன்மையைத் தரும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஜென்மசனியில் நிறைய அதிர்ஷ்டங்கள், ஐஸ்வர்யமும் கிடைக்கும்.
பதவி உயர்வு
படைப்பாளிகல், கலைத் துறையினர், மீடியா துறையினர், காவல் துறையினர், மருத்துவர்களுக்கு ஏற்றம் நிறைந்த காலகட்டமாக இருக்கும். விருதுகள், பாராட்டுகள், அங்கீகாரம் பெறும் யோகம் உண்டு. எல்லா விஷயங்களும் அற்புதமாக இருக்கும். மகான்களுடைய நாம கீர்த்தனை சொல்வது அனுகூலத்தைத் தரும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும்.
வழிபாடு
திட்டமிட்டு செய்யும் காரியங்களில் ஏற்றம் ஏற்படும். கடன்களை அடைக்கும் முயற்சிகளில் ஏற்றம் பெறுவீர்கள். மீன ராசியினர் பழனி முருகரை ராஜ அலங்காரத்தில் தரிசனம் செய்வது அற்புதமான ஏற்றத்தைக் கொடுக்கும். சுப்பிரமணிய புஜங்கத்தைக் கேட்பது, படிப்பது மேன்மையைத் தரும். மாதத்தில் ஒரு வியாழக்கிழமை மகான்கள் வழிபாடு செய்வது நன்மையைத் தரும்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தொழிலில் அடிக்கும் ஜாக்பாட்.. தொட்டது துலங்கும் காலகட்டம் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: ரிஷப ராசிக்கு டும் டும் டும் கன்ஃபார்ம்.. காதல் வாழ்க்கை இனிக்கும் -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு கண்டகச் சனியிலும் திடீர் அதிர்ஷ்டம்.. இதில் மட்டும் கவனம் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அடித்தாடும் மிதுன ராசி.. தடைகள் தவிடுபொடியாகும் -
தமிழ் புத்தாண்டு பலன்: மகர ராசிக்கு தங்கத்தை குவிக்கும் யோகம்.. பேச்சினால் வரப்போகும் கண்டம்.. கவனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: தனுசு ராசிக்கு கூரையை பிச்சுகிட்டு கொட்டும் பணம்.. சொந்த வீடு கன்ஃபார்ம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
Thulam: ஜாவா சுந்தரேஷனாக மாறும் துலாம் ராசி.. பிரகாசமான மாற்றம் காத்திருக்கு -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம்












Click it and Unblock the Notifications