தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தொழிலில் அடிக்கும் ஜாக்பாட்.. தொட்டது துலங்கும் காலகட்டம்
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி சித்திரை 1 ஆம் நாளான தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. இந்தப் புத்தாண்டு மாற்றம் தரும் ஆண்டாக அமைய வேண்டும் என்பதே எல்லோருடைய எண்ணமுமாக இருக்கும். அந்த வகையில், தமிழ் புத்தாண்டில் மேஷம் ராசியினருக்கு கிடைக்கப் போகும் நன்மைகள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள், வழிபட வேண்டிய தெய்வம், பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமானது ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் சுப பலன்களையும், அசுப பலன்களையும் ஏற்படுத்தும். மேஷத்தில் சூரியன் வரக்கூடிய நாளே சித்திரை 1. காலை 8.42 மணிக்கு தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி பிறக்கிறது. பிறக்கும் பராபவ தமிழ் புத்தாண்டு சனி மற்றும் குருவின் திரிகோண சேர்க்கையுடன் ஏற்பட்டுள்ளது.

இந்த கிரக நிலையானது 12 ராசிக்காரர்களுக்கும் பல நல்ல மாற்றங்களையும், சவால்களையும் கொண்டுவர உள்ளது. சில ராசிகளுக்கு யோக பலன்களையும், சில ராசிகளுக்கு அசுப பலன்களையும் கொடுக்கும். அந்த வகையில் இந்த தமிழ் புத்தாண்டில் மேஷம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
மேஷம் ராசி பலன் (Mesham Rasi Palan)
மேஷம் ராசியினருக்கு ஏழரை சனி நடந்து கொண்டிருப்பதால் தினந்தோறும் உடற்பயிற்சி செய்வது ஏற்றத்தைக் கொடுக்கும். நிறைய நன்மைகள் நடக்கும். சுபவிரயங்கள் அதிகரிக்கும். இதுவரை இருந்து வந்த பயம் எல்லாம் போகுமளவுக்கு நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். நல்ல நண்பர்கள் உங்களை சுற்றி இருப்பார்கள். கூட்டுத் தொழிலை ஆரம்பிக்கும் யோகம் உண்டு.
மிஸ் பண்ணிடாதீங்க
இதுவரை வேலைக்குச் சென்று கொண்டிருந்த நீங்கள் சொந்த தொழில் செய்வதற்கான யோகம் உண்டாகும். எங்கு சென்றாலும் எதையாவது யோசித்துக் கொண்டே இருப்பீர்கள். அந்த நிலைமைகள் எல்லாம் இந்த காலகட்டத்தில் நீங்கும். நிறைய பாசிட்டிவான விஷயங்கள் நடக்கும். நிறைய நன்மைகள் நடக்கும் காலகட்டம். இந்த ஆண்டை சரியாகப் பயன்படுத்திக் கொள்வது நன்மை பயக்கும்.
தொட்டது துலங்கும்
தொழில், உத்தியோகம், வியாபாரம், வேலையில், படிப்பில் அற்புதமான முன்னேற்றம் ஏற்படும். செட்டிலாகும் யோகம் உண்டாகும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். தொட்டது துலங்கக்கூடிய நன்மை தரக்கூடிய காலகட்டமாக இருக்கும். குழந்தைகளுக்கு அக்டோபர் முதல் ஜனவரி மாதம் வரை மொட்டை போடும் யோகம் உண்டாகும்.
வீடு கட்டும் யோகம்
நீர்நிலைகள் அருகே அமர்ந்திருக்கும் பகுதிகளில் இடங்கள் உங்களுக்கு அமையும். இடம், பொருள், வீடு, தோட்டம் வாங்கும் யோகம் உண்டு. நீர்நிறைந்த பகுதிகளில் தோட்டம் அமையும். வசதியான பகுதிகளில் வீடு கட்டும் யோகம் உண்டாகும். மேஷம் ராசியினர் திருச்செந்தூர் செல்வது ஏற்றத்தைத் தரும். மாதத்தில் ஒரு வியாழக்கிழமை மகான்களை வழிபாடு செய்வது நன்மை பயக்கும்.
கவனம்
பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். திட்டமிட்டு செய்யும் காரியங்களில் ஏற்றம் பெறுவீர்கள். நிறைய நன்மைகள் கிடைக்கும் நல்ல ஆண்டாக உங்களுக்கு அமையும். நிறைய நன்மைகள் கிடைக்கும் காலகட்டமாக இருக்கும். வயிறு, அடிவயிறு, கழிவுகள், லிவர், கிட்னி, பாதம் வரை பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளதால் கவனம் தேவை.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications